Sunday, March 02, 2014

தேன் கூட்டில் கையை வைத்தால் ...திருந்தாத உள்ளங்கள்

தேன் கூட்டில் கை வைத்தால் தேனீகள் கடிக்கத்தான் செய்யும்.

கையை வைக்காவிட்டாலும் தேனீ கிட்ட போனால் கொட்டும்.

இது என்ன புதிய விஷயமா என்றால் இல்லை. 

ஆனால் இன்று சவுக்குதளத்தை (www.savukku.net) முடக்க வேண்டும் என்று தீர்பளித்த திரு. சி.டி.செல்வத்திற்கு இது தெரியுமா என்பதில் சந்தேகம் உண்டு.

இவருக்கு தெரியவில்லை என்றால் இவரது அரசியல் குரு திரு.கருணாவிடம் கேட்கலாம். அவர் சுமார் 45 வருடங்களுக்கு முன் செய்த ஒரு தவறால் இன்றளவும் அல்லல் படுவது யாவரும் அறிந்ததே. மன்னிக்கவும். நான் கனிமொழி பற்றி  பேசவில்லை.இது வேறு .

தெரியாதவர்களுக்கு சொல்வோம்.

1970ல் சேலத்தில் நம்ம ஈரோட்டு காரர் (பெரியார்தான் ) ஒரு ஊர்வலம் விட்டார்.அதாவது ஸ்ரீ.ராம நவமி அன்று ராமரை அவமான படுத்துகிறேன் என்று ராமர் படத்திற்கு செருப்புமாலை இட்டு வீதி உலா வந்தனர். 
காரணம் இவர்களாக கண்டு பிடித்த "திராவிட உண்மைகள்".

ராமன் வட இந்தியனாம். ராவணன் திராவிடனாம். (ஆமாங்க..பெரியார் தான் இறக்கும் வரை அதைத்தான் நம்பினார் !).  காமெடி பாருங்க..அவரோட பேரே ராமசாமிதான். 

ராவணன் இவர்கள் மிகவும் வெறுத்த பிராமண வகுப்பை சேர்ந்தவன் என்று கூட தெரியாத அறிவு ஜீவிகள்.  அதை விடுங்க..அது வேற கதை..

அப்படி திராவிடனை (அதாவது ராவணனை ) தோற்கடித்த ராமன் இவர்களுக்கு எதிரியாகி போனான். அதற்காக அவனை அவமானப் படுத்துவதாக நினைத்து 
இவர்கள் இப்படி ஒரு ஊர்வலம் விட்டனர். கூடவே மலையாள கடவுளான ஐயப்பனையும் அவரது பிறப்பு குறித்த சில்லறை சந்தேகங்களையும் பதாகைகளாக எடுத்துக் கொண்டு ஊர்வலம் விட்டனர். இதை இவர்கள் நடத்த துணிந்த காரணம் அன்று இந்த ராமசாமியின் சீடர் நம்ம தமிழ் காவலர் 
கருணாநிதி (இந்த பேரே தமிழ் இல்லை !!!) முதலை அமைச்சராக ...மன்னிக்கவும்  முதலமைச்சராக இருந்ததுதான்.  

இது அன்றும் இன்றும் பெருவாரியான சமூகமான ஹிந்து மதத்தை சேர்ந்த மக்களின் மனதை புண்படுத்தும் என்று அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் என்ன செய்ய நம்ம தமிழ் காவலர் கருணாவுக்கு தெரியாதே..?

ஊர்வலம் நடந்தது. கொஞ்சம் கலவரமும் நடந்தது. ஆனால் அன்று இருந்த தினசரிகள் மற்றும் வாரப் பத்திர்க்கைகள் இதை ஒரு செய்தியாக கூட வெளியிட வில்லை ..காரணம் நம்ம கருணா அன்புடன் (!) கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வைப் பற்றிய புகைப்படங்களும் வெளிவரவில்லை. 

ஆனால் செய்தி கசியத்தானே செய்யும். 

இப்ப வருது நம்ம கருணாவின் 45 வருட தவறு ...

.அப்போது சமிபத்தில் திருவாளர். சோ.ராமசாமியால்  (இவர் பேரும் ராமசாமி ...என்ன ஒற்றுமை !) தொடங்கப்பட்டு மிகச் சிறிய அளவில் பேரு நகரங்களில் மட்டும் சில ஆயிரம் பிரதிகள் விற்றுக் கொண்டிருந்த "துக்ளக் " இதழில் 
இந்த சேலம் சம்பவத்தை புகைப்படங்களுடன் வெளியிட்டனர்.  

இந்த வெளியீட்டை முதல் நாளே தெரிந்து கொண்ட நம்ம கருணா பதறிப் போய்  இதை உடனே ஒரு அவசர  காவல்துறை அறிக்கை மூலம்  இந்த துகளக் இதழை தடை செய்தார்.  அதுவும் சட்டப்படி அல்ல என்பது வேறு விஷயம்.

நல்லா தெரிந்து கொள்ளுங்கள். 

இவர்தான் தன்னை பத்திர்க்கை சுதந்திரத்தின் காவலனாகவும் தானே ஒரு பத்திரிகை (மஞ்சள் பத்திரிக்கையான முரசொலி ) காரன்தான் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்வார். 

அப்படியும் அந்த இதழ் வெளிவந்தது. நாங்களெல்லாம் சுமார் 40 பைசா இதழை  3 ரூபாய் கொடுத்து வாங்கிப் படித்தோம். பார்த்தோம். கருணாவின் தடையால் கருப்பு மார்கெட்டில் இதழ் கூடுதல் விலையில் விற்றதுதான் மிச்சம்.

இன்னொன்றும் நடந்தது.  அதாவது சுமார் 3000 முதல் 4000 பிரதிகள் விற்றுக் கொண்டிருந்த துக்ளக் ஒரே வாரத்தில் 30000 முதல் 40000 பிரதிகள் வரை தமிழகம் எங்கும் விற்கத் தொடங்கியது. சோ.ராமசாமியின் பத்திர்க்கை புகழ் பெருகியது. அவரும் அரசியல் விமர்சன பிரபலமானார். 



இன்று வரை அதே சோ.ராமசாமி இந்த கருணாவை குளவி போல கொட்டிக் கொண்டே இருக்கிறார். கருணாவால் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய் இதை சகிக்க வேண்டியுள்ளது.  

அன்று இவர் சும்மா விட்டிருந்தால் அந்த துக்ளக் இதழ் அடுத்து சில வாரங்களில் நட்டத்தின் காரணமாக இழுத்து மூடப்பட்டிருக்கும். 
இதைத்தான் இவரது 45 வருட முந்தய தவறு என்றேன். 

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் நட்டத்தில் மூட வேண்டிய ஒரு மாதமிருமுறை இதழை பிரபலபடுத்தி லாபகரமாக்கிய புண்ணியவான் நம்ம கருணா. இதற்க்கு நன்றிக் கடனாய் துக்ளக் அலுவலகத்தில் கருணாவின் வைக்கப்பட்டுள்ளதாய் கேள்வி ..

இப்போ 45 வருடம் கழித்து சரித்திரம் மீண்டும் கருணாவை பார்த்து சிரிக்கிறது ."இன்னுமாடா நீங்களெல்லாம் திருந்தலை" என்பது போல் உள்ளது இந்த சிரிப்பு.

அதே கருணாவின் மகள் கனிமொழி சம்பந்தப்பட்ட ஒலிநாடாவை வெளியிட்ட காரணத்தால் கருணா கொலை வெறி ஆத்திரம் கொள்கிறார் . 

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அல்லவா ..?
மீண்டும் அதே கருணாவின்  தூண்டுதலால் இன்று இந்த வீணாய் போன நீதிபதி செல்வம் சவுக்கு தளத்தை சட்டத்தின் வரை முறையை தாண்டி முடக்குகிறார் .

என்ன நடக்கும் ?.....வெறும் 16 லட்சம் பேர் (படித்தவர்கள் மற்றும் கணினி அறிந்தவர்கள் ) மட்டும் பார்த்து கொண்டிருந்த இந்த தளம் இன்று அகில இந்திய அளவில் அகில உலக அளவில் புகழ் பெறுகிறது..

தேவையா ...கருணா...எத்தனை முறை பாடம் புகட்டினாலும் புரிந்து கொள்ளவே மறுக்கிறீர்களே...ஒ...இதுதான் உங்கள் பகுத்தறிவோ ...