Friday, August 13, 2010
கொலையும் கொலையைச் சார்ந்த இடங்களும்
சமிப காலங்களாக தமிழகத்தில் (இதன் செய்தியைத் தான் தினமும் வாசிப்பதால்) கொலை மற்றும் கொள்ளை அதிகமாக நடக்கத் தொடங்கிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமாக காதல், கள்ள காதல, பண விவகாரங்கள் மற்றும் பழிக்குப் பழி வாங்குதல் என்று சொல்லலாம்.
இப்படி காரணங்களை வகைப்படுத்தினாலும் ஒரு கொலை செய்யும் அளவுக்கு தமிழனின் மனம் இறுகிப் போவதென்பது இன்றும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
முன்பெல்லாம் அத்தி பூத்தார் போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த கொலை போன்ற வன்முறைகள் இன்று மிக அதிக அளவில் நடப்பதற்காவே புள்ளி விவரங்கள் சொல்கின்றன. மக்கள் தொகை பெருக்கம் மட்டும் இதற்கு காரணமல்ல. இதையும் புள்ளிவிவர சதவிகிதங்கள் நிருபிக்கின்றன
இந்த நிலைக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணமாக நான் நினைப்பதை ஆராய்வோம்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் தொழிற்சாலை மற்றும் பற்பல கட்டுமான பணிகளில் வேலை செய்ய பெருமளவு மற்ற மாநிலங்களிலிருந்து பணியாளர்கள் (பெரும்பாலும் படிக்காதவர்கள்) வந்து குடியேறுகின்றனர். மேலும் கணிணி மற்றும் பல்வேறு துறைகளில் பணி செய்ய படித்த வெளிமாநிலத்தவரும் பெருமளவு குடியேறுகின்றனர்.
வளர்ச்சியின் பாதையில் போகும் போது இது போன்ற குடியேற்றங்களை தவரிக்க இயலாது என்பது உண்மையே.
ஆனால் இப்படி வரும் வெளி மாநிலத்தவர் வரும் போது தம் மாநிலத்தின் கலாசாரத்தையும் அல்லவா கூட்டி வருகின்றனர். அதாவது பிகார், ஒரிசா, மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தவர்களுக்கு சட்டம், ஒழுங்கு, காவல் துறை இவையெல்லாம் கொஞ்சம் அந்நியப்பட்டவை. தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். இந்த மாநிலங்கள் பொதுவாக பிற்படுத்தப்பட்ட மாநிலங்கள். இவைகளில் பெருமளவு இன்னும் பிரபுத்துவம் மற்றும் ஆண்டான் அடிமை தத்துவம் ஊறி திளைக்கிறது. நிலப் பங்கீடு இன்னும் பெரிய அளவில் விரிவடையாத அல்லது முழுமையாக நிறைவேற்றப்படாத விஷ்யங்கள்தான். அவர்களைப் பொறுத்தவரை காவல்துறை பெரிதாக ஒன்றும் சாதிக்காத, ஒரு கையாலாகத துறையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. வன்முறைதான் இவர்களுக்கு காலம் காலமாகவே நீதியை நிலைநாட்டும் உத்தியாகக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. இவையெல்லாம் வெள்ளைக்காரன் காலத்திற்கு முன்பிருந்து (குப்த சாம்ராஜ்ஜிய காலத்திலிருந்து) வழிவழியாக காணப் பட்டு வரும் சரித்திர உண்மைகள்.
இவர்கள் செய்வது நியாயமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.
ஆனால் அது தமிழ்கத்தை எப்படி பாதிக்கிறது என்பது கேள்வி.
இப்படிப் பட்ட வன்முறையில் மட்டும் நம்பிக்கை வைத்துள்ள ஒரு கலாசாரத்திலிருந்து வரும் இவர்கள் இங்கே வந்தவுடன் காணும் விஷ்யங்கள் இவர்கள் தொடர்ந்து இந்த மனநிலையேயே தங்கள் பிரச்சனைகளை அணுக உதவுகிறதா?.
அதாவது ஊடகங்களில் அறுவா தூக்குவதை ஒரு "ஸ்டைலாக" பேணுவதையும், கொலை செய்வதை "தர்மமாக" நியாயப்படுத்துவதையும் இந்த விருந்தாளிகள் தமிழகத்தின் கலாசாரம் என்றே நினைக்கின்றனரா?
தமிழகத்தின் கலாசாரம் இதுவா?
இல்லையென்றே தோன்றுகிறது.
சரித்திரத்தை பார்க்கும் போது வன்முறை நமது கலாசாரம் இல்லையென்றே தோன்றுகிறது.
சுதந்திரத்திற்காக நாடே தீப்பற்றி எறிந்த போது கூட நாம் காந்திய வழியில் அதாவது சாதாரண போராட்டங்களே அதிகம் நடத்தி நம் எதிர்ப்பைத் தெரிவித்தோம். வாஞ்சி நாதன் ஒரு விதிவிலக்கு.
மற்றபடி 1857ல் முதலாம் இந்திய சுதந்திர போர் (சிப்பாய் கலகம் என்று வெள்ளைக்காரன் சொன்னான்!) நடந்த போது கூட அதை அடக்க நம் சென்னை ராஜதானியிலிருந்துதான் படைகள் சென்று அடக்கியதாக வரலாறு.தொடர்ந்து தென்னகம் அமைதி பூங்கவா (மெய்யாலுமே!) இருந்து அதன் பயனாய் பல கலைகளில் சிறந்து விளங்கியதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.
தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் பெரிய அளவில் வன்முறையில் ஈடுபட்ட ஒரே விஷயம் இந்தி எதிரிப்பு மட்டுமே. அப்போது கூட காவல்துறை சூட்டினால் பொது மக்கள் மாண்டனரே ஒழிய "செளரி செள்ரா" போன்று படுகொலைகள் பொது மக்களால் நிறை வேற்றப்படவில்லை.
கோயம்பத்தூர் வெடி வைபவம் வேறு விஷயம். (இதை தனியாகத்தான் பார்க்க வேண்டும்.).
இப்படிப் பட்ட தமிழகத்தில் இன்று சுமார் 200 ரூபாய்க்கு ஒரு கொலை செய்யப்படுகிறது என்பது அதிரிச்சியாக இருக்கிறது.
பிரச்சனைகளுக்க்கான தீர்வு "ஆளை தூக்கறதுதான்" என்பதாக போனது எவ்வளவு வேதனை.?
கள்ள காதலா? பெண்ணை கொல்லு. இல்லையே அந்த பெண் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொலவாள்.
பணம் கேளு. கொடுக்காவிட்டால் ஆளை கொல்லு.
கொள்ளை அடி. அதற்கு முன்பு சாட்சியாக யாரையும் விட்டு வைக்காதே.
(இந்த மாதிரி கொள்ளையடிக்கும் முன்பு அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் போட்டுத் தள்ளு முறை உத்திர பிரதேச மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு இனத்தவருக்கு வழி முறையாகவே கொள்ளப்படுகிறது. இந்த விஷ்யம 1980களில் டெல்லியில் பெருமளவு கொள்ளைக்காக கொலை நடந்த போது விவாதிக்கப்பட்டது. பல கொலைகளில் இந்த விஷ்யம் உண்மை என்றே நிருப்பிக்கவும்பட்டது. இங்கு ஒரு விஷய்த்தை கவனிக்க வேண்டும். 1980களிலும் டெல்லி மிக வேகமாக இன்று சென்னை வளர்வதைப் போல வளர்ந்தது.)
முன்பெல்லாம் சென்னை வரும் வடநாட்டினர் யாரைக் கேட்டாலும் நம் ஊரின் அமைதியையும் மென்மையான மக்களையே புகழ்வார்கள்.
நமக்கு தெரிந்ததெல்லாம் ஜேப்படி திருட்டு, ஏமாத்தி திருடுவது, போன்ற சில்லைறை விஷ்யங்கள்தான்.
அப்படியெல்லாம் இருந்த தமிழகம் இன்று இப்படி மாறியதன் காரணம் என்ன?
காவல்துறை ஊழலில் முழுகி பொது மக்களை கைவிட்டதன் காரணமாக மக்களே நீதி வழங்கத் தொடங்கிவிட்டனரோ?
நீதித்துறை வலுவிழந்து நீதி வழங்க தாமதமாகி போவதினால் இளைஞர் சமுதாயம் கொலைதான் நியாயம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டதோ?
ஊழலில் முழுகிய அரசியல்வாதிகள் காவல் மற்றும் நீதித்துறையின் அலட்சியத்தால் எதையும் செய்யலாம் என்று தொடங்கி கொலையில் முடிகிறதோ.?
வெளிமாநிலத்தவர் நம்மிடமிருந்து கற்க ஒன்றும் இல்லாமல் போனதால் நமக்கு இந்த வன்முறை தீர்வை கற்றுக் கொடுத்துவிட்டனரோ?
நம் ஊடகங்கள் கொலை மற்றும் உயிற் பறிப்பின் வேதனைகளை மறைத்து அவைகளை சாதனைகளாக்கிவிட்டனவோ?
கொலைகளை நியாயப்படுத்தியும் ஊக்குவிப்பதை போலவும் படம் எடுப்பதையே பெருமையாகச் சொல்லும் ஊடகவியாளர்களுக்கு ஒரு கொலையின் பின்னாடி உள்ள சோகம் தெரியுமா?
கொல்லப்பட்டவன் குடும்பமும் நடுத்தெருவுக்கு வருகிறது. கொன்றவனின் குடும்பமும் நடுத்தெருவுக்கு வருகிறது.
அது மட்டுமல்ல அப்படி நடத்தெருவுக்கு வரும் குடுமபத்திலிருந்து வரும் இன்னொரு தலைமுறை வன்முறையிலிருந்து பாடம் கற்காமல் "பழிக்குப் பழி" என்று மீண்டும் அதே சகதியில் ஊற காரணம் என்ன?
இதை யார் பதிவு செய்வது?
கொல்லப்பட்டவனின் குடும்ப சோகத்தை கொலை செய்தவர் பார்த்தால் நிச்சயம் அவர் அந்த கொலையை செய்ததிற்கு உண்மையாக வருந்துவார்.
இன்னொரு முறை கத்தியை தூக்க மாட்டார். ஆனால் அதை அவருக்கு அந்த சோகத்தை
யார் எப்படி உணர்த்துவது?
இதில் ஊடகங்களில் பங்கு என்ன?
ஏன் செய்யவில்லை.?
தொடர்ந்து அறுவா தூக்குபவனே ஜெயிப்பதாக காட்டி காட்டி ஒரு இரண்டு தலைமுறையை கெடுத்துவிட்டோம். இன்று வரும் மூன்றாம் தலை முறை உண்மையில் இப்படி வாழ்ந்தால் தப்பில்லை என்று நினைக்கும் அளவுக்கு அவரது உணர்வுகள் மறத்துவிட்டன.
பெரும்பாலும் சரியான கல்வி கற்றவன், குடும்பத்தில் நல்ல முன்னுதாரனம் கண்டவன், இந்த மாயையிலிருந்து தப்பித்து செல்கிறான். அப்படி கல்வி கற்காதவனும் வீட்டில் சரியான முன்னோடி இல்லாதவனுமே இந்த சகதியில் மாட்டிக் கொள்கிறான். இது நியாயமா?
இது மாறவேண்டாமா?
உளவியல்ரீதியாக நம் சமுதாயத்தில் ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டாமா?
நிச்சயமாக இந்த "எதற்கெடுத்தாலும் கொலை" என்கிற மனோநிலைக்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருக்க வேண்டும்.
ஒரு பொறுப்புள்ள சமுதாயமாக நாம் காரணங்களை பல்வேறு தளத்தில் தேட வேண்டும்.
வெளி மாநிலத்தவரின் குடியேற்றம் பற்றிய என்னுடைய கேள்வி ஒரு சிறிய முயற்ச்சிதான். அது மட்டுமே நிச்சயமாகன காரணம் அல்ல.
வேறு என்ன காரணங்களாம் நாம் மனிதர்கள் என்கிற நிலையிலிருந்து வெகு வேகமாக மிருகங்கள் என்கிற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை ஆராயதல் வேண்டும்.
மிக அவசரமாக இந்த விஷ்யத்தில் ஒரு சமுக விவாதம் வந்து தெளிவு தேட வேண்டும்
ஆராய மறுப்பது நம் தமிழ் சமுதாயத்திற்கு நல்லதல்ல.
இது போன்று ஒரு மெத்தனம் அபாயகரமானது.
பின்பு திருத்த முடியாத அளவுக்கு தமிழகத்தின் உண்மையான கலாசார (இன்னும் எங்காவது மிச்சம் இருந்தால்!) முகம் சிதைந்து போகும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நீங்கள் கூறுவதும் ஒரு காரணம், ஆனால் அது தான் ஒரே காரணம் அல்ல.
அரசியல்வாதிகள் (மக்களை ஆள்பவர்கள்/சட்டம் இயற்றுபவர்கள்) , காவலர்கள், ரவுடியாகுள் இவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு , நட்பு இதுமும் ஒரு முக்கிய காரணம்.
கொலை செய்தாலும், நாம் ஜாமீனில் வர நமக்கு வேண்டிய எஸ் பி , நமக்கு வேண்டிய செயலாளர், மாவட்ட செயலாளர் /மந்திரி உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
Post a Comment