Thursday, February 07, 2019

#justiceforramalingam #arrehman #vaali #வாலி #ஏஆர்ரெஹ்மான்
எச்சரிக்கை:- தனிப்பட்டவர்களை குறை சொல்லும் அல்ல !!
திருபுவனம் ராமலிங்கம் அந்த வீடியோவில் மதம்
மாற்ற வந்த இஸ்லாமியரை கேட்கிறார்.
"என் தெருவில் உனக்கு நான் இன்று ஒரு வீடு வாங்கி தருகிறேன். உன் தெருவில் உன்னால் எனக்கு ஒரு வீடு வாங்கி தர இயலுமா "...நியாயமான கேள்வி.
இதற்கு அந்த இஸ்லாமியர் பதில் சொல்லாமல் நழுவி "வாங்க அய்யரு வீட்டில் போய் பொண்ணு கேட்போம்" என்கிறார்.
இங்கு நீங்க பார்க்க வேண்டியது யார் யாரை ஒதுக்குகிறார்கள் என்பதாகும்.
இது சம்பந்தமாக
இரண்டு சம்பவங்கள் இருவரும் திரைத்துறை கவிஞர்கள். ஒரே இசையமைப்பாளர்.
முதல் சம்பவம்:-
ரெஹ்மானின் அழைப்பின் பேரிலேயே கவிஞர் பிறைசூடன் தன் இயல்பாக நெற்றியில் வீபூதி குங்குமம் பூசி வந்தபோது ரெஹ்மானினின் எதிரில் அவரது தாயார் "இப்படியெல்லாம் இங்க வராதீங்க" என்று அவமதித்து அனுப்புகிறார்.

இரண்டாவது சம்பவம்:-
முருகனின் மீது மாறாத பக்தி கொண்ட பிறப்பால் அய்யங்க்காரான வாலி ஒரு நாள் இரவு 10 மணிக்கு பாட்டு கேட்டு தன் வீடு வந்த ஏ.ஆர். ரெஹ்மானுக்கு ரம்சான் நோம்பு முறிக்க இடம் தந்து (பிராத்தனை செய்ய இடம்) உணவும் தந்து விருந்தோம்பல் செய்கிறார்.

எந்த மதம் எதை விதைக்கிறது?😕
யார் யாரை மதிக்கிறார்கள் என்று புரிந்து கொள்க !
இந்த இரு சம்பவங்களில் ஒராரயிரம் அர்த்தங்களும் ,மூடி மறைக்கபடும், திரிக்கப் படும் பல ஆயிரம் காலத்து பெருந்தன்மைகளும் அடங்கியுள்ளது.
புரிந்தவன் புத்திசாலி.

ரவி சுந்தரம்🙏🙏
7/02/2019
பி.கு:- வாட்ஸ் அப்பில் பகிரும் நண்பர்களே !! தயவு செய்து என் பேரையும் போட்டு பகிருங்கள்.

Saturday, February 02, 2019

20 நூற்றாண்டின் இரண்டாம் உலக அரசியல் திருப்பு முனை

#iran #khomeini
சில நிகழ்வுகள் சரித்திரமாகின்றன. அந்த சரித்திர நிகழ்வுகள் ஒரு நாட்டை அல்லது சில சமயங்களில் உலகையே திருப்பி போட்டு விடுகின்றன. அப்படி ஒரு நிகழ்வு நடந்து இன்றுடன் 40 வருடமாகின்றது. 😮
சுதந்திரம், மனிதாபிமானம் என்கிற பார்வையில் மேற்குலகம் தன் கண்ணை தானே குத்திக் கொண்ட நாள். பிப் 1, 1979.
மேற்கு நாடுகளின் நண்பரும் ஈரானிய மன்னருமான ஷா பஹலவி க்கு எதிராக கிளம்பிய ஷியா பிரிவு இஸ்லாமியத்தின் தீவிரவாத குழு தலைவரான அயத்துல்லா ரோஹொல்லா கொமினி (சுருக்கமாக கொமினி) தனக்கு அடைக்கலம் கொடுத்த பிரான்சு நாட்டிலிருந்து நாடு திரும்பிய நாள் இன்று !!

டெஹ்ரானில் இறங்கி ஷாவை தான் வந்த அதே மேற்குலகுக்கு விரட்டி அடித்தார். பின் மிகவும் நன்றியுடன் அதே மேற்குலகை தன் நாட்டின் அனைத்து கெடுதிகளுக்கும் காரணம் என்று சுட்டிக் காட்டி கட்டம் கட்டி மிரட்டினார். இவர் எதிர்த்த ஷா பஹலவி இவரை கொல்ல முயன்றார் என்று தப்பித்து ஓடி வந்த போது தனக்கு அடைக்கலம் கொடுத்த மனிதாபிமான பிரான்சையும் விட்டு வைக்கவில்லை.

"எண்ணை கடலின் மீது மிதக்கும் கம்பளமாக நம் அரபு நாடுகளை வைத்தது அல்லா நமக்கு கொடுத்த கோடை. இதை கொண்டு உலகையே வெல்வோம்" என்று கர்ஜித்து உலகை பெட்ரோலிய பொருள்களுக்காக மண்டியிட வைத்தார்.
இதற்கு பிறகு உலக பொருளாதாரம் மற்றும் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தில் நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த ஒரு நிகழ்வே திருப்பு முனையாகியது. அதே சமயம் அரபு நாடுகளின் அபரிமிதமான (LOPSIDED) வளர்ச்சிக்கும் அடி கோலியது.
இதில் பெரும் சோகம் என்னவென்றால் இவர் காட்டிய வழியில் பெட்ரோலிய நாடுகள் காசு பார்த்தன. துபாய் போன்ற நாடுகளின் மக்கள் பெருவாழ்வு வாழ தொடங்கினர். ஆனால் இவரை வரவழைத்து கொண்ட்டாடிய ஈரான் ஒரு 30 ஆண்டுகள் பின்னுக்கு சென்றது. இவருடன் தெருவில் இறங்கி போராடிய சாமான்யர்கள் இன்றும் ஏழைகளாகவும் ஒடுக்கப் பட்டனர். எந்த சர்வாதிகாரியை ஒழித்து மக்களுக்காக என்று வந்தாரோ அவரே அந்த மக்களை மதத்தின் பெயரால் அடிமைபடுத்தினார். இன்று வரை அது தொடர்கிறது.
ஜனநயாகத்தின் நிழலில் வளர்ந்த கொடுங்கோலர் இவர். மத தீவிரவாதத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நியாயம் என் நம்புபவர். கருத்து சுதந்திரம் என்பது கத்திரிக்காய் என்று சல்மான் ருஷ்டி போன்றவர்களின் தலைக்கு விலை வைத்த மகான். அந்நிய மத மக்களை மனிதர்களாகவே இவர் மதிப்பதில்லை.
தனக்கு நிழல் கொடுத்த மரத்தையே வெட்டும் நன்றியுள்ள தலைவர் இவர்.
இஸ்லாத்துக்காக எதுவும் தவறில்லை என்பவர்.
இவரை விமர்சிப்பதால் இஸ்லாத்தின் ஒரு பிரிவான ஷியா பிரிவினரை விமர்சிப்பதா என்றால், அவர் தான் இஸ்லாத்தின் ஒரு பிரிவினருக்கான அடையாளம் என்றே தன்னை முன்னிறுத்தி கொண்டார். எனவே விமர்சனம் தவிர்க்க முடியாதது.
இவரை எதிர்க்கத்தான் மேற்குலகு சதாமை வளர்த்தது. மத்திய கிழக்கில் அமைதி பறிபோய் பல போர்களின் காரணமாக பல லட்சகணக்கான மக்கள் இறந்தனர். இன்னமும் இறக்கின்றனர்.

எப்படி ஜெர்மனி என்கிற ஒரு நாட்டின் ஹிட்லெர் என்கிற ஒற்றை தலைமை வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவின் சரித்திரமே மாறி உலகை பாதித்ததோ அதே போன்ற இவர் உலக சரித்திரத்தை பாதித்தார்.

40 வருடங்கள் முன்பு பிரான்ஸ் வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் உலக சரித்திரம் நிச்சயமாக வேறு மாதிரி இருந்திருக்கும். ஐரோப்பா மீண்டும் ஒரு முறை தவறு செய்தது.

நன்றி
ரவி சுந்தரம்.
01/02/2019

பி.கு :- இதிலிருந்து இந்தியா பாடம் படிக்க வேண்டுமா என்றால் நிச்சயம் பாடம் படிக்க வேண்டும்