திரு சாரூ !
இன்று தினமலரில் உங்களின் "வெளுத்த சிந்தனை" கண்டேன்.
உங்களின் முட்டாள் தனத்திற்கு இன்னும் ஒரு சான்றாக இது தெரிகிறது.
சென்னையில் மையப்பகுதியில் உட்கார்ந்து கொண்டு தினசரிகளை மட்டும் படித்துவிட்டு வெட்டி கதை பேசும் ஆட்களின் சப்தமாக இது பட்டது.
உங்களுக்கு உதயகுமாரை பிடிக்காமல் போனது வேறு விஷயம். ஆனால் அங்கு போராட்டம் நடத்தும் அத்தனை ஆயிரம் பேர்களையும் தீவிரவாதிகளாக உருவகபடுத்தும் மைய அரசு போல நீங்கள் உளறுவது அபத்தம்.
காலம் காலமாக வாழ்ந்துவரும் மீனவ குடும்பங்களை தம் வாழ்வாதாரத்தை விட்டு எங்கு போக சொல்கிறீர்கள்.?
சென்னையில் கலங்கரை விளக்கு அருகில் இருந்த மீனவ குடிசைகளை நீங்கள் காலி செய்து பாருங்கள். அப்போது தெரியும் மக்களின் போராட்டம்
எப்படி மாறுகிறது என்று.
அப்படியெல்லாம் இல்லாமல் மிகப் பெரிய கட்டுபாடுடன் ஒரு வருடத்திருக்கு மேலும் போராடும் இவர்களை நீங்கள் அவமதித்து பேசாதீர்கள்.
உங்களின் குளிர் சாதன பெட்டி வேலை செய்ய காலம் காலமாக வாழ்ந்து வரும் எம் மண்ணை நாங்கள் இழக்க வேண்டுமா?
இதன் வலி என்ன என்று வைகை அணைக்காக தம் ஊரை இழந்த வைரமுத்துவை கேளுங்கள்.
காவல்துறை கட்டுபாடுடன் இருந்ததா? இடிந்தகரையில் போராட்டத்தில் இருக்கும் மக்களின் வீடு வீடாக சென்று அம்மக்களின் உடமைகளை
உடைத்து பொருள்களை நாசப்படுத்திய ஒளி காட்சிகள் பொய்யா?
ஒரு மாதத்திற்கு மேல் அந்த மக்களுக்கு அடிப்படை பொருள்கள் ஏதும் கிடைக்காமல் செய்ய காவல் துறை செய்த முற்றுகை உங்கள்ளுக்கு தெரியாதா?
மேலும் எந்த ஒரு கட்சியும் எந்த ஒரு ஊடகமும் , இதுவரை ஆதரவு தராத (பல சுய நல காரணங்களால் !) எந்த ஒரு போராட்டமும் இத்தனை காலம் நீடித்த வரலாறு உண்டா ?
இந்த போராட்டம் ஒரு தனிமனிதனின் சாதனையாக அந்த உதய குமாரே சொல்லவில்லை.
மேலும் இத்தனை ஆயிரம் மக்களின் நம்பிக்கைக்கு ஒரு மனிதரால் பாத்திரமாக முடியும் என்றால் அது சும்மா நடப்பதில்லை.
தன்னலமில்லாத உழைப்பின் மூலமாகவே இது கிடைக்கும். காசுக்கு கூவுவது இம்மக்களின் வழக்கமில்லை.
இஷ்டப்பட்ட ரெமி மார்டின் கிடைக்கவில்லை அல்லது முடியவில்லை என்பதற்காக ஊடகத்தில் வந்து ஒப்பாரி வைப்பதல்ல மக்கள் பிரச்சனை..!!
இது பெரிய விஷயம்.
உங்கள் பேரன்பு மிக்க ஐரோப்பிய நாகரீகத்தில் கூட (தனி மனித உரிமை அதிகம் மதிக்கப்படும் )
இத்தனை நாளாக போராடும் ஒரு சொந்த நாட்டு மக்களை வந்து பார்த்து நிலைமையை உணர மறுக்கும் மாநில முதல்வரோ அல்லது நாட்டின்
பிரதமரோ உண்டா?
பத்திர்க்கையில் பெயர் வரவேண்டும் என்று ஏதாவது உளராமல் இருங்க!!!
2 comments:
Simply very good reply to fools... hats off.
----By---Maakkaan.
Though Iam a complete supporter of Nuclear Technology, some of the views of charu in not accepted to me. But my view about NPP is different. That is not related to emotion back ground and i took the stand to support Nuclear purely based on Technical back ground. But How you are commanding about charu, I have also seem that most of the Anti Nuclear society does argue without knowing any technicality of other Power Plant method. If you visit my website, i forced to support nuclear in all means with complete technical back ground. If you visit my web page, http://lakshmanaperumal.com & visit technology page.
Post a Comment