இந்த கட்டுரைக்கு இரண்டாம் பகுதி எழுத தொடங்குவதற்கு முன்பு வலைத்தளத்தில் இதன் தொடர்பாக ஒரு கட்டுரையைக் கண்டேன்.
அந்த கட்டுரை என் எழுத்தைவிட ஆழமாகவும் நிறைய புள்ளிவிவரங்களுடன்
இருந்தது. அதை அனைவரும் அறிய அதன் வலைத் தொடர்பினை இங்கு
இணைத்துள்ளேன். திரு.முத்துகிருஷ்ணனின் இந்த கட்டுரை மிகவும் யோசிக்கவும், இந்தியா என்று தம் மக்களை மனிதர்களாக மதிக்க கற்றுக் கொள்ளப் போகிறது என்று விசனப்படவும் வைக்கிறது.
வலைத் தொடர்பு: http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=3157
நன்றி: "உயிர்மை" வலைத்தளம்.
இந்த கட்டுரையிலேயே இந்த போபால் விபத்திற்கு பின் நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை திரு. முத்துக்கிருஷ்ணன் ஒரு கனவு கண்டதைப் போல எழுதியிருக்கிறார்.
இந்த கட்டுரைக்கு பின் நான் இரண்டாம்பாகம் எழுதுவதற்கு ஏதும் இல்லை.
கட்சி பாகுபாடில்லாமல் ஜாதி பாகுபாடில்லாமல் மதபாகுபாடில்லாமல் ஒன்றாகக் கூடி தம் மக்களையே கொள்ளையடித்து சொகுசு காணுவதையே கூட்டாக செய்யும் ஒரு கொலைவெறி கும்பல் அரசியல் என்கிற பெயரால் இந்தியாவைச் சூறையாடவா நாம் சுதந்திரம் பெற்றோம்?
கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் நடிகர் நடிகைகளைப் பற்றி எழுதுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவையாக மாறி கொஞ்சம்கூட சமுதாய நோக்கம், மற்றும் கடமையில்லாத முதுகெலும்பில்லாதப் புழுக்களாக மாறிவிட்ட ஊடகங்கள் இந்த நாட்டை எங்கு அழைத்துச் செல்கின்றன?

சக மனிதரை கொஞ்சம் கூட மனிதாபத்துடன் அணுகாத, சீருடை அணிந்த, அரசியல் வாதிகளுக்கு வால் பிடித்து சாமான்யனின் மீது கொலைவெறியுடன் சட்டப்படி வன்முறையை கட்டவிழ்த்துவிடும் கும்பலாக இருக்கும் காவல்துறை நம்மை இன்னும் என்ன செய்யப்போகிறது?
வேலை கிடைத்த நாளிலிருந்து ஓய்வு பெறும்வரை யாரைப் பிடித்தால் எந்த பதவி கிடைத்து இன்னும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதையே நிதமும் யோசித்து, தம்மிடம் வரும் மக்களிடம் இன்னும் எவ்வாறு லஞ்சம் வாங்கலாம் என்பதை ஒரு விஞ்ஞான முறையில் யோசித்து அமல்படுத்தும் அரசு அதிகாரிகள் எனும் இந்த பேராசைக்கூட்டம் இன்னும் என்ன செய்ய போகிறதோ?
எல்லாம் முடிந்து கொஞ்சம் நீதி கிடைக்குமா என்று நீதிமன்றத்துக்குச் சென்றால் அங்கு நீதி அல்லது சாதகமான தீர்ப்புக்கு இவ்வளவு விலை
என்று விளம்பர விலை வைத்து விற்காத குறையாக சீரழிந்து போன நீதித்துறை!
ஆக ஒரு நாடு சிறப்பாக நடக்க, ஒழுங்காக இயங்க வேண்டிய 5 துறைகள் அல்லது 5 தூண்களான மேற்கூறிய 5 துறைகளும் பேராசையின் பிடியில் சிக்கி அவைகளின் அடிப்படை கடமைகளுக்கு நேர் எதிரான செயல்களில் ஈடுபடுகின்றன.
எப்படி ஒரு மனிதனின் உடலில் இருக்கும் அங்கங்கள் அவைகளின் அடிப்படை செயல்பாட்டிற்கு விரோதமாக செயல்பட்டால் அந்த மனிதன் துன்புறுவதும் இறப்பதும் நிச்சயமோ அது போல ஒரு நாட்டின் அழிவிற்கு மேற்க்கூறிய துறைகளின் (Politics, Government, Executive, Judiciary and so called voice of the people which is also known as Press) செயல்பாடுகளே காரணமாகும்.
வேர்களில் வெந்நீரைக் கொட்டி எந்த செடியையும் வளர்க்க இயலாது.
நகர்புறத்திலும் கிராமபுறத்திலும் காடுகளில் வாழும் பழங்குடிகளையும் அழித்து இவர்கள் எந்த நாட்டை ஆளப்போகிறார்கள்? செஞ்சட்டை நோய் சட்டீஸ்கர் மற்றும் மத்திய இந்திய காடுகளில் வளர்ந்திற்கு நாம் சீனாவை குறை சொல்லக்கூடாது. காரணம் இவர்களின் நலனை கவனிக்காமல் போனது நமது தவறுதானேயன்றி சீனாவின் தவறு இல்லையே?
அண்டை மாநில முன்னாள் முதலமைச்சருக்கே தடியடி!
சொந்த நாட்டு முன்னாள் ஜனாதிபதியையே தன் செருப்பை தானே தூக்க வைக்கும் "பாதுகாப்புச் சோதனை" செய்யும் விமானநிலைய அதிகாரி!
அண்டை மாநிலத்திற்கு குடிக்க தண்ணி கொடுக்காதையே ஒரு சாதனையாக கூறும் ஒரு மாநில முதல்வர்!
புற்று நோய் முற்றிவிட்டது!
காப்பாற்றவது கஷ்டம்
2 comments:
கலக்கல் ரவி..
http://ta.indli.com/static/indli-voting-widget-tamil
//
உங்கள் ஓட்டுப்பட்டை, தவறான இடத்தில இணக்கப்பட்டுள்ளதால், வாக்களிக்க முடியவில்லை...
மேலும் விவரங்களுக்கு, இந்த இணைப்பை பாருங்கள் ரவி...
Post a Comment