மதுரை மற்றும் அதற்கு கீழே உள்ள தென் தமிழகம் இன்று பெரும் தண்ணீர்
தட்டுப்பாட்டில் இருப்பதற்கு சில பல காரணங்களில் ஒன்று இப்போது நான்
சொல்லப்போகும் விஷயம்.
இதையே கொஞ்சம் விரிவு படுத்தி தமிழகம் தண்ணீர் இழந்த கதை என்றும் சொல்லலாம்.
நாமெல்லாம் அதாவது தமிழர்கள்/இந்தியர்களுக்கு காலையில் எழுந்தவுடன் டி மற்றும் காபி சாப்பிடும் பழக்கம் எப்போதிருந்து வந்தது என்று யாருக்காவது தெரியுமா ?
என்னடா இது. தண்ணீர் தகராறு பற்றி பேச வந்தவன் குடிக்கும் டி பற்றி பேசுகிறானே என்று யோசிக்காதீர்கள். இரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை.
எப்படி ஒரு சாதாரண பழக்கம் ஒரு பிரதேசத்தின் தட்ப வெப்ப நிலை மட்டுமன்றி அங்கு வாழும் யானைகள் போன்ற வன விலங்குகளின் வாழ்வையும் அழித்தொழிக்கின்றன என்று தெரிந்து கொள்ளுதல் நலம்.
1900 முன்பு இந்தியர்களுக்கு காபி மற்றும் தேநீர் குடிக்கும் பழக்கம் இல்லை. அதற்கு இரண்டு நூற்றாண்டு முன்பு வரை வெள்ளையருக்கும் இந்த பழக்கம் இல்லை. முதன்முதலில் அவர்கள் சீனாவை 1800ன் தொடக்கங்களில் வெற்றி கொண்ட போது அங்கு இந்த தேயிலை பழக்கத்தை கண்டறிந்தனர். எல்லா பொருள்களையும் உலகில் மற்றபகுதிகளுக்கு கொண்டு சென்று விற்று வியாபரத்தில் செல்வம் கண்ட வெள்ளையர் இந்த பொருளையும் ஐரோப்பாவிற்கு எடுத்து சென்றனர்.
கொஞ்சம் கொஞ்சமாக தேயிலை வெள்ளையரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகியது. வியாபாரம் நன்றாக செழித்தது. ஆனால் சீனாவில் வெள்ளையரால் முழுவதும் கால் உண்ற முடியவில்லை. அதற்கு பல் வேறு காரணங்கள் உண்டு. சீனர்களின் மொழிப்பற்று, கலாசார பற்று மற்றும் நிலப்பரப்பின் விஸ்தீரணம் என்று பல்வேறு காரணிகள்.
இந்த சமயத்தில் வெள்ளையர்கள் இந்தியாவில் நன்றாக கால் உண்றி விட்டனர். எனவே சினாவில் வியாபர ரீதியாக கண்டு பொருள் ஈட்டிய தேயிலை யை தாங்களே விளைவிக்க முனைந்தனர். இதன் மூலம் சீனா தேயிலை யில் பெற்றிருந்த ஏகபோக உரிமையை உடைக்க முனைந்தனர். இதற்கு இவர்களுக்கு கிடைத்த சரியான இடம். இந்தியா. அவர்கள் இந்தியாவில் தெரிவு செய்த முதல் இடம். அஸ்ஸாம். அஸ்ஸாமின் நிலப்பரப்பு கிட்டதட்ட சீனாவின் நிலப்பரப்பை ஒத்திருந்தது. எனவே அஸ்ஸாமில் இவர்கள் டி பயிரிட தொடங்கினர். அதற்கு இவர்கள் அங்கிருக்கும் அடர் காடுகளை அழித்தனர். ஒரு கட்டத்தில் இங்கு தேயிலை பயிரிட்ட ஒப்புக் கொள்ளும் ஐரோப்பியருக்கு ...கவனம் ஐரோப்பியருக்கு மட்டும் பெரும் நிலங்களை இலவசமாக கொடுத்தனர். பெரும் காடுகள் அழிக்கப்பட்டன. அஸ்ஸாமின் புகழ் பெற்ற யானைகளின், புலிகளின் மற்றும் பழங்குடிகளின் வாழ்விடங்கள் பறி போயின. தேயிலை அமோக மாக விளைந்தது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியானது. வெள்ளையர் பெரும் பொருள் ஈட்டினர். இந்த வியாபாரத்தில் வெள்ளையர் இரட்டை லாபம் சம்பாதித்தனர். ஒன்று காடுகள் அழிக்கப்பட்ட போது அந்த பெரும் மரங்களை விற்று ஒரு லாபம். பின் தேயிலை விற்று இன்னொரு லாபம்.
விளைவு...அஸ்ஸாமின் காடுகள் அழிந்தன. அஸ்ஸாமின் உலக புகழ் பெற்ற
ஒற்றை கொம்பு வெள்ளை காண்டாமிருகம் அழிய தொடங்கியது.
1900 வாக்கில் இந்த தேயிலை பயரிடுதல் நமது மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு பரவியது. காரணம் வடநாட்டில் சிறிது காலம் இருந்து பின் தென்னிந்தியாவுக்கு வந்த வெள்ளையர். இவர்கள் இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடர் காடுகளை கண்டதும் அஸ்ஸாமில் செய்த அதே தேயிலை பாசனத்தை இங்கு செய்வது என்று முடிவு செய்தனர். இதில் ஒரு சோக ஒற்றுமை என்னவென்றால் இந்த அடர் காடுகளிலும் அதே ஆசிய யானைகள் வாழ்ந்து வந்தன.
வெள்ளையரின் வியாபார வெறிக்கு முன் யானையாவது ..பூனையாவது.
காடுகள் அழிக்கப்பட்டன. தேயிலை தோட்டங்கள் முளைத்தன.
தென்னிந்த்யாவில் இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் காடுகளின் முக்கியத்துவம் அஸ்ஸாம் காடுகளை விட அதிகம் என்று அன்றைய இந்தியர்களும் ஏன்..வெள்ளையர்களும் அறிந்திருக்க வில்லை.
தென்னிந்தியாவின் தட்ப வெட்ப நிலையின் இதயமாக இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் விளைகின்றன. வடக்கே கிட்டதட்ட மும்பை அருகே
தொடங்கும் இந்த மலைத்தொடர் தெற்கே திருவனந்த புறம் வரை ஒரு மிகப்பெரிய அடர்ந்த காடுகளை கொண்ட தொடராக நீண்டு கிடக்கிறது. இது அரபிக்கடல் நீர் ஆவியாகி மேலேறி வரும் போது அதை குளிர்வித்து மழை உண்டாக்கி அவை ஆறுகளாகவும், ஓடைகளாகவும்
நீர்நிலைகளை இந்த மலைத்தொடரின் இருப்பக்கமும் நிரப்பி செழிக்க வைத்து கொண்டிருந்தது.
இந்த மலைத்தொடரில் தொடங்குவதுதான் காவிரி, வைகை, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி போன்ற பெரு நதிகளும். பாரதபுழா, பவானி, பம்பை, பீமா, கபினி, ஹைமாவதி போன்ற பல சிறு நதிகளும், பல நூறு ஓடைகளும். இன்று தென்னிதியாவில் இருக்கும் அனைத்து நீர் ஆதாரங்களுக்கும் சுமார் 1000 மைல் நீளம் கொண்ட ஐந்தே மலைத்தொடர்களே ஆகும்.
இந்த மலை தொடரின் அருமை பெருமைகளை ஒரு ஆயிரம் பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகலாம்.
பல ஆயிரம் வருடங்களாக இந்த தென்னிந்தியாவில் மக்களின் ஜீவாதாரமாக இருக்கும் இந்த மலைத்தொடர்களின் காடுகளைத்தான் ஆழித்து காபி மற்றும் தேயிலை தோட்டங்களை போட்டனர் நம்மை ஆண்டவர்கள்.
இப்போது ஓரளவு நாம் இன்று கண்டு கொண்டிருக்கும் பயங்கரத்தின் ஊற்றுக் கண் எது என்று புரிந்திருக்கும்.
1920 வரை இந்தியர்கள் பெருமளவு இந்த தே தண்ணியை பருகவில்லை. பெரும்பாலும் வெள்ளையரும் அவர்களை சார்ந்தவர்களே இதே பருகி வந்தனர்.
விளைச்சல் அமோகம். வியாபாரம் ஐரோப்பாவில் ஒரு உச்ச கட்டத்தை எட்டி விட்டது. இனி வளர வாய்ப்பில்லை என்ற போது விளைச்சலுக்கு ஏற்ற மார்கெட்டை உருவாக்க விரும்பினர் இந்த வியாபாரிகள். விளைவு...அவர்கள் பார்வை உள்ளூர் பக்கம் திரும்பியது. 1920ல் தேயிலை போர்ட் என்று ஒரு நிறுவனத்தை நிறுவி தேயிலை தண்ணீர் பருகுவதை ஊக்கு வித்தனர். வித விதமான விளம்பரங்கள் மூலம் தேயிலை மற்றும் காபி பருகுவதை ஒரு நவீனமாக, பெருமிதமாக, ஒரு உற்சாக பானமாக ஒரு ஊக்குவிப்பாக மக்களின் மனதில் கொண்டு சென்றனர். விளைவு...அமோக வியாபாரம்...வெள்ளையன் சொல்லி விட்டால் வேறு வார்த்தை உண்டா ?
படித்தவர்கள் பருகும் போது அது சரியாகத்தானே இருத்தல் வேண்டும்.?
மேலே சொன்ன விஷயங்கள் உங்களுக்கு சமிபத்தில் நிகழ்ந்துவரும் ஒரு விஷயத்தை நினைவு படுத்துமே ??? ஆமாம். இன்று பெப்சி க்கும் கோக கோலா வுக்கு அளிக்கப்படும் அதே விளம்பர உத்திகள்தான் அன்றும் பயன் படுத்தப் பட்டன. விளைவு ..தேயிலை மற்றும் காபியின் பிடியில் நாம் முழுவதுமாக சிக்கினோம். விளைவு நாம் வாழ பெரிதும் தேவைப்படும் மழையை கொடுக்கும் காட்டை அழித்து நமக்கு தேவையே இல்லாத தேநீரை பருகி கொண்டிருக்கிறோம். நல்லா இருக்குல்லா !!!
மேற்கு தொடர்ச்சி மலையின் காடுகள் அழிந்ததின் விளைவு, மழை பொழிவு பெருமளவு குறைந்தது. யானை போன்ற விலங்கினங்களின் அழிவும் தொடங்கியது. சாதாரணமாகவே இந்த மலைத்தொடரின் மழைப்பொழிவு
மேற்கை விட கிழக்கில் கொஞ்சம் குறைவு. இப்போது அதுவும் அருகி போனது. பெரு நதிகளை சேரும் சிறு நதிகளில் சிற்றோடைகள் நீர் வரத்து குறைய குறைய பெரு நதிகளில் வறட்சி அதிகரித்தது இதற்கிடையில் வந்த கொஞ்ச நஞ்ச நீரையும் பெரும் அணைக்கட்டுகள் கொண்டு தடுத்து நதி நீர் போக்கில் கையை வைத்தோம். விளைவு...நதியின் கிழ் மட்ட நீர் பங்கு இன்னமும் குறைந்தது. இத்தனையும் மீறி வரும் நீரில் நாம் சாய பட்டறை மற்றும் பல்வேறு கழிவுகளை கொட்டி நாசப்படுத்தினோம்.
அப்படியும் தாண்டி வரும் நதியின் மடியில் இன்று நாம் மணல் கொள்ளை என்ற வடிவில் கை வைத்து நதியின் உயிர் நாடியை உருவி எடுக்கிறோம்.
இப்படி நாம் நதியின் பிறப்பிடத்தை அழித்து, வளரும் இடத்தை ஒழித்து,
வாழும் இடத்தில் விஷம் வைத்து, கடைசியில் அதன் ஜீவனை கொள்ளையடிகிறோம். இதற்கெல்லாம் தொடக்கம். அந்த காபி. தேயிலை
தோட்டங்களுக்காக அந்த காடுகளை அழித்தது.
இப்படி ஒரு முட்டாள்தனத்தில் தொடங்கிய காபி மற்றும் தேநீர்
பருக தொடங்கியதன் முக்கியமான பக்க விளைவு...வெள்ளை சக்கரை உபயோகம். இந்த வெள்ளை சக்கரை காபி தேநீரை விட அதிக விஷம்.
இது நமக்கு பல் வேறு நோய்களை பரிசாக தருகின்றன என்று இதை நமக்கு தந்த வெள்ளையர் அறிவியல் வல்லுனரே சொல்கின்றனர். சக்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு, இதய நோய், குடல் புண், ஒவ்வாமை, தோல் வியாதிகள் மற்றும் சிறுவர்களில் மன வளர்ச்சி பிரச்சனை என்று போகுது பட்டியல்.
இதன் இன்னொரு பக்க விளைவு என்ன தெரியுமா? பால் பொருள்களின் பயன்பாடு அதிகரிப்பு. நமக்கு காபி, தேநீர் பயன்பாடு இல்லையென்றால் இத்தனை லிட்டர் பால் தேவையே கிடையாது. ஆனால் பாருங்கள். இன்று பால் பொருள்களின் தேவை நம்மை இறுக்கி பிடிக்கிறது. அதற்கு பசுக்கள் தேவை. அந்த பசுக்களின் வகைகளிலும் ஐரோப்பியர் புகுந்து ஜெர்சி பசு வாங்கு என்று peta மூலம் சுற்றி வளைத்து கழுத்தை நெறிக்கிறான்.
இன்று அதை நிறுத்த நாம் தெருவில் இறங்கி போராட வேண்டியிருக்கு.
நாம் நம் வாழ்வியலில் இருந்து விலகி காபி, தேநீர் பருக தொடங்கியதால் எப்படியெல்லாம் நம் அடிப்படை வாழ்வாதாரங்களை ஒரு வெறும் 100 ஆண்டுகளில் பறிகொடுத்து விட்டோம் ? நம் நீர் ஆதாரங்களை அழித்தொழித்தது மட்டுமல்லாமல் அங்கு வாழும் உயிரினங்களின் அழிவிற்கும் காரணமாகி விட்டோம்.?
இத்தனைக்கும் இந்த காபியோ தேநீரோ நம் உடலுக்கு தேவையே இல்லை. நாம் சித்த ஆயுர் வேத மருத்துவ முறைப்படி மருந்து சாப்பிட தொடங்கும் போது மருத்துவர் முதலில் சொல்வது இந்த காபி, தேநீரை நிறுத்துங்கள் என்பதே. இவைகள் வயிற்றில் அமிலங்களை அதிகப்படியாக சுரக்க வைத்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குபவை என்று இதை நமக்கு அறிமுகம் செய்த வெள்ளையனின் அறிவியல் வல்லுனர்களே சொல்கின்றனர்.
இப்போது சொல்லுங்கள்... நாம் எப்படி நம் நீர் வழித்தடங்களையும், நீர் ஆதராங்களையும் இழந்தோம் என்று புரிகிறதா ?
நம் தமிழர் மற்றும் இந்தியருக்கு வேண்டாத காபி மற்றும் தேயிலையே...
கேட்க விசித்திரமாக இருக்கும். ஆனால் சிந்தித்து பாருங்கள். உண்மை அதுதான். இதே போன்று ஆந்திராவின் புகையிலை விவசாயம் எத்தகைய நச்சு என்று இன்னொரு பக்கம் எழுதலாம் .
அடிப்படை உண்மை..நாம் நம் வாழ்வியலை சிந்திக்காமல் மாற்றும் போது பெரும் ஊறுகள் நமக்கு வந்து சேரும் என்பதே.. காரணம் வாழ்வியல் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே.
உண்மை கசக்கும்...

No comments:
Post a Comment