Tuesday, October 24, 2006

ஜோஸ்யம்...!!!!

ஜோஸ்யம்.

இதுகூட கடவுள்போலத்தான் இருக்கிறது.

காரணம்..

கடவுளைப்போல இதையும் நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் மற்றும் நம்பி நம்பாதவர்கள் (காரியம் நடக்கவில்லையென்றால் நம்பாதவர்கள்) மற்றும் நம்பாமல் பின் நம்புகிறவர்கள் (ஜோஸ்யர் சொன்னது நடந்ததனால்) இப்படி பலர் உள்ளனர்.

நான் நம்புகிறேனா....

நம்புகிறேன் என்றே நினைக்கிறேன்.இந்த சந்தேகத்திற்க்குக் காரணம்..நானும் எல்லோரையும் போல கஷ்டம் வரும் போது எத்தை தின்றால் பித்தம் தெளியுமென்று ஓடுகிறேனே...

மற்ற நேரத்தில் லாஜிக் பேசுகிறேன்.

இன்று இந்த சப்ஜெக்டுக்கு காரணம்..நேற்று WWW.குமுதம்.டாட்காமில் ஒரு ஜோஸ்ய வல்லுனரை ரபி பெர்னாட் பேட்டி கண்டதை கண்டேன்.அவர் பெயர்..திரு.ராஜகோபாலன்.

இந்த பேட்டி மட்டும் என்னை கவர்ந்தற்க்கு காரண்ம்.

சாதாரணமாய் பேட்டி என்றாலே பல ஜோஸ்யர்களிடம் ஒன்று..ஒரு டிபென்சிவு (DEFENSIVE) தற்காத்துக்கொள்ளும் நிலை இருக்கும். பதில்கள் அவ்வாறே வரும்.
அல்லது...

ஒரு போலியான எல்லாம் தெரிந்த நிலை இருக்கும். அவரின் பதில்களில் வாய்ஜாலமே மிஞ்சும். கொஞ்சம் பேசினாலே விபரம் பல்லிளிக்கும்.


ஆனால் இந்த மனிதர் மிகவும் தன்னடக்கத்துடன் ரபியின் எல்லா கேள்விகளையும் சிறப்பாக தெளிவாக எதிர்கொண்டார். தெளிவாக எளிமையாக, நிகழ்கால உதாரணங்களுடன் விளக்கினார்.

எதையெல்லாம் ஜோஸயம் செய்ய முடியாது என்று விளக்கினார்.

I AM IMPRSSED..

நீங்களும் அந்த பேட்டியைப் பாருங்களேன்..

இவரை தொடர்புகொள்ள எண்ணுகிறேன். வேறெத்துக்கு..எல்லாம் எதிர் காலம் பற்றி அறியத்தான்..
நல்லதேயே சொல்வார் என நம்புவோமாக...

Tuesday, October 17, 2006

முன்னேற்றம் ....ஓரு கேள்விக்குறி!!!



சென்ற வாரம் சென்னை சென்றிருந்தேன்...

என்ன...கவிதை போல் இருக்கா..பரவாயில்லை..தொடர்ந்து படிங்க.

.சோகமான உண்மைகள் இவை...


ரொம்ப நாளைக்கப்புறம் குடும்பத்தோட வரேன்.

என் பையனுக்கு கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்திருக்கும் சமயம் இது.

ஓம்பது வயசாகிறது.

இந்தியாவைப்பற்றி ரொம்ப சொல்லி..அதன் புகழ் பாடி அழைத்து வந்திருந்தேன்..

அது தவறோ என்று இப்போது நினைக்கிறேன்.

காரணம்..நம்து கலாசாரம் ஏர்போர்ட்டிலேயே தடுமாறியது.

வெளியில் வந்து என் வீட்டு காரில் ஏறும்போதே ஒரு கும்பல் எங்களை சுற்றியது.

சார்..டீக்கு ஏதாவது குடுங்க...

குரலில் கொஞ்சம் மிரட்டலே இருந்த்து.
சரியான சாராய நாற்றம்.


"யார் நீங்க...எதுக்கு நாங்க காசு கொடுக்கனும்."எனக்கு எரிச்சலாயிருந்தது.

இது பிச்சை போல தெரியவில்லை..

நள்ளிரவில் நாலுபேர் சுற்றி நின்று மிரட்டும் குரலில் காசு கேட்பது சற்றே அதிகமாய்ப்பட்டது.
நான் இந்த நகரத்திலேயேப் பிறந்த்து வளர்ந்தவன்..

இருந்தும் எனக்கே சற்று அதிர்ச்சியாக இருந்தது.

அப்படியென்றால் புதிதாக வரும் டுரிஸ்டுகளுக்கு....

சொல்லவே வேண்டாம்..

ஏன் இப்படி...!
தமிழனுக்கு தன்மானமே கிடையாதா?

போலிஸ் என்ன செய்கிறது..?

ஏர்போர்டில் பார்கிங் இடத்தில் ஒரு குடும்பத்தை ஒரு கும்பல்
பலபேர் முன்னிலையில் மிரட்ட முடியும் என்றால் தமிழக்கத்தின்
சட்டம் ஒழுங்கைப் பற்றி விவாதிக்க தேவையில்லை.

நான் இருந்த 10 நாட்களில் எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே...

காரணம்..

நான் எதெல்லாம் செய்ய கூடாது என்று சொல்லி என் மகனை வளர்க்கிறேனோ...அதெல்லாம் நம்து சென்னையில் மிகச் சாதாரணமாக நடப்பதை கண்டு என் மகன் குழம்பி போனான்..

1. சொன்னது: எவரிடமும் மரியாதையாக பேச வேண்டும்.

பார்த்தது: ஏண்டா நாயி..சிக்கரமா வண்டிய எடுறா..(சொன்னவர்..ஒரு போலிஸ்..கொடுமை...)

2. சொன்னது: பொது இடங்களில் சத்தமாகப் பேசக்கூடாது..

பார்த்தது: அத்தனைப் பேரும் சததமாகத்தான் கூவுகிறார்கள்..
இந்த லட்சணத்தில் மொபைல் வேறு.
வண்டிக்களின் ஆரன் சத்தம்..
மைக் செட்டில் பாட்டு சத்தம்....

நாம் வசிப்பது ஒரு பெரிய சந்தைகடையிலோ என்றுத் தோன்றுகிறது.
தலைவலி தான் மிச்சம்..


3. சொன்னது: குப்பைகளை பொது இடங்களில் போடக்கூடாது..

பார்த்தது: குப்பை மட்டுமல்ல எச்சில் துப்புவதும் மாறவில்லை..

4.சொன்னது: தாய் மொழியில் பேசுவது முக்கியம்.

பார்த்தது: பொது இடம் மற்றும் தொலைக்காட்சி...எங்கும் தங்கிலிஷ்தான்..
தமிழ் சற்றே அறிந்த என் மகனுக்கு இதனால் தமிழும் புரியவில்லை.

5. சொல்லாது : ஆட்டோ டிரைவர்கள்ப் பற்றி..

பார்த்தது: மிகவும் மோசமான, நாணயமற்ற, கட்டுப்பாடற்ற, பண வெறிபிடித்த,மனிதாபிமானம் இல்லாத ஒரு கூட்டத்தை..

(இந்த வர்ணனை மிகவும் விமர்சிக்கப்படலாம்..அதிகம் என நினைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இது சரியே!)

6. சொல்லாது.: போக்குவரத்து - டிராபிக்..

பார்த்தது: கட்டுப்பாடற்ற, சுயநல்மிக்க, கொஞ்சமும் பொது ஓழங்கு இல்லாத, தற்க்கொலைக்கு சமமான கூட்டு முயற்ச்சி..

இந்த கூட்டு முய்ற்ச்சியில் அரசாங்கம், காவல் துறை மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கு கொள்கின்றனர்..
பாராட்டுக்கள்..


7. சொல்லாதது: தமிழ் தொலைக்காட்சிப்பற்றி: (நாங்கள் இருக்கும் இடத்தில் தமிழ்த்தொலைக்காட்சி கிடையாது).

பார்த்த்து: குத்துப்பாட்டும் கொலைவெறியுமின்றி வேறில்லை.
இந்த கொலைவெறிக் களம் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்வது மிகவும் கொடுமை. இன்னும் நாம் அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களில் பெண்களை மிகவும் கேவலமாக அடிமை போல் காட்டுவது மிகவும் வருத்ததிற்குரியது.

ஒரு தொலைக்காட்சி தொடரில் பெண்மனி ஒருவர் "பளார்" என்று கன்னத்தில் அடிக்கப்பட்டு பின் அந்த செயலை செயதவர் அதை சரியென்று நியாப்படுத்தவேறு செய்கிறார்.

ம்ம்ம்...தொலைக்காட்சியைப்பற்றி எழதினால் நிறுத்தமுடியாது. அவ்வள்வு அநியாயங்கள்..

எனது பயணத்தின் நிறைவாக ஏர்போர்ட் வந்தால்..அங்கு நடந்தவை என் ஏமாற்றத்தை அதிகப்படுத்தியது.

எந்தவித காரணமுமின்றி ஒரு ஏர்போர்ட் காவலர் மிகவும் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டார். அவர் அங்கு பயணிகளின் பாதுகாப்புக்குத்தான் இருக்கிறார் என்பதையே மறந்து அவர் தன்னை சர்வ வல்லமை பொறுந்திய கடவுளாகவே நினைத்துக் கொண்டு பயணிகளை அவமதித்து நடந்து கொண்டார். அவருக்கு ஆங்கிலமும் சரியாக்த்தெரியவிலலை..தமிழ்ம் தெரியவில்லை..கேட்டால் அவர் மத்திய அரசின் காவல் துறையாம். என்ன கொடுமை.

பல நாட்டவரும் வரும் ஒரு பன்னாட்டு விமானதளத்தில் இப்படி ஒரு காவல்.

இதை கண்டபோது எனக்கு, சில மாதங்களுக்கு முன் ஒரு பிரான்சு நாட்டுக்குடிமகனுக்கு நேர்ந்த அவமானங்கள் நினைவுக்கு வந்தது.
அந்த நிகழ்வுக்கு பிறகும் நாம் மாறவில்லை.
எந்த பாடமும் கற்க்கவில்லை.


எனக்கு வெட்கமாக இருந்தது..

நாம் உண்மையாக முன்னேறிவிட்டோமா?

புது புது கார்கள்தான் முன்னேற்றமா?

மொபைல் போன்கள் தான் முன்னேற்றமா?

எல்லோரிடமும் நிறைய பணபுழக்கம் இருக்கிறது.

பண்பு???

நற்பண்புகள் வேண்டாமா?

நற்பண்புகள் புத்தகத்தில் இருந்தால் போதுமா?

எனக்கு வெட்கமாக இருந்தது..
என்னால் இந்த நிலையை என் மகனுக்கு விளக்கமுடியவில்லை.

பேச்சுக்கும் செயலுக்கும், எழத்துக்கும் நிகழ்வுக்கும் உள்ள இடைவெளியை, பொய்மையை என்ன சொல்லி விளக்குவது.?

வேறு வழியின்றி என் திருநாட்டைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டேன்..

நான் இருக்கும் நாடொன்றும் சொர்க்கப்புரியில்லை.

ஆனால் நிச்சயமாக அங்கு மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை.

பொது ஒழுங்கு பேணப்படுகிறது.

நாகரிகம் மிச்சமுள்ளது.

மனிதன் மதிக்கப்படுகிறான்.

பொய்கள் நியாப்படுத்தப்படுவதில்லை.

பணம் மட்டுமே வாழ்க்கையாக் கருதப்படுவதில்லை.

நாம்...........

நாம் மாறுவது எப்போது?
நன்றி...


ரவிக்குட்டி
16/10/09