இன்று ஒரு செய்தி என்னை மிகவும் கோபப்படுத்தியது.
நடிகர் சங்க தலைவர்கள் தமிழக முதல்வரை சந்தித்தனர்.
இது செய்தி. மேலும் இவர்கள் செல்வி. ஜெயலலிதாவை தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக பாராட்டினராம். அதற்கு ஒரு விழா எடுக்க விழைந்தனராம்.
இந்த அசிங்கங்கள் நிற்கவே நிற்காதா? இவர்கள் சென்ற திமுக ஆட்சியில் எப்படி அப்பட்டமாக திரு.கருணாநிதியை பாராட்டி பாராட்டி கூழைக் கும்பிடு போட்டு அப்படி போடாதவர்களை மிரட்டி...உருட்டி..என்ன அசிங்கங்கள் எல்லாம் செய்தனர் என்று இந்த தமிழக மக்கள் மறப்பார்களா?
அப்படி இருக்க இப்போது புது ஆட்சி வந்தவுடன் உடனேயே இந்த அம்மாவுக்கு வால் பிடிக்கத் தொடங்கிவிட்டனரே.? இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா?
இந்த அசிங்கங்களை சுமார் 25 ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக இவை அதிகரித்து 5ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்தது போக இப்போது வருடா வருடம் தீபாவளி பொங்கல் போன்று நடை பெறுது கேவலம் இல்லையா?
இந்த பாராட்டு விழா நடத்துவதும் அந்த விழாவில் கூத்தடிப்பதும் மேலும் உடன் சலுகைகளுக்கு அடி போடுவதும் என்று நிற்கும்.?
இவர்கள் என்ன சமுதாயத்தின் வறுமையை போக்க போராடுகிறார்களா?
இல்லை உண்மையான தமிழ் மொழிக்காக பாடுபடுகிறார்களா? உண்மையைச் சொன்னால் தமிழை கொன்றவர்களில் முதலிடம் இவர்களுக்குத்தான்.
இவர்கள் செய்வது ஒரு தொழில். அதில் வரும் லாபம் இவர்களுக்கே போய் சேருகிறது. நாட்டு மக்களுக்காக ஒரு பைசா செலவிடாத இந்த அயோக்கிய சிகாமணிகள் இப்படி தொடர்ந்து வரும் அரசியல் தலைவர்களுக்கு துதிபாடி பிச்சையெடுப்பது உலகில் எந்த மூலையிலாவது சாத்தியமா?
உலகை விடுங்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருக்கும் சினிமாக்கார்கள் இப்படித்தான் ஆளும் கட்சியின் பின் சென்று பிச்சையெடுக்கிறார்களா?
தன்மானம் தன்மானம் என்று அதிகமாகப் பேசும் இந்த தமிழ்ச் சமுதாயம்தான் இன்று இது போன்ற தன்மானமில்லாத செயல்களை அதிகமாக செய்கிறது. ஊக்குவிக்கிறது.
ஏற்கனவே இவர்கள் வருமானவரி கட்டுவதில் ஏகக் குளறுபடி செய்கிறார்கள். இப்போது கேளிக்கை வரியும் செலுத்துவதில்லை.
மேலும் இப்போது இவர்களுக்கு இலவசமாக நிலம் வேண்டுமாம்.
யார் வீட்டு சொத்தை யார் திருடுவது.
அந்த அயோக்கிய கருணாநிதி தொடங்கி வைத்ததை இந்த அம்மா தொடரக்கூடாது.
இந்த கயாவாளிக் கூட்டத்திற்கு இலவசம் கூடாது.
கோடிகளில் புரளும் இந்த கயவாளிக் கூட்டம் தம் தொழிலை ஒழுங்காகச் செய்தாலே போதும்.
மேலும் இவர்களின் கலைச்சேவை!!! எமக்கு வேண்டாம்.
என்று இவர்கள் ஒழுங்காக வரி கட்டுகின்றனரோ, என்று இவர்கள் சமுதாய நோக்கோடு படம் எடுக்கின்றார்களோ? என்று இவர்கள் தமிழ் சமுதாயத்தில் பொறுப்புடன் பணியாற்றுகின்றார்களோ அன்று இவர்களை நாம் மதிப்போம்.
அதுவரை மிதிப்போம்.
No comments:
Post a Comment