நம் வாழ்வில் நாம் விரும்புவது யாது
என்று முடிவு செய்வது நாம்.
அதற்கான அத்தனை முன்னெடுப்புகளையும் செய்வது நாம்.
அந்த இலக்கை அடைந்த பிறகு பெருமையை பெற்றுக் கொள்வதும் நாம்.
ஆனால் தோல்வி என்று வரும் போது மட்டும் அதன் காரணத்தை இன்னொருவர் தோளில்
சுமத்த முற்படுவது ஏன்?
"அவா" ளால காரியம் கெட்டுது.
இவிங்களால நாம் நாசமானோம் என்று புலம்புகிறோம்.
இதைப் பற்றி நிறைய பேர் நிறைய பேசிட்டாங்க.
ஒருத்தர் கேட்டார். "சொல்றதெல்லாம் நல்லாத்தான் சார் இருக்கும்.
தெருவில் இறங்கி போராடும் போதுதான் புரியும். சும்மா..கம்புயுட்டர்
கிடைச்சுதுன்னு ரூம்புல உட்கார்ந்து கொண்டு லொட்டு லொட்டு ன்னு கி போர்டை
தட்டினால் சரியா போச்சா ??".
நியாயமான கேள்விதானே!
ஒரு
தாழ்த்தப் பட்டவரின் வலி மற்றும் அவர் அனுபவிப்பதாக சொல்லும் அவமானம் இன்னொரு
சாதிக்காரருக்கு எப்படி புரியும்.?
புரியாதுதான்.
அப்படி
பார்த்தால் என் கால்வலி என்னவென்று என் பெண்டாட்டிக்கே புரியாது. அது அவருக்கு
வரவேண்டும். அப்போது கூட அது அவரது வலி. என்னுடையது அல்ல.
ஆகவே
இந்த சமுகம் இப்படித்தானா?
வெறும்
கழிசடைகளை மட்டும் கொண்டதா?
என்றால்
அப்படி என்றுமே இல்லை என்றுதான் சரித்திரம் சொல்கிறது.
பழைய
கதைகளை அப்புறம் பார்ப்போம். இப்போதை நடைமுறைகளை
கண் எதிரே நடப்பவைகளை உதாரணம்
கொள்வோம்.
மூன்று
பேரை எடுத்துக் கொள்வோம்.
இவர்களை
உலகம் தலையில் வைத்து கொண்டாடியது. கொண்டாடுகிறது.
1.
முன்னாள் குடியரசு தலைவர்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
2. ஆஸ்கார் பரிசு பெற்ற ஏ.ஆர். ரஹ்மான்.
3. இசைஞனி : இளையராஜா .
இந்த
மூவரும் மிகவும் பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இருவர்
பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை.
இவர்களுக்கு
இந்த வெற்றி சும்மா கிடைத்துவிடவில்லை.
எத்தனை
வலி, ?
எத்தனை
துரோகம்?
எத்தனை
கிண்டல்?
எத்தனை
இழி சொல்?
இத்தனையும்
தாண்டி வென்றதெப்படி?
இவர்கள்
இன்றைய சுபவீக்களும், கீரைமணிகளும் சொல்வது போல் முன்னேறவே முடியாமல் அல்லவா
போயிருக்க வேண்டும்.
ஆனால்
இந்த மூவரையும் இனம், மதம், மொழி ஜாதி என்று அனைத்தையும் கடந்து உலகம் ஏன்
கொண்டாடுகிறது?
இதில்
முதலாமவர் பல மேடைகளில் தன் வெற்றியின் ரகசியத்தை தெளிவாக பலமுறை சொல்லிவிட்டுத்தான்
சென்றார்.
அதாவது
உன் உயரம் உன் மனத்தின் உயரம்தான் என்றார்.
ஏ.ஆர்.
ரஹ்மான் சொன்னது. இன்னமும் தெளிவு.
ஆஸ்கார்
வெற்றியின் ரகசியம் கேட்ட போது ..
“வாழ்வின்
முக்கியமான ஒரு திருப்பத்தில் என்னிடம் இரண்டே வழிகள் தென்பட்டன. ஒன்று அன்பு வழி.
இன்னொன்று வெறுப்பு வழி. வெறுப்பு வழியில்
செல்வது மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் அன்பு வழியில் செல்லத்தான் மிகவும் உறுதி
தேவைப்பட்டது. நான் அன்பின் வழியை தெரிவு செய்தேன்.
என்
பணிகளை வெற்றி தோல்வி எதிர்ப்பார்ப்பு இன்றி செய்து கொண்டே இருந்தேன். வெற்றியோ,
தோல்வியோ எல்லா புகழும் இறைவனுக்கே” என்று சொன்னார். இதுவும் ஆன்மிகம் தான்.
இதில்
யாருடைய சொல்லும் செயலும் என் அனுமதியின்றி என்னை பாதிக்க விடவில்லை என்பதுதான்
மறை பொருள்.
அடுத்து
இளையராஜா ...இவரும் ஆன்மீகத்தின் வேறு ஒரு தளத்தில் இருந்து தம் இலக்கை அடைந்தார்.
இசை உலகில் இவருக்கு இளைய ரஹ்மான் இஸ்லாத்தில் நின்று கண்ட இறையை இவர் இந்துமதத்தில் நின்று
கண்டார்.
இவர்
தனது உயரம் என்ன என்று அடைய வேண்டிய இலக்கு என்ன என்று ஏற்கனவே புரிந்து கொண்ட
காரணத்தால் அவரது பயணம் தீர்க்கமானதாக இருக்கிறது. இவர் வெற்றியை தேடி போகவில்லை.
வெற்றி இவரை தேடி வந்தது.
ஒவ்வொரு
உயத்தை கடக்கும் போதும் இவரை சுற்றி இருந்த ஒவ்வொரு போலி உறவுகள் தாமாகவே
பல்லிளித்து வீழ்ந்து பட்டன.
சமிபத்தில்
வீழ்ந்தது ஒரு 40 வருட போலி நட்பு.
அதையெல்லாம்
கவனிக்கும் அருகாமையில் அவர் இல்லை.
இந்த
மூவருக்கும் உள்ள ஒற்றுமை இவர்கள் தம் உயரத்தை தாமே தீர்மானித்து கொள்கின்றனர்.
அதனால்தான்
இவர்கள் தங்களின் சிறு சிறு இடர்பாடுகளுக்கு தோல்விகளுக்கு இன்னொரு பலி ஆட்டை தேடுவதில்லை.
இவர்களின்
வெற்றியை வளர்ச்சியை இவர்களின் ஜாதியோ மதமோ தீர்மானிப்பதில்லை.
இஅதையெல்லாம்
கடந்து இவர்கள் நிற்க முடியும் என்று நம்பினார்கள். நிற்கிறார்கள்.
இதுதான்
பகுத்தறிவு.
No comments:
Post a Comment