Monday, February 22, 2010
Wednesday, February 10, 2010
நம்மவரின் வியாபார தெறமை!!!
இது என்னோட புலம்பல்தான்.
நானும் பல வெளிநாட்டு இந்தியரைப் போல இந்தியாவை விட்டு வெளிநாடு வந்து பல வருஷங்களாச்சு.
ஆனா வழக்கமான செய்யவேண்டிய கடமைகளை தவறாது செய்வேன். அதாவது விடாம கணினியில் தமிழ் காமெடி பாக்கிறது. ஜூ.வி. படிக்கிறது. கடைக்கு போய் சி.டி/ட்விடி வாங்கி பார்த்து (குத்து மதிப்பா ஆணா பெண்ணா என்று தெரியும்)பிரிண்ட் மோசம்னு புலம்பறது. காரில் தவறாம தமிழ் பாட்டு போட்டு கேட்பது. ரெண்டு தமிழர் கூடினா இளையராஜாவா அல்லது ரஹமானான்னு பட்டி மன்றம் நடத்தற்து. கடைசில..மெட்ராஸ் வெய்யிலுக்கு ஏங்கறது!!.
அப்புறம் எப்ப சார் ஊருக்கு?
பார்ப்போம். செப்டெம்ரில் போலாம்னு இருக்கேன்..
இப்படி பேசிக்கிட்டு இருந்தவதான். ஆனா சமீபத்தில் ஒரு தவறை செய்தேன்.
இந்தியா இப்ப வளர்ச்சிப் பாதையில வேகமா போய்கிட்டு இருக்குன்னு எல்லா பத்திரிக்கைகளும் எழுதுதா?
சரி.. நாமும் கொஞ்சம் கூட போவோமேன்னு ஒரு வியாபாரம் ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அதான் தப்பா போச்சு.
எனக்கு சில சிநேகிதர்கள் உண்டு. அவர்கள் ஆடை உற்பத்தி தொழில் செய்பவர்கள். அவர்கள் எப்போது பார்த்தாலும்..
"மாப்பிள.. ஆர்டர் பிடிச்சுக்குடு..நல்ல கமிஷன் தரவோம்.
எவன் எவனோ அங்கிருந்து இங்க வந்து ஆர்டர் குடுத்து கமிஷன் வாங்கிறான்.
நீ செஞ்சா என்ன? நாமும் கொஞ்ச்ம் செட்டல் ஆகலாமில்ல"
அப்படின்னு பிட்ட போட்டாங்க.
நானும் நிஜமாத்தான் சொல்றாங்க போலிருக்குன்னு...
"எதுக்குடா யாருக்கோ செய்றீங்க..நம்மளே வெளிநாட்டில் விக்கலாமேன்னு!"
சமிபத்தில் சொன்னேன்.
"ஆஹா..சூப்பர்" அப்படின்னு சொன்னாங்க.
நான் எந்த பொருளை செய்ய சொன்னேன் என்பதை இங்கெ சொல்லவில்லை.
அது ரகசியம்.
ஆனால் நான் ஒரு "மாதிரி" யை கொடுத்து "இது போல செய்யுங்கப்பா" அப்படின்னு கொடுத்தேன்.
செய்றேன்னு சொல்லிட்டு வாங்கிட்டு போனவங்கத்தான்.
புஷ் போய் ஒபாமா வந்து ஒரு வருஷம் கூட ஆகி போச்சு
எப்ப கேட்டாலும்.. "கவலை படாதீங்கன்னா..ரெடியாட்டிருக்கு."
ஒரே பதில்.
ஒரு விஷயத்தை ஒத்துக்கனும். இவங்க பேச்சு மாறவிங்க இல்ல.
எப்போதும் ஒரே பேச்சுத்தான்.
அதாவது "ரெடியாட்டிருக்ங்கண்ணா".
ஆச்சு...வாரா வாரம் என் போன் பில்லு எகிறியதுதான் மிச்சம்.
அவங்க பதில்ல மாற்றமேயில்ல. சரி..ரொமப நாளாச்சேன்னு ஓரு எட்டு நேரா போய் என்னான்னு கேட்கலாமுன்னு போனா...
என்னவெல்லாமோ கதை சொல்றாய்ங்க.
சரின்னு இன்னொரு ஆளை பிடிச்சோம். அவரு ஒரு "மாதிரியை" (சாம்பிள்) பண்ணி காமிச்சாரு. அது நான் குடுத்த மாதிரியை போலவே இல்லை.
பல குறைகள். சரி..முதல் மாதிரித்தானே. பின்னாடி சரி பண்ணிடலாமுன்னு அவர் கிட்ட நான் கண்ட குறைகளை சரி செய்ய சொன்னேன்.
ஆச்சு..மூணு மாசமா ஆளையும் காணும். பேச்சையும் காணும். (அசோகன் வசனம்தான் நினைவுக்கு வருகிற்து...ஷிலா..ஆறு மாசமா ஆளையும் காணும்..அஞ்சு லட்ச ரூபாய் பணத்தையும் காணும்னு..நான் படத்தில் மொட்டைதலையோட சொல்வார்..(எந் தலையும் இப்ப மொட்டைதான்))
இதுக்கு நடுவுல இந்த வியாபார விஷ்யமா சில கணினி நிபுணர்களை சந்திச்சேன். நான்: வெப் சைட் உண்டாக்கனும்.
நம்மாளு: அஹா..சூப்பர்.. செஞ்சுடலாம் சார்.. நான் உங்களுக்கு சில சாம்பிள் காட்றேன். எல்லாம் நம்ம ஆளுங்க செஞ்சதுதான்.(யார் இந்த நம்மாளுங்கறது ஆண்டவனுக்கெ வெளிச்சம்.!)
உங்க வெப்ல ஃப்ளாஷ் போட்டு ஃபோட்டொ ஷாப் போட்டு பகென்டுல எஸ்க்யுல் டாட்ட் பேஸ் வைச்சு செஞ்சுடலாம் சார்...ஒரு விஷ்யம் சார். பட்ஜெட் என்னாசார்.?
நான்: அஹா ..ரொம்ப விஷ்யம் தெரிஞ்சவன் போலிருக்கு. வேலை சுலபமா முடிஞ்சுடும்..அப்டின்னு மன்சுக்குள்ள நினைச்சுகிட்டு என் பட்ஜெட்டை சொன்னேன்.
நம்மாளு: எந்த ஊருக்கு சார் இந்த சைட்?
நான் நாட்டை சொன்னேன்.
நம்மாளு: முடிச்சுடலாம் சார்.
எல்லாம் பேசிட்டு போய் ஒரு வாரம் கழிச்சு தருவதாக சொன்ன எந்த விவரத்தையும் தராமல் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் அட்வான்ஸாக கேட்பார் நம்மாளு.
என்னசார்? அப்படீன்னு கேட்டா..
இமெயில் அனுப்பிச்சேனே கிடைக்கலயா? அப்படின்னு ஒரு பிட்ட போடுவார்.
இமெயில் என்ன இந்திய தபால் துறையா கடிதத்தை தொலைப்பதற்கு?
ஆச்சு..இவரும் இன்னும் நான் கேட்ட விளக்கங்களை தரப் போகிறார்.
இப்படி நம்மூரில் வியாபாரம் செய்ய எவரிடம் தொடர்பு கொண்டாலும் ஒரு
தாமதம். அல்லது தொடர்பு கொள்வதில் ஒரு குழப்பம்.
ஏன்..?
ஆனால் இதே ஆட்கள் வடநாட்டிலிருந்து வருபவரிடமோ அல்லது வெள்ளைக்காரரிடமோ தொங்கோ தொங்கு என்று வியாபாரத்திற்காக தொங்குகிறார்.
அவர்களுக்காக இவர்கள் கடனை உடனை வாங்கி செலவழிக்க தயங்குவதில்ல.
பொருள்களை கடனுக்கு வழங்கிவிட்டு பிறகு காசுக்கு இந்த வடநாட்டவரிடமோ அல்லது வெள்ளைக்காரரிடமோ தொங்குகிறார்கள். அல்லது பல சமயம் ஏமாந்து போகிறார்கள்.
ஏன் இந்த வித்தியாசம்?
யோசித்து பார்த்ததில் ஒன்று விளங்கியது.
இவர்கள் நம்மவர்களை அதிகமாக நம்புவதில்லை.
இரண்டாவது. இவர்களின் மனிதில் தெரிந்தோ தெரியாமலோ வடநாட்டினர் மற்றும் வெள்ளைக்காரர் உயர்ந்தவர் என்கிற மனப்பான்மை ஊறிக்கிடக்கிறது.
(அது அவர்கள் வேற்று மொழி பேசுவதால் கூட இருக்கலாம்.)
மேலும் இதையெல்லாவற்றையும் விட முக்கியமானது. இவர்களுக்கு தொலைநோக்கு பார்வையில்லாததுதான்.
அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் கூலிக்கு என்ன செய்வது.?
ஏதாவது அடிச்சு கொடுத்து காசு பாத்துடனும். அவ்வளவுதான்.
தரத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள கூடாது.
ரெண்டு வருஷம் "எப்படியாவது (இதுக்கு பல அர்த்தங்கள் உண்டு)"
தொழில நடத்தினோமா..காசு பாத்தோமா..ஊர்ல பளபளன்னு ஒரு
வீட்டை கட்டினோமா..சூப்பரா ஒரு ஹோண்ட சிட்டி காரில் போனோமா?
இவ்வளவுதான் இவர்களின் தொலைநோக்கு பார்வை.
பிறகு எப்படி உருப்படும்.
மற்றவருக்காக உழைப்பதே பெரும் புண்ணியம் என்கிற அளவில்தான் இவர்களின் ஆசைகள் இருக்கின்றன.
இவர்களின் சொற்களுக்கும் செயல்களுக்கு இருக்கும் வித்தியாசத்தை பெரிதாக நினைப்பதில்ல.
"வியாபாரத்துல இதெல்லாம் சகஜமப்பா" அப்படின்னு கவுண்டர் பாணியில் சொல்லிவிட்டு போயிகிட்டே இருக்காங்க.
நேரம் தவறாமையை இவர்கள் ஒரு வியாபார உத்தியாக மதிப்பதே இல்லை.
பின்னாடி இருந்து ஒருவர் தார் குச்சி போட்டுகிட்டே இருந்தாதான் பொருளின் தரத்தைப் பற்றி இவர்கள் கவலைப்படுகிறார்கள்.
தெரியாத விஷ்யத்தை தெரிந்ததாக சொல்லிக் கொள்வதில் இவர்கள் மன்னர்கள். அதுவும் ஒரு வியாபார தந்திரமாக நினைக்கிறார்கள்.
அந்த குணம் பின்னாளில் தங்களை பொய்யர்களாக்கும் என்பதில் இவர்களுக்கு அச்சமில்லை. கேட்டா ..இருக்கவே இருக்கு..கவுண்டர் பதில் "வியாபாரத்துல......."..
இந்த குறைகளுக்கு இவர்கள் பல காரணங்களையும் நாட்டில் இருக்கும் நிலைமையும் (ஊழல்,மற்றது..மற்றது..) சொல்வார்கள்.
அதாலொழிய இந்த குறைகளுக்கு தாங்களும் ஒரு காரணம் என்பதை அறவே சொல்ல மாட்டார்கள்.
ஒரு சின்ன உதாரணத்தை சொல்கிறேன்.
சமிபத்தில் ஒரு ஆய்வின் படி உலக அளவில் பின்னலாடை பொருள்களின் விற்பனையில் நாம் வெறும் 2 முதல் 3 சதவிகத்தைதான் உருவாக்குகிறோம்.
நம்மைவிட சிறப்பாக இருக்கும் நாடுகளைப் பார்த்தால்::
முதலிடத்தில் இருப்பது..சொல்லவே வேண்டாம். சைனாதான்.
இரண்டாவது மூன்றாவது...நாடுகளாக பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற மிகச்சிறிய நாடுகள்கூட நம்மைவிட அதிகமாக பின்னலாடையில் ஏற்றுமதியில்
சிறந்து விளங்குகின்றன.
நாம் இன்னும் திருப்பூரின் பெருமையையே பேசிக் கொண்டிருக்கிறோம்.
இந்த திருப்பூரில்தான் நான் ஒரு பின்னலாடை மாதிரியை தயாரிக்க போராடிக் கொண்டிருக்கிறேன்.
காரணம் கேட்டா..
"ஆள் கிடைக்கல சார்".
இந்த திருப்பூரில் இத்தனை ஏற்றுமதியாளர்கள் இருக்கும் இடத்தில் இதுவரை
ஒரு உலகத்தர வாய்ந்த பின்னலாடை பயிற்ச்சிக் கல்லூரி வராரது ஏன்?
நான் சொன்ன பயிற்ச்சி..வடிவமைப்பதில் மட்டுமல்ல..
சாமான்ய தொழிலாளர்களையும் பயிர்பிக்கும் தொழில்கூடம்.
அது இருந்தால் "ஆள் கிடைக்கல சார்" என்கிற பேச்சே வராதே.
இதை ஏன் செய்யவில்லை?
இப்போது பயிர்ச்சி எப்படி தெரியுமா?
முதலில் 13 வயது பையனோ பெண்ணோ படிப்பு வரவில்லை என்றால அல்லது குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு வருவார்.
"பிசிறு வெட்டுமா?"
"எண்ணி கட்டுமா?"
"நூல் கொண்டு குடு"
"மெஷ்னை துடை"
இப்படி தொடங்கி..கொஞ்சம் கொஞ்சமாக தானே பார்த்து கற்றுக் கொள்பவர்கள்தான் பின்னாடி "மிஷ்னிஷ்ட்" என்று "பெருமை"யடைகிறார்கள்.
இவர்களிடம் ஒரு தரக் கட்டுப்பாடு ஆர்வம் இல்லை.மேலும் தரகட்டுப்பாடு வழிமுறை இல்லை. We need a globaly accepted quality control procedure. But it is not there. What ever is there is a custom build version or individual version of quality control which is neither tranfered nor developed further till another major international buyer comes along to move forward.
அப்படி இருக்க இவர்களின் செயல்களில் எப்படி தரக்கட்டுபாட்டை அவர்கள் உணர்வார்கள்.
தாங்கள் எங்கு கற்றோமோ அங்கிருக்கும் நல்லது தீயது எல்லாம் சேர்ந்துதான்
இவர்களின் தொழிலில் தெரியவரும்.
மேலும் ஒருவருக்கு தொழில் தெரியுமா அல்லது தெரியாதா என்பதே முதலாளி அந்த தொழிலாளியை வேலை செய்ய வைத்துதான் உணரமுடியும்?
இது என்ன அவலம்.
என் பல கேள்விகளில் இதுவும் ஒன்று.
பார்ப்போம்.
ஆனால் என் தேடுதல் தொடரும்
Subscribe to:
Posts (Atom)