Friday, August 06, 2010

"ஜெமோ"



"ஜெமோ"

இந்த மனிதர் தாம் ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்று கூறிக் கொள்கிறார்.

ஒரு தனிமனித நாகரீகம் அறியாத இவர் எப்படி ஒரு இலக்கியவாதியாக இருக்க முடியும். அப்படியென்றால் இலக்கியவாதிக்கு தனிமனித நாகரீகம் வேண்டாமா?

இந்த "சுய விளம்பர வியாதி",யாரை இப்போது தூற்றத் தொடங்கியிருக்கிறார் தெரியுமா?

மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதாவை!

இந்த "ம்மா.மனிதரால்" பாமரர்கள் என்று அழைக்கப்படும் நம் போன்றவர்களின் பெரும் அன்பைப் பெற்ற திரு. சுஜாதாவை இந்த மனிதர் தனிப்பட்ட முறையில் தாக்கத் தொடங்கியது இலக்கியம் என்றால் நான் இங்கிலாந்தின் மன்னன்.

இவ‌ரைப் ப‌ற்றி நான் கேள்விப் ப‌ட்ட‌துண்டு. இவரது கதைகளையும் கட்டுரைகளையும் படித்துப் பார்க்க முயற்ச்சித்து தோற்றதுண்டு. புரிவதற்குள் பொழுது விடிஞ்சுடுங்க. பத்து வரிக்குள் போரடித்துவிடும். அசாத்திய பொறுமை வேண்டும். வாணம்னு விட்டுட்டேன்.

இவ‌ரை "சைக்கோ" என்று ந‌ம்ம‌ க‌னிமொழி அம்மா பேசிய‌ கூட்ட‌த்தில் வ‌ரைய‌ரைக்க‌ப் ப‌ட்ட‌ போது கொஞ்ச‌ம் யோசித்த‌துண்டு. ஆனா, இவ‌ர் அப்ப‌டித்தானோ என்று இப்போது நினைக்க‌த் தோன்றுகிற‌து.

சுஜாதாவை இவ‌ர் ப‌ல‌ வித‌ங்க‌ளில் பொறாமை கொண்டு தாக்குகிறார்.

இவ‌ரது கூற்றுப் ப‌டி சுஜாதா அறிவிய‌ல் விஷ‌ய‌மாக‌ எழுதிய‌ அனைத்தும் குப்பை காரணம் அவை மேலெழுந்த‌ வாரியாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ குற்ற‌ச்சாட்டில் உண்மை உண்டா?

இல்லை. கார‌ண‌ம். சுஜாதா தாம் எழுதிய‌ அனைத்தும் ஒரு சுட்டி அல்ல‌து தொட‌க்க‌ம் என்றே கூறுகிறார்.இந்த‌ தொட‌க்கத்திலிருந்து நீங்க‌ள் தேட‌த்தொட‌ங்குங்க‌ள் என்றே உங்க‌ளை அழைக்கிறார். டி.என்.ஏ.வைப் ப‌ற்றி அவ‌ர் ஒரு சிறிய‌ வெளிச்ச‌ம் ம‌ட்டுமே காட்டிய‌தாக‌க் கூறுகிறார்.

சுஜாதா ஒரு சாலை விள‌க்கு போல‌ அல்ல‌து ஒரு சாலை வ‌ழிகாட்டி போல‌ செய‌ல்ப‌ட்டார். அதை அவ‌ர் சுவார‌சிய‌மாக‌ ந‌ல்ல‌ சுவையுட‌ன் தேர்ந்த‌ நையாண்டியுட‌ன் செய்தார். இது ந‌ம்ம‌ ஜெமோவுக்கு சுத்த‌மா வ‌ராது.

எந்த‌ ஒரு சாலை வ‌ழிகாட்டியும் உங்க‌ளை ஊர் போய் சேர்க்காது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜெமோ என்ன‌ சொல்கிறார் என்றால் சுஜாதா உங்க‌ளை உங்க‌ளின் வீட்டின் வாச‌ல் வ‌ரைக் கொண்டு செல்ல‌வில்லை என்று கோப‌ப் ப‌டுகிறார்.

திரு. ஜெமோ சுஜாதாவை குறை சொல்லி அவ‌ர‌து புக‌ழை ப‌ங்க‌ப் ப‌டுத்தி த‌ன்னை உய‌ர்த்திக் கொள்ள‌ முடியாது. சொந்த‌மா எதாவ‌து சுவார‌சிய‌மா எழுதி புக‌ழ‌டைந்தால்தான் உண்டு.

ஜெமோவின் பார்வை ஏற‌க்குறைய‌ இந்திய‌ க‌ல்வித் திட்ட‌த்தின் கீழ் வ‌ரும் ப‌ழைய‌ ஆசிரிய‌ர்க‌ளின் (பெரும்பாலும்!) எண்ண‌ங்க‌ள் போல‌வே உள்ள‌து.

அதாவ‌து நான் ஆசிரிய‌ன். நீ மாண‌வ‌ன்.

என‌க்கு எல்லாம் தெரியும். உன‌க்கு எதுவுமே தெரியாது.

நீ முட்டாள். நான் உன்னை புத்திசாலியாக்கிக் காட்டுவேன்.

கேள்வி கேட்காம‌ல் நான் சொல்வ‌தை ம‌ட்டும் கேள். நீ உய்விக்க‌ப் ப‌டுவாய்.

நான் உன‌க்கு எல்லாவ‌ற்றையும் சொல்லிக் கொடுக்கிறேன்.

இப்ப‌டிச் செய்யாத‌வ‌ன் ந‌ல்ல‌ ஆசிரிய‌ன் அல்ல‌.

இதுதான் ஜெமோவின் பார்வை.

ஆனால் உண்மை இதுவா?

இல்லை!..இல்லை!..இல்ல‌வேயில்லை.


எந்த‌ ஆசிரிய‌ரும் ஒரு மாண‌வ‌னின் ஒட்டு மொத்த‌ அறிவிற்கும் கார‌ண‌மாகிவிட‌ மாட்டார்க‌ள்.

ஒரு மாண‌வ‌ர் ஒரு ஆசிரிய‌ரிட‌ம் வ‌ரும் போது தாம் எந்த‌ திசையில் ப‌ய‌ணிக்க‌லாம் என்கிற‌ அறிமுக‌ம் ம‌ட்டுமே அவ‌னுக்கு தேவைப் ப‌டுகிற‌து.

அத‌ற்கு மேல் அந்த‌ மாண‌வ‌ன் தாமேதாம் ப‌ய‌ணிக்க‌ வேண்டும்.

மாண‌வ‌ரும் ஆசிரிய‌ரும் க‌ல‌ந்துரையாடி அறிவை ப‌கிர்த‌லில்தான் ஒரு மாண‌வ‌ன் மேம்ப‌டுகிறான். ஆசிரிய‌ரும் மேம்ப‌டுகிறார்.

வெறும் போதித்த‌ல் ம‌ட்டும் க‌ற்பித்த‌ல் ஆகாது. ஆனால் இன்று ஜெமோ போன்றவ‌ர்க‌ளால் அதுதான் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து.

சுஜாதா இதிலிருந்து மாறுப‌ட்டார். அவ‌ர் சுவார‌சிய‌மாக தமக்கு அறிமுகமான ஒவ்வொரு விஷ‌ய‌த்தையும் த‌ம் வாச‌க‌ர்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்தினார். த‌ம‌க்கு தெரிந்த‌ அனைத்தையும் அவ‌ர் வாந்தி எடுப்ப‌தைப் போன்று கொட்டி ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை ஆயாச‌ப்ப‌டுத்த‌வில்லை.

வெறும் அறிமுகம் அம்புடுதேன். மேலெ தெரிந்து கொள்ள வேண்டுவோர் தாமே அந்தந்த துறை சம்பந்தப்பட்ட நூல்களைத் தேடி தெரிந்து கொள்வார்கள் என்று நம்பினார்.

அவர் என்றும் தம் வாசகர்களை முட்டாள்கள் என்று கருதியாது கிடையாது. சொந்தமாக யோசிக்க மாட்டார்கள் என்று நினைத்தது கிடையாது.

அத‌னால்தான் அவ‌ர் ல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ வாச‌க‌ர்க‌ளால் ஆராதிக்க‌ப்ப‌ட்டார்.


அடுத்து இவ‌ர் திரு. சுஜாதாவை த‌னிப் ப‌ட்ட‌ முறையில் தாக்குகிறார். அதாவ‌து திரு. சுஜாதா த‌னிப்ப‌ட்ட‌ முறையில் சிடுமூஞ்சியாம். மேலும் அவ‌ர்
பொழுது போகாம‌ல் க‌ணினியில் "சின்ன‌ ப‌ச‌ங்க‌ விஷ்ய‌ம்" பார்த்துக் கொண்டிருந்தாராம்.

இதெல்லாம் ப‌டிக்கும் போதுதான் இவ‌ர் ஒரு "சைக்கோ" என்று ப‌ல‌ர் கூறுவ‌தில் அர்த்த‌ம் உள்ள‌தோ என்று நினைக்க‌த் தோன்றுகிற‌து.

திரு. சுஜாதாவை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ச‌ந்தித்த‌வ‌ர்க‌ள் இதை ஒரு போதும் ஒத்துக் கொள்ள‌ மாட்டார்க‌ள். அவ‌ரை நான் எந்த‌ வித‌ அறிமுக‌மும் இன்றி ச‌ந்தித்திருக்கிறேன். சாதார‌ண‌ வாச‌க‌னாக‌ ஒரு தெரு முனையில் இருவ‌ரும் சிக‌ரெட் வாங்கும் போது (டெல்லியில்!)பார்த்து ஒரு அரைம‌ணி நேர‌ம் பேசிக் கொண்டிருந்தேன். என‌க்கு அவ‌ர் சிடுமூஞ்சியாக‌த் தெரிய‌வில்லை.மிக‌வும் உற்ச்சாக‌மாக‌ பேசினார்.

மேலும் ஒரு "சிடுமூஞ்சி" எப்ப‌டித் த‌ன்னைச் சுற்றி அல்ல‌து த‌ன‌க்கு நெருக்க‌மாக‌ இவ்வ‌ள‌வு பெரிய‌ ந‌ட்பு வ‌ட்ட‌த்தை உருவாக்கிக் கொள்ள‌ முடியும் என்கிற‌ அடிப்ப‌டை கேள்வி கூட‌ கேட்க‌த் தெரியாத‌வ‌ன் இந்த‌ த‌மிழ் வாச‌க‌ன் என்று ஜெமோ ந‌ம்புகிறார். ஜெமோவின் ந‌ட்பு வ‌ட்ட‌ம்தான் நாட‌றிந்த‌ ஒன்றாயிற்றே!.. இவ‌ருக்கு ந‌ண்ப‌ர்க‌ளை விட‌ எதிரிக‌ள் அதிக‌ம்.

சாதார‌ண‌மாக‌ ஒரு ம‌னித‌னுக்கு அடிப்ப‌டையாக‌ ந‌கைச்சுவை உண‌ர்வு இல்லையேல் அவ‌ர் நிச்ச‌ய‌மாக‌ ந‌கைச்சுவையுட‌ன் கூடிய‌ ப‌டைப்புக‌ளை தொடர்ந்து, பலராலும் பாராட்டும் வகையில் ப‌டைக்க‌ முடியாது என்ப‌து உண்மை. ஒவ்வொரு எழுத்தாளரும் நிச்ச‌ய‌மாக‌ தாம் ஆழ்ம‌னதில் அதிக‌மாக‌ ந‌ம்புவ‌தை,ர‌சிப்ப‌தை, அஞ்சுவ‌தை, வெறுப்ப‌தை, எதிர்பார்ப்பதை, எதிர்ப்பதை, போன்றவற்றையே எழுத்தில் கொண்டு வர முயற்ச்சிக்கிறார்கள் என்ப‌து பெரும‌ள‌வுக்கு உண்மை.

த‌ன‌து எண்ண‌ங்க‌ளை இன்னொரு க‌தா பாத்திர‌த்தின் மீது ஏற்றி சொல்வ‌து வ‌ழ‌க்க‌மான‌ விஷ்ய‌ம்தான்.

அப்ப‌டி பார்க்கும் போது ஜெமோவின் ம‌ன‌தில் என்ன‌ உள்ள‌து என்ப‌து அவ‌ர‌து எழுத்தில் தெரிகிற‌து என்று கொள்வோம்.

ஏற்க‌ன‌வே சுஜாதாவுக்குப் பிற‌கு எல்லோரும் என் எழுத்தைத் தான் ப‌டிக்கிறார்க‌ள் என்று சொல்லிக்கிட்டு அலைய‌ற‌வ‌ங்க‌ நிறைய‌ பேர் இருக்காங்க‌.

அது கூட‌ ப‌ர‌வாயில்லை என்று இப்போது தோன்றுகிற‌து.

கார‌ண‌ம். ஜெமோ போன்ற‌வ‌ர்க‌ள் சுஜாதாவைப் ப‌ற்றி பொய்யுரைத்தால் த‌ன‌க்கு வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் கூடும் என்ற‌ நினைப்பு முந்தைய‌தைவிட‌ கேவ‌ல‌மாக‌ இருக்கிற‌து.

இவர் சுஜாதாவிற்கு கீதையின் சாராம்சத்தை விளக்கினாராம்.

அடா..அடா..இவர் கதா காலட்சேபம் வேறு செய்வார் போலிருக்கு.

சுஜாதா நிருபண வாததிற்கும் காலம் காலமாக வந்த நம்பிக்கைக்கும் உண்டான மோதலின் இடையில் சங்கடப்பட்டார் என்று சொல்கிறார்.
இது பொய்.

நிருபண வாதத்திற்கும் நம்பிக்கை மற்றும் நிகழ்வுக்கும் உண்டான மோதலை அவர் உணர்ந்திருந்தார் என்கிற அளவோடு இது சரி. அவர் அதனால் சங்கடப்பட்டார் என்பது திரித்துச் சொல்வது. காலம் காலமாக எல்லா அறிஞர்களும் செய்த தேடலைத்தான் அவரும் செய்தார்.

ஒரு முறை கேள்வி பதிலில் ஒரு வாசகர் "விஞ்ஞான தேடல் என்று முற்றுப் பெறும்" என்று கேட்ட போது " விஞ்ஞானத் தேடல் பிறப்பின் ரகசியம் அறியும் போது முற்றுப் பெறும்" என்று ஒரு ஒற்றை வரியில் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இது தடுமாற்றமா? தேடலா?

சுஜாதா ஜெமோ வைப்போல எழுத முயற்ச்சித்து தோற்றுப் போனராம். அதையும் இவரிடமே சொன்னாராம்.என்ன ஒரு அவதூறு?சுஜாதா இனி வரமாட்டார் என்கிற நம்பிக்கையில் எப்படியெல்லாம் அவதூறு செய்கின்றனர்?

இதை சுஜாதா "ஸ்டைலில்" எடுத்துக் கொள்வோம். அதாவது இது சுஜாதா ஜெமோவை கிண்டல் செய்திருப்பார். அதாவது "உன்னைப் போல (மோசமான) ஒரு கட்டுரை எழுதனும்னு முயற்ச்சி பண்றேன். முடியல"..இந்த சுய விளம்பர பிரியரும் அதை உண்மை என்று நம்பி உளறிக் கொட்டுகிறது.


சுஜாதா டை அடிக்கிறார். இள‌மையாக‌ தெரிகின்றார்..(ஏன் வயத்தெரியுதா!) டீ குடிக்கிறார்.வீட்டில் இருக்கும் போது அவர் எப்படி இருந்தார்?
இப்ப‌டியெல்லாம் ஜெமோ ஏன் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் விம‌ர‌சிக்க‌ வேண்டும்?

இந்த‌ ஆள் உண்மையின் வெளிச்ச‌த்தைக் க‌ண்டு அஞ்சுகிறார்.


திரு. சுஜாதாவின் உய‌ர‌ம் மிக‌வும் அதிக‌ம்.
அவ‌ர‌து வாச‌க‌ர்க‌ளின் உய‌ர‌மும் அதிக‌ம்.
சுஜாதாவை ர‌சித்த‌வ‌ர்க‌ள் இது போன்று சின்ன‌புள்ள‌த் த‌ன‌மால்லாம் யோசிக்க‌வில்லை.

அவ‌ர‌து எழுத்தை ர‌சித்த‌வ‌ர்க‌ள் அவ‌ர் அன்று காலையில் என்ன‌ சாப்பிட்டார் அல்ல‌து அன்று அவ‌ர் க‌ழிவ‌றையில் முக்கினாரா என்றெல்லாம் யோசிக்க‌ வில்லை.

அப்ப‌டிப்ப‌ட்ட‌ வாசகர்க‌ளை அந்த‌ பெரிய‌ ம‌னித‌ர் வ‌ள‌ர்க்க‌வில்லை என்ப‌தே அவ‌ருக்குப் பெருமை.

திரு. ஜெமோவின் இந்த‌ "அடுத்த‌வ‌ர்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ளை" ஆய்வு செய்யும் முறை அதிர்ச்சி அளிக்கிற‌து.

இவ‌ர் ம‌ன‌த‌ள‌வில் குறையுள்ள‌வ‌ர் ம‌ட்டும‌ல்லாத‌ ஒரு திட்ட‌மிட்டு தாக்கும் குற்ற‌வாளியாக‌வும் தென்ப‌டுகிறார். (Attack with a criminal motive!)

எழுத்தை விம‌ர்ச‌ன‌ம் செய்கிறேன் என்கிற‌ போர்வையில் இப்ப‌டி த‌ர‌ம் தாழ்ந்து, அதுவும் நிருபிக்க‌ முடியாத விஷயங்களை, எழுந்து வ‌ந்து ம‌றுப்ப‌ளிக்க‌ முடியாத இட‌த்தில் இருக்கிறார் என்ற‌ எண‌ண‌த்தில் க‌ட்டுக்க‌தைக‌ளையும் க‌ற்ப‌னைக‌ளையும் வெளியிடுவது இவ‌ர‌து வ‌க்கிர‌ ம‌ன‌த்தையே வெளிக்காட்டுகிற‌து.

சுஜாதா எழுத்துல‌கில், சினிமா உல‌கில் ம‌ற்றும் ச‌முக‌ வாழ்க்கை விஷ்ய‌த்தில்
இந்த‌ ஜெமோ போன்ற‌வ‌ர்க‌ள் தொட‌ முடியாத‌ உச்ச‌த்தில் இருந்தார் என்ப‌து
இனி நிருபிக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌தில்லை.

உண்மையில் ஜெமோதான் தான் அந்த‌ உய‌ர‌த்தை நினைத்து பார்க்க‌க்கூட‌ த‌குதியுடைவ‌ர்தானா என்ப‌தை நிருபிக்க‌ வேண்டிய‌ நிலையிலுள்ளார்.

ஒன்றை ஜெமோ நினைவில் கொள்ள‌ வேண்டும்.
வெறுப்பு என்ப‌து ஒரு தவிற்க்க வேண்டிய மனோ நிலை.
அதை மனிதில் வைத்திருந்தால் வைத்திருப்பவரின் எண்ணம் எழுத்து, செயல் பார்வை உருவம் என்று எல்லாவற்றையும் பாதிக்கும். அழிவைத்தேடி இட்டுச் செல்லும்

சுஜாதா யாரையும் எத‌ற்காக‌வும் த‌னி ம‌னித‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் செய்த‌தில்லை.
இன்னும் சொல்ல‌ப் போனால் அவ‌ர் ச‌க‌ த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ளை குறை கூறி யாரும் கேட்ட‌றியார்.


ச‌க‌ எழுத்தாள‌ர்க‌ளை எடை போடும் வேலை வாச‌க‌ர்க‌ளுடைய‌து என்ப‌து அவ‌ர்
உண‌ர்ந்திருந்தார். அந்த வேலையை அவர் ஒரு போதும் செய்ததில்லை.

"உன் எழுத்துக்க‌ள் ச‌ரியாக‌ இருந்தால் நீ ம‌திக்க‌ப்ப‌டுவாய். இல்லையேல் ஒதுக்க‌ப்ப‌டுவாய்" என்ப‌தில் அவ‌ர் தெளிவாக‌ இருந்தார்.

இந்த‌ ஜெமோவின் நோக்க‌த்தை (In English "Criminal Intent") பார்க்க‌ ப‌ய‌மாக‌ இருக்கிற‌து. இவரின் இந்த குணங்கள் இப்போது தோன்றியிருக்க வாய்ப்பில்லை. இது தேர்ந்த, கடைந்தெடுத்த, அயோக்கியத்தனமான, நய வஞ்சகத்தில் ஊறிய, நரித்தனமான, மிகவும் வளர்ந்த விஷ விருட்சம் போன்றதாகப் படுகிறது. (இதற்கு மேல் போட வன்மையான வார்த்தைகள் எமக்கு தோன்றவில்லை)

ம‌றைந்த‌ அந்த‌ மிக‌ப் பெரும் எழுத்தாள‌ரின் குடும்ப‌த்தார் இவ‌ர் வெளியிட்ட‌ குப்பைக‌ளால் ம‌ன‌ம் வெதும்பியிருக்க‌ வாய்ப்புண்டு. ஆனாலும் மேன் ம‌க்க‌ள் மேன் ம‌க்க‌ளே என்ப‌து போல‌ அவ‌ர்க‌ள் இதை புற‌ந்த‌ள்ளி செல்வ‌ர்.

ஒரு முறை சுஜாதிவிட‌ம் இந்த‌ சிறு ப‌த்திரிக்கை எழுத்தாள‌ர்க‌ளின் அடித‌டி ச‌ண்டைகளைப் (இன்னும் அடிச்சுகிற‌ங்க‌ப்பு!) ப‌ற்றி கேட்ட‌ போது..அவ‌ர் அதை அவ‌ர‌து ந‌டையிலேயே..."வெறும் குழாய‌டி ச‌ண்டை..நான் க‌ல‌ந்து கொள்வ‌தில்லை" என்றே கூறி வில‌கினார்.

ந‌ல்ல‌ ம‌னித‌ர் துஷ்ட‌ரை க‌ண்டால் தூர‌த்தான் வில‌குவ‌ர்.

இந்த சாரு நிவேதிதாக் கூட கோபத்தில் ஏதாவது ஏடாகூடமா எழுதுவாரு..பேசுவாரு. ஆனா அவர்கூட இது போன்று பொய்யுரைத்து வஞ்சிக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

இன்னும் நிறைய எழுதத் தோணுகிறது. ஆனாலும் தொடர்ந்து ஒரு கோபத்திலேயெ என் மனநிலை இருப்பதை நானே விரும்பவில்லை. ஆக நான் இதைப்பற்றி இன்னும் சிந்தித்து எழுதி நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.


ஜெமோ இதுவ‌ரை எழுதிய‌தோ அல்ல‌து இனி எழுத‌ப்போவ‌தோ முக்கிய‌ம‌ல்ல‌. அவ‌ர் முத‌லில் ஒரு நேர்மையான‌ ம‌னித‌னாக மாறுவதற்கு முய‌ல‌ட்டும். அதுவே அவ‌ர் இந்த‌ ச‌முதாய‌த்திற்கு செய்த‌ பெரும் பேறாக‌ இருக்கும்

5 comments:

பொன் மாலை பொழுது said...

/ "உன் எழுத்துக்க‌ள் ச‌ரியாக‌ இருந்தால் நீ ம‌திக்க‌ப்ப‌டுவாய். இல்லையேல் ஒதுக்க‌ப்ப‌டுவாய்" என்ப‌தில் அவ‌ர் தெளிவாக‌ இருந்தார்.//

விஷயமே அவ்வளவுதான்.
சுஜாதாவை புரிந்தவர்கள், அவரின் எழுத்துக்களால் தெளிவானவர்கள் யாரும் இந்த ஜெமோ,சாரு போன்ற நபர்களின் விமர்சனங்களை பற்றி சீண்டவே மாட்டார்கள். இதெல்லாம் கார்பரேஷன் லாரியில் இருந்து வேகத்தில் பறந்து ரோட்டில் பரவும் குப்பைகள்.

சுஜாதாவின் நிலையை இனி ஒரு பயலும் தொடமுடியாது.
-விடுங்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இவனுக..சுஜாதா பற்றி எழுத என்ன அருகதையிருக்கு?...


"ஜெமோ" எழுதின லிங்க் கொடுங்க..
கிழிச்சு விடலாம்..

pattapatti.cbe@gmail.com

ராம்ஜி_யாஹூ said...

அருமையான கருத்துக்கள், ஜெமோவின் வலைப்பக்கத்திலேயே நீங்கள் இந்த மாற்று கருத்தை வைக்கலாம்.

சுஜாதா போல எழுத இனி புதிய எழுத்தாளர்கள் யாரும் வருகிறார்களா என்று நம்பிக்கையுடன் காத்து இருப்போம்.

Ravikutty said...

//அருமையான கருத்துக்கள், ஜெமோவின் வலைப்பக்கத்திலேயே நீங்கள் இந்த மாற்று கருத்தை
வைக்கலாம்.//


அந்த கவுரவத்தை அவருக்கு நான் அளிக்க மறுக்கிறேன்.

Unknown said...

Your content was good Ravi.

Sujatha was an excellent writer and a great human being.

அவர் எதை எழுதுகிறார் என்று அவருக்குத் தெரியும்,
படிபவருக்கும் குசப்பமில்லாமல் புரியும். அவரிடம் சில நிமிடங்கள் பேசினாலே எவ்வளவு நல்ல மனிதர் என்பது புரியும்.
சுஜாதா இபோது இருந்து ஜே மோ வின் விமர்சனத்தைப் பார்த்திருந்தால்? சிரித்துவிட்டு விட்டு அடுத்த சயின்ஸ் பிக்ஷன் எழுத உட்கார்ந்திருப்பார்.
Its worth nothing, the person and also his content.:))

சில மக்கள் யோசிக்காமல் அடுத்தவரைப்பற்றி எழுதுகிறார்கள்.