Sunday, January 28, 2007
குடியாட்சியா...முடியாட்சியா..
மக்களாட்சி...மன்னராட்சி...
நமது இந்தியாவில்
இருப்பது மக்களாட்சியா...இல்லை என்றே தோன்றூகிறது..
இன்று நாட்டில் நடக்கும் அநியாங்களை பார்த்து இதை கூறவில்லை..
பொதுவாக நம்நாட்டில் இப்போது உள்ள கட்சி நிலவரங்களை பார்த்துதான் இப்படி தோன்றுகிறது.
அநியாயங்கள் எல்லாவித ஆட்சியிலும் இருந்துவந்திருக்கிறது.
ஆனால் அது நடக்கும் முறைதான் மாறியிருக்கிறது.
எனவே அதைப்பற்றி இப்போது விமர்சிப்பதை தவிர்ப்போம்.
நிகழ்கால அரசியிலில் உள்ள பம்மாத்துகளை நினைத்தால்தான் மிகவும் வேதனையாக உள்ளது.
மக்களாட்ச்சி என்கிறார்கள்.
ஆனால் சுதந்திரத்திற்க்குப் பிறகு ஒவ்வொரு கட்சி தலவரும் தங்கள் வாரிசுகளுக்கு முடிசூட்டவே முனைந்திருக்கிறார்கள்.. அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இந்த நல்ல காரியத்தை முதலில் தொடங்கி வைத்தப் புண்ணியம் நமது பாரம்பரியமிக்க, ஜனநாயகத்திற்காக போரடிய காங்கிரசுக்கு உரியது.
என்ன விந்தையான நிலை!!!
நேரு...--- இந்திரா -- ராஜீவ்..--- சோனியா---ராகுல்...(முடிந்த்தால் பிரியங்கா)..
இதன் இன்னோரு பக்க கிளை.. சஞ்சய்...மேனகா... வருண்...(இவரது வாரிசின் பெயர் இன்னும் பிரபலமாக வில்லை).
கம்யுனிஸ்டு மற்றும் பா.ஜ.காவை தவிர அனத்து கட்சியினரும் மேற்ப்படி வழியினை மாறது தொடர்கின்றனர்.
இந்த அநியாயம் எல்லா மாநிலத்திலும் நடக்கிறது.
இன்னும் ஒருபடி மேலே போய் சில கட்சித் தலைவர்கள் தங்கள் மாநிலத்தை தங்கள் வாரிசுகளுக்காக அரசியலமைப்பிற்கு வெளியே பிரித்துக் கொடுத்துள்ளனர்.
உதாரணம்: தமிழகம்...
கலைஞர் மதுரைக்கு தெற்கே தன் மகன் அழகிரியை பட்டம் சூட்டாத இளவரசாக இயங்கவிட்டுள்ளார். மதுரைக்கு வடக்கே இருக்கவே இருக்கிறார்..நமது தளபதி..(Prince in Waiting!!).. அரசு இயந்திரம் இதற்கு துணை போவது மிகவும் கேவலம்.. இது தவிர வளர்ந்து வரும் வாரிசு கனிமொழிக்கு என்ன தருவாரோ?
இவர்கள் எல்லாம் ஒரு சிற்றரசர்கள் போலவே நடந்துகொள்கிறார்கள்..மாதாமாதம் கட்சிக்கு நிதி (முந்தையகாலத்து கப்பம்!!) திரட்டுவதிலிருந்து..தலைவர் வந்தால் நடத்தப்படும் விழா வரையில் எல்லாமே மன்னராட்ச்சி போலவே உள்ளது. அதுவும் மேடையில் அணிஅணியாக வந்து காலில் விழுவதை காணும் போது முந்தைய காலகட்டத்தில் பேர்ரசரை சிற்றரசர்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்று தெளிவாகிறது. உதாரணம்: இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ இந்தியா வந்தபோது எடுக்கப்பட்ட ஆவணப்படம்...
இந்த அவலம் தென்மாநிலங்களில் மட்டுமின்றி வடமாநிலத்திலும் பரவாலாக உள்ளது.
ஏன் இந்த நிலை. ?
படித்தவரும் இதற்க்கு துணைபோவதேன்..?
திமுகவில்---கலைஞர்...ஸ்டாலின்.தயாநிதிமாறன்..அழகிரி...கனிமொழி..இன்னும்..உதயநிதி..ம்ம்ம்..
அதிமுக...கேட்கவே வேண்டாம்..சசிகலா..மற்றும் உறவினர்கள்...
ப.ம.க... ராமதாஸ்...அன்புமணி...மற்றும்..உறவினர்கள்..
ஆந்திராவில்.. ராமாராவுக்கு பிறகு அவர் மருமகன்..
கர்நாடகாவில்..தேவகவுடா மகன் குமாரசாமி..பங்காரப்பாவிற்கு பிறகு அவர் மகன்.
கேரளாவில்..அந்தோணிக்கு பிறகு மகன் மற்றும் மருமகள்...
மத்தியப் பிரதேசத்தில் கேட்கவே வேண்டாம்..சிந்தியா குடும்பத்தினர்.மற்றும் அர்ஜூண் சிங் குடும்பத்தினர்.
பிகாரில் நமது லல்லு குடும்பத்தினர்..
மகாரஷ்ஷிடரத்தில்..பால்தாக்கரேயின் குடும்பம்..மற்றும் இப்போது வளர்ந்து வரும் சரத்பவார் வாரிசுகள்
ஜம்மு கஷ்மிரில் முப்திமுகமது குடும்பத்தினர்..
என்ன அநியாம் இது.
மேலும் இந்த அவலம் இப்போது நியாயப்படுத்தப்பட்டுவிட்டது.
எந்த ஜனநாயக்கத்திற்க்கு இது எதிரானதோ..அந்த ஜனநாயக்கதின் பேரிலேயே இந்த வாரிசுமுறை நடத்தப்படுவது இன்னும் கொடுமை.
இது மிகவும் தவறு.
இது ஜனநாயக்கத்தின் அஸ்திவாரத்திற்க்கே வைக்கப்பட்ட வெடி..இதுபோன்ற முறை தவறிய வழியில்தான் அனைத்து சர்வாதிகாரர்களும் அரங்கேறுகிறார்கள்..இதறகு உலகச்சரித்திரத்தில் அனேக உதாரணங்கள் உண்டு.
இந்தியாவின் 120 கோடி மக்களில் ஒரு 100 குடும்பத்தினரை தவிர மற்றவரகளுக்கு அட்சி செய்ய உரிமை இல்லையா..
அப்படியென்றால் இந்த அரசியலமைப்பின் பெயர் என்ன?
இந்த இந்திய நாட்டு மக்களின் அறிவு மற்றும் தன்மானம் கேள்விக்குறியாதாகிறது.
இப்போதும் காலம் கடக்கவில்லை..
வாரிசுகளின் கட்சிகளை நிராகரியிங்கள்..
உண்மையான ஜனநாயகம் மற்றும் உடகட்சி ஜனநாயகம் இருக்கும் கட்சியினை ஆதரியிங்கள்..
இப்பொழுது இதை செய்ய மறுத்தால் அல்லது மறந்தால் எதிர்காலம் நம்மை மோசமாக தண்டிக்கும்.
Ravikutty!
30/03/2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment