தமிழக தொ(ல்)லை காட்சிகள்:-
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு வியாதி உண்டு.
அதாவது எவனாவது ஒரு காரியம் செஞ்சு அது கொஞ்சம் பிரபலம் ஆயிட்டுசுன்னா உடனே
எல்லோரும் ஒட்டு மொத்தமா அதே போல் பண்ண முயற்சி பண்றது. அது முதலாவது போல்
இல்லாமல் கன்றாவியா இருந்தாலும் விடாது செய்வார்கள. மாத்தி யோசிக்கவே மாட்டானுங்க.
90 களில் சரவணபவன் வந்த வெற்றி கண்டவுடன்
உடனே கணேஷ் பவன், காமாட்சி பவன் என்று எல்லோரும் அதே
போன்ற நீல நிற போர்டு வைத்தது மட்டுமல்லாது "உயர்தர சைவ உணவகம்" என்று
போட்டுக்கிட்டு வாழை இலை வைத்து தொழில் பண்ணினார்கள். சாப்பாடு என்னவோ
கண்றாவிதான். இதை COPY
CAT SYNDROME என்று
சொல்வார்கள்.
இதே கூத்துதான் இந்த தொலைகாட்சிகளிலும் !!
அரட்டை அரங்கம் என்று விசு செய்தாரா? விடாதே!
அதே போல் இன்னொரு கூட்டத்தை கூட்டி இன்னும் அபத்த களஞ்சியமாக பேசி கைதட்டல்
வாங்க பாரு.
அது பாஷ்கரராஜா இருந்தாலும் சரி பாக்கியராஜாக இருந்தாலும் சரி..இல்லை நம்ம
தாடிக்காரராக இருந்தாலும் சரி..விடாதே..இதுல லியோனி மாதிரி பைத்தியங்கள் பாட்டு
வேறு பாடி கடுப்பேத்துவார்கள். பண்டிகை திருநாள் வந்தா போதும் இவனுங்க
தொல்லை தாங்காது.
இப்ப செய்தி தொலைகாட்சிளின் கூத்து இன்னும் அதிகம். இவர்கள் தினம் ஒரு நாலு
பேரை கூட்டி வைச்சுக்கிட்டு பண்ற கொடுமைய எங்க சொல்ல?
ஆயுத எழுத்து, நேர்பட பேசு, வியுகம் என்று பல
கூத்துகள். இதில் தினமும் ஒரு மொக்கை, குடிகாரன் என்று எல்லோரையும் கூப்பிட்டு
நேர்காணல் வேறு. கேள்விக்கு என்ன பதிலாம்.? நாலு பேர் பார்க்கும் போது “பப்ரபா”
என்று உட்காருகிறோமே என்று கூட தெரியாமல் வாயில் வந்ததை உளரும் இந்த தற்குறியை
எல்லாம் பேட்டி எடுத்து அவனுக்கு ஒரு பிரபலம் உண்டாக்கி தருகிறோமே என்று கூட
புரியாது முட்டாள் கூட்டம். அத்தனை விளம்பர வெறியா? TRP RATING அத்தனை
முக்கியமா? அட பக்கிகளே...இது உங்கள்
தரத்தை கீழே இழுத்து செல்லும் என்று தெரியாதா?
அந்தி சாய்ந்தால் கை கால் அரித்து
உதறல் எடுக்கும் குடிகாரன்கள் போல் ஆகிவிட்டனர் இந்த தொலைகாட்சியினர்? எவனாவது நாலு பேரை கொண்டு வந்து உட்கார வைத்து “அம்மா..இட்லி
சாப்டாங்களா ? இல்லையா? “ என்று பரபரன்னு ஒடறாமாதிரி வேஷம் கட்றாங்க. அதிமுக கூட்டம்..ஆவடி குமார், சரஸ்வதி, வளர்மதி
அல்லது இன்னும் பெயர் தெரியாத கூச்சல் போடும் கூட்டம். திமுக வில் இப்போது சில
புதுமுகங்கள் இறக்குராங்க. இவங்க தங்கள் கட்சியின் சரித்திரமே தெரியாமல்
பேசுவாங்க!
காங்கிரசில் பேச கூட ஆள் கிடையாது.
இல்லைன்னா விஜயதாரிணி மாதிரி ஆளெல்லாம் வருமா?
இருப்பதிலேயே பா.ஜ.க தான் காதை கிழிக்கிறாங்க.
ஏய்யா! கத்தறிங்க? எதிரே கேள்வி கேட்பவன் ஏற்கனவே
உங்களை வெறுப்பேத்துவது என்று முடிவு பண்ணித்தான் கூப்பிடறான். பின்ன ஏன் வந்து
கத்தி கடுப்பெத்தறிங்க? என்ன கேட்டா...நீங்க பேசாமல் இருந்தாலே இவனுங்க பண்ற
கூத்தில் நாலு ஒட்டு உங்களுக்கு கூட கிடைக்கும். போய் கட்சியை அடிப்படை அளவில்
வளர்க்க பாருங்கள்.
கூத்தில் கோமாளிகள் மாதிரி சிறந்த
பத்திரிக்கையாளர்கள் என்று சில மொன்னைகள் வேறு வந்து குட்டையை குழப்புவார்கள்.
உண்மையில் இந்த பத்திரிக்கைகார்கள்தான் நம்மை படுகுழியில் தள்ளியவர்கள். எதை
மக்களுக்கு சொல்லவேண்டும். எதை சொல்லக்கூடாது என்று இவர்கள் முடிவு செய்வார்களாம்.
ஜெயா உயிருடன் இருந்தவரை (அப்போலோவில் 75 நாள் இருந்தது உட்பட) நவத்துவாரங்க்களை
அடைத்து கொண்டு இல்லையேல் “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி” என்று கேவலமாக எழுதி
கொண்டிருந்தவர்கள்தான் இவர்கள்.
உண்மையில் மணிக்கொரு “பிரேக்கிங்
நியுசோ” தினம் ஒரு பேட்டியோ, பொழுதுக்கு ஒரு விவாதமோ தேவையில்லை. வாரம் ஒரு முறை
வரும் போதுதான் அதற்கு மதிப்பு கூடுதல். ஆளோ, பிரச்சனையோ சரியாக பின்புல ஆராய்ச்சி
செய்து முழு விவரங்களுடன் எதிர் கொள்ளுங்கள். உங்களுக்கும் மரியாதை கிடைக்கும். விஜய் சிறந்த நடிகர் இல்லையா என்பது போன்ற
மொண்ணை கேள்விகளை கேட்க மாட்டிர்கள்.
உதாரணத்துக்கு தினகரனை பேட்டி
எடுக்கும் போது...அவர் என்ன படித்தார்? அவரது குடும்பத்திற்கு இத்தனை வருடத்தில்
எப்படி இத்தனை சொத்துகள் வந்தது என்று ஒரு லிஸ்ட் தயார் பண்ணி கேட்க ஏன் தயங்குகிறீர்கள்?
savukku தளத்தில் விவரம் ரெடியா இருக்கு! சித்தி ஜெயிலில் இருக்காங்களே..அவிங்க
செய்த குற்றம் நியாயமா? உச்ச நீதி மன்றம் வரை சென்றீர்களே இது நியாயமா என்று ஏன்
கேட்கவில்லை? உதயநிதியை கூப்பிட்டு
நீங்கள் செய்யும் தொழிலுக்கு முதலீடு ஏது என்று ஏன் கேட்பதில்லை? ஸ்டாலினை அல்லது கனிமொழியை கூப்பிட்டு உங்கள்
குடும்ப தொழில் எது உங்களுக்கு இத்தனை செல்வத்தை கொடுத்தது என்று ஏன் கேட்பதில்லை?
அழகிரியை இன்னமும் நிறைய கேட்கலாம்? ஏன் இதையெல்லாம் செய்யவில்லை?
இதையெல்லாம் செய்வீர்கள் என்று நான்
நம்பவில்லை. ஏன் என்றால் ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சியும் மதரீதியாகவோ, ஜாதி
ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ நடத்தப்படுகிறது.
இதுல நடுவாம்! நிலையாம்!
துணிமணி, தங்கநகை, TMT விளம்பரங்களே
உங்களு தேவை.
உண்மை அல்ல.!
No comments:
Post a Comment