Friday, August 20, 2010

பயங்கள் நிஜங்கள் ஆகும் அவலம்!

தமிழகத்தில் வெளி மாநிலத்தவரின் வரவு பற்றி என்னுடைய கவலை கீழ்கண்ட செய்தியினால் மேலும் உறுதிபடுகிறது!

கீழ் கண்ட செய்தி "ரிப்போர்டரில்" வந்தது.



பால்குடியை மறக்காத இரண்டே வயதான பெண் குழந்தையை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியிருக்கிறார்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்.இந்தக் கொடூரம் நிகழ்ந்தது பீகாரில் அல்ல.... தமிழகத்தில்தான்! ‘இனி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது’என்று கலெக்டரிடமும் புகார் கொடுத்திருக்கிறார்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ளது கணேசபுரம் மற்றும் முல்லை நகர். சிட்கோவில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்கிறார்கள். அவர்கள் இங்குள்ள வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தங்கியுள்ளனர். இதில் பீகார் மாநிலம்,சபாரியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திரா, திரிலோகி மற்றும் விக்ரம் ஆகிய மூன்று பேரும் முல்லை நகரில் ஒரு வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருந்த குடியிருப்பில் இரண்டு வயதுப் பெண் குழந்தையைக் காணாமல் அதன் பெற்றோர் அல்லாடித் தேடி யலைந்திருக்கிறார்கள்.

அப்போது தர்மேந்திராவும்,அவன் நண்பர்களும் தங்கியிருந்த வீட்டிற்குள்ளிருந்து வீலென்று குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. பதறித் துடித்த குழந்தையின் தாய் அந்த வீட்டிற்குள் அதிரடியாக உள்ளே நுழைந்திருக்கிறார். அங்கே, கதறியபடி அந்தக் குழந்தை கிடந்திருக்கிறது. அதைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தால் அதன் தொடை, காலெல்லாம் ரத்தமும், ரத்தக்காயங்களும் இருந்துள்ளன. அதிர்ந்துபோன குழந்தையின் தாய் அங்கிருந்த தர்மேந்திரா உள்ளிட்ட மூவரிடமும் என்ன நடந்தது என்று கேட்க,அவர்கள் மொழியில் ஏதேதோ உளறியிருக்கின்றனர்.

அதன்பிறகு குழந்தையை மருத்துவரிடம் எடுத்துக்கொண்டு பெற்றோர் ஓட, அவர் அதைப் பரிசோதித்துவிட்டு, ‘யாரோ பாலியல் வன்முறைக்குக் குழந்தையை ஆளக்கியிருக்கிறார்கள்!’என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். பெற்றோரும், அந்தப் பகுதி மக்களும் ஆத்திரத்துடன் அந்த வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் செ ன்றுள்ளனர். அதற்குள் அவர்கள் எஸ்கேப் ஆகிவிட,போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, போலீஸார் பல்வேறு இடங்களில் தேடியலைந்து தர்மேந்திரா,திரிலோகியைக்கண்டுபிடித்து விசாரித்துள்ளனர்.
அவர்களிடம் விசாரித்ததில், மூன்று பேரும் அன்று நல்ல குடிபோதையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருக்க, அதைத் தூக்கி வந்து வீட்டிற்குள் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.பிடிபட்ட இருவரையும் சிறையில் அடைத்த போலீஸ், தப்பிச் சென்ற இளைஞரைத் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி,முல்லை நகர் மட்டுமல்லாமல் அதன் அருகாமையில் உள்ள கணேசபுரத்திலும் பரவ,அங்குள்ள மக்கள் கொதித்துப் போனார்கள். .

‘வாடகைக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவர்களை குடிவைத்து விடுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் அட்டூழியம்தான். இவர்களை இனியும் ஊ ருக்குள் வைத்திருந்தால் எங்கள் ஊரில் பெண்கள் மட்டுமல்ல, பெண் குழந்தைகளும் வாழ முடியாது. அவர்கள் அத்தனை பேரையும் ஊரைவிட்டுக் காலி செய்ய வே ண்டும்!’ என்று கோரிக்கை வைத்து இங்குள்ள பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தை கடந்த திங்களன்று முற்றுகையிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இரவோடு இரவாக இந்தப் பகுதிகளில் உள்ள மக்களே எந்தெந்த வீடுகளில் பீகாரிகள் தங்கியிருக்கிறார்களோ அங்கெல்லாம் போய்அவர்களைத் துரத்தியடிக்கும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார்கள். இதில அரண்டுபோன பீகார் இளைஞர்கள், தாங்கள் வேலை செய்யும் கம்பெனிகளில் தஞ்சமடைய அவர்களில் பலர் சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.அப்படிப் போக முடியாதவர்கள் தற்போது அந்தந்த கம்பெனிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ‘யாரோ தவறு செய்ததற்காக ஒட்டுமொத்த பீகாரிகளையும் ஊரைவிட்டே விரட்டுவது எப்படி நியாயமாகும்? எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்!’ என்று சொல்லி சில தொழிற்சங்கவாதிகளும், கம்பெனி அதிபர்களும் கோவையில் உள்ள உயரதிகாரிகளைச் சந்தித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கலெக்டரிடம் புகார் செய்த பாரதி சுயஉதவிக்குழு ஊக்குனர் ராதாமணியிடம் பேசினோம்.“வாடகைக்கு ஆசைப்பட்டு ஒரு சிறிய அறையில் இருபது பீகாரி களைத் தங்க அனுமதிக்கிறார்கள். தலைக்கு முந்நூறு என ஆறாயிரம் ரூபாய் வீட்டுக்காரர்களுக்கு கிடைக்கிறது. இப்படி அதிகமான வாடகை கிடைப்பதால் வீட்டுக்காரர்கள் இந்த பீகாரிகள் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதேயில்லை. ரோட்டில் வயதுப் பெண்கள் நடந்து செல்லமுடியாது.அவர்களைப் பார்த்து எங்களுக்குப் புரியாத மொழியில் கிண்டலடிப்பதும், சிரிப்பதும் நடக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு 13வயசுச் சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதை அக்கம்பக்கத்தவர்கள் பார்த்து சத்தம் போட, அந்த வீட்டில் குடியிருந்த பீகார்காரன்கள் அத்தனை பேரும் தப்பி ஓடிவிட்டார்கள்.இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று சொல்லி விட்டுவிட்டோம். இப்போது இந்தக் கொடுமை. இனிமேல் அவர்கள் யாரும் இந்தப் பகுதியில் இருக்கவே கூடாது’’ என்றார் ஆவேசமாக.

“சின்ன குழந்தையை அவனுக பலாத்காரம் செய்த சம்பவத்தைக் கேள்விப்பட்டாலே ரத்தம் கொதிக்குது.ஆனால்,அவனுகளுக்குப் பாதுகாப்புக் கோரி அலைகிறது ஒரு கூட்டம். இதை எப்படி அனுமதிக்க முடியும்? இதை நான் முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்குப் புகாராக அனுப்பியுள்ளேன்!’’ என்றார் தி.மு.க பிரதிநிதியான தினகரன்.



இதுபற்றி குறிச்சி நகராட்சித் தலைவர் பிரபாகரனிடம் விளக்கம் கேட்டபோது,“சில பீகார் இளைஞர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்தமாக அவர்களை அடித்து விரட்டி யிருக்கிறார்கள். அவர்களை எங்கள் கம்பெனிகளில் தங்கவைத்து பாதுகாப்புக் கொடுக்கிறோம். ‘அவர் களை வெளியே விரட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வெவ்வேறு போராட்டங்களைச் செய்ய வேண்டிவரும்’ எனச் சொல்லி சில அமைப்புகள் மிரட்டுகின்றன. இதைச் சரிக்கட்ட பணமும் எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ‘எங்களிடம் வேலை பார்க்கும் பீகார்காரர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’என்று சொல்லி சில கம்பெனிக்காரர்கள் தலைவர் என்ற முறையில் என்னிடம் வந் தார்கள். அவர்கள் பாதுகாப்பை உயர் போலீஸ் அதிகாரிகளிடம்தான் கோரவேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டேன். மற்றபடி அவர்களுக்காக நான் பரிந்து கொண்டு எந்த விஷயத்திற்கும் செல்லவில்லை!’’ என்றார் அவர்.
நன்றி:- ‍ ரிப்போர்டர்

ஏற்கனவே பம்மல் பல்லாவரம் போன்ற பகுதிகளில் இது போன்று பல செய்திகள் வந்துள்ளன.

இது போன்று இன்னும் பல சோகங்கள் பரவலாக செய்தியாகியுள்ளன.

அதிகாரிகளும் பொது மக்களும் விழிப்புடன் இருப்பது நல்லது.

Friday, August 13, 2010

கொலையும் கொலையைச் சார்ந்த‌ இட‌ங்க‌ளும்


சமிப காலங்களாக தமிழகத்தில் (இதன் செய்தியைத் தான் தினமும் வாசிப்பதால்) கொலை மற்றும் கொள்ளை அதிகமாக நடக்கத் தொடங்கிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமாக காதல், கள்ள காதல, பண விவகாரங்கள் மற்றும் பழிக்குப் பழி வாங்குதல் என்று சொல்லலாம்.

இப்படி காரணங்களை வகைப்படுத்தினாலும் ஒரு கொலை செய்யும் அளவுக்கு தமிழனின் மனம் இறுகிப் போவதென்பது இன்றும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.


முன்பெல்லாம் அத்தி பூத்தார் போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ ந‌ட‌ந்து வ‌ந்த‌ கொலை போன்ற‌ வ‌ன்முறைக‌ள் இன்று மிக‌ அதிக‌ அள‌வில் ந‌ட‌ப்ப‌த‌ற்காவே புள்ளி விவ‌ர‌ங்க‌ள் சொல்கின்றன‌. ம‌க்க‌ள் தொகை பெருக்க‌ம் ம‌ட்டும் இத‌ற்கு கார‌ண‌ம‌ல்ல‌. இதையும் புள்ளிவிவ‌ர‌ ச‌த‌விகித‌ங்க‌ள் நிருபிக்கின்ற‌ன‌


இந்த நிலைக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணமாக நான் நினைப்பதை ஆராய்வோம்.


சென்னை போன்ற பெரு நகரங்களில் தொழிற்சாலை மற்றும் பற்பல கட்டுமான பணிகளில் வேலை செய்ய பெருமளவு மற்ற மாநிலங்களிலிருந்து பணியாளர்கள் (பெரும்பாலும் படிக்காதவர்கள்) வந்து குடியேறுகின்றனர். மேலும் கணிணி மற்றும் ப‌ல்வேறு துறைக‌ளில் ப‌ணி செய்ய‌ ப‌டித்த‌ வெளிமாநில‌த்த‌வ‌ரும் பெரும‌ள‌வு குடியேறுகின்ற‌ன‌ர்.

வ‌ள‌ர்ச்சியின் பாதையில் போகும் போது இது போன்ற‌ குடியேற்ற‌ங்க‌ளை த‌வ‌ரிக்க‌ இய‌லாது என்ப‌து உண்மையே.

ஆனால் இப்ப‌டி வ‌ரும் வெளி மாநில‌த்த‌வ‌ர் வ‌ரும் போது த‌ம் மாநில‌த்தின் க‌லாசார‌த்தையும் அல்ல‌வா கூட்டி வ‌ருகின்ற‌ன‌ர். அதாவ‌து பிகார், ஒரிசா, ம‌ற்றும் ம‌த்திய‌ பிர‌தேச‌ மாநில‌த்த‌வ‌ர்க‌ளுக்கு ச‌ட்டம், ஒழுங்கு, காவ‌ல் துறை இவையெல்லாம் கொஞ்ச‌ம் அந்நிய‌ப்ப‌ட்ட‌வை. த‌வ‌றாக‌ப் புரிந்து கொள்ளாதீர்க‌ள். இந்த‌ மாநில‌ங்க‌ள் பொதுவாக‌ பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ மாநில‌ங்க‌ள். இவைக‌ளில் பெரும‌ள‌வு இன்னும் பிர‌புத்துவ‌ம் ம‌ற்றும் ஆண்டான் அடிமை த‌த்துவ‌ம் ஊறி திளைக்கிற‌து. நில‌ப் ப‌ங்கீடு இன்னும் பெரிய‌ அள‌வில் விரிவ‌டையாத‌ அல்ல‌து முழுமையாக‌ நிறைவேற்ற‌ப்ப‌டாத‌ விஷ்ய‌ங்க‌ள்தான். அவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை காவ‌ல்துறை பெரிதாக‌ ஒன்றும் சாதிக்காத‌, ஒரு கையாலாக‌த‌ துறையாக‌வே பார்க்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. வ‌ன்முறைதான் இவ‌ர்க‌ளுக்கு கால‌ம் கால‌மாக‌வே நீதியை நிலைநாட்டும் உத்தியாக‌க் கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ந்துள்ள‌து. இவையெல்லாம் வெள்ளைக்கார‌ன் கால‌த்திற்கு முன்பிருந்து (குப்த‌ சாம்ராஜ்ஜிய‌ கால‌த்திலிருந்து) வ‌ழிவ‌ழியாக‌ காண‌ப் ப‌ட்டு வ‌ரும் ச‌ரித்திர‌ உண்மைக‌ள்.

இவ‌ர்க‌ள் செய்வ‌து நியாய‌மா இல்லையா என்ப‌து வேறு விஷ்ய‌ம்.
ஆனால் அது த‌மிழ்க‌த்தை எப்ப‌டி பாதிக்கிற‌து என்ப‌து கேள்வி.

இப்ப‌டிப் ப‌ட்ட‌ வ‌ன்முறையில் ம‌ட்டும் ந‌ம்பிக்கை வைத்துள்ள‌ ஒரு க‌லாசார‌த்திலிருந்து வ‌ரும் இவ‌ர்க‌ள் இங்கே வ‌ந்த‌வுட‌ன் காணும் விஷ்ய‌ங்க‌ள் இவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து இந்த‌ ம‌ன‌நிலையேயே த‌ங்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளை அணுக‌ உத‌வுகிறதா?.

அதாவ‌து ஊட‌க‌ங்க‌ளில் அறுவா தூக்குவ‌தை ஒரு "ஸ்டைலாக‌" பேணுவ‌தையும், கொலை செய்வ‌தை "த‌ர்ம‌மாக" நியாய‌ப்ப‌டுத்துவ‌தையும் இந்த‌ விருந்தாளிக‌ள் த‌மிழ‌க‌த்தின் க‌லாசார‌ம் என்றே நினைக்கின்றனரா?

த‌மிழ‌க‌த்தின் க‌லாசார‌ம் இதுவா?

இல்லையென்றே தோன்றுகிற‌து.

ச‌ரித்திர‌த்தை பார்க்கும் போது வ‌ன்முறை ந‌ம‌து க‌லாசார‌ம் இல்லையென்றே தோன்றுகிற‌து.

சுத‌ந்திர‌த்திற்காக‌ நாடே தீப்ப‌ற்றி எறிந்த‌ போது கூட‌ நாம் காந்திய‌ வ‌ழியில் அதாவ‌து சாதார‌ண‌ போராட்ட‌ங்க‌ளே அதிகம் ந‌ட‌த்தி ந‌ம் எதிர்ப்பைத் தெரிவித்தோம். வாஞ்சி நாத‌ன் ஒரு விதிவில‌க்கு.

ம‌ற்ற‌ப‌டி 1857ல் முத‌லாம் இந்திய‌ சுத‌ந்திர‌ போர் (சிப்பாய் க‌ல‌க‌ம் என்று வெள்ளைக்கார‌ன் சொன்னான்!) ந‌ட‌ந்த‌ போது கூட‌ அதை அட‌க்க‌ ந‌ம் சென்னை ராஜ‌தானியிலிருந்துதான் ப‌டைக‌ள் சென்று அட‌க்கிய‌தாக‌ வ‌ர‌லாறு.தொடர்ந்து தென்ன‌க‌ம் அமைதி பூங்க‌வா (மெய்யாலுமே!) இருந்து அத‌ன் ப‌ய‌னாய் ப‌ல‌ க‌லைக‌ளில் சிற‌ந்து விள‌ங்கிய‌த‌ற்கு ப‌ல‌ உதார‌ண‌ங்க‌ள் சொல்ல‌லாம்.

தென்னிந்தியா குறிப்பாக‌ த‌மிழ‌க‌ம் பெரிய‌ அள‌வில் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ ஒரே விஷ‌ய‌ம் இந்தி எதிரிப்பு ம‌ட்டுமே. அப்போது கூட‌ காவ‌ல்துறை சூட்டினால் பொது ம‌க்க‌ள் மாண்ட‌ன‌ரே ஒழிய‌ "செள‌ரி செள்ரா" போன்று ‌ ப‌டுகொலைக‌ள் பொது மக்களால் நிறை வேற்ற‌ப்ப‌ட‌வில்லை.

கோய‌ம்ப‌த்தூர் வெடி வைப‌வ‌ம் வேறு விஷ‌ய‌ம். (இதை த‌னியாக‌த்தான் பார்க்க‌ வேண்டும்.).



இப்ப‌டிப் ப‌ட்ட‌ த‌மிழ‌க‌த்தில் இன்று சுமார் 200 ரூபாய்க்கு ஒரு கொலை செய்ய‌ப்ப‌டுகிற‌து என்ப‌து அதிரிச்சியாக‌ இருக்கிற‌து.


பிர‌ச்ச‌னைக‌ளுக்க்கான‌ தீர்வு "ஆளை தூக்கற‌துதான்" என்ப‌தாக‌ போன‌து எவ்வ‌ள‌வு வேத‌னை.?

க‌ள்ள‌ காத‌லா? பெண்ணை கொல்லு. இல்லையே அந்த‌ பெண் க‌ள்ள‌ காத‌ல‌னுட‌ன் சேர்ந்து க‌ண‌வ‌னை கொல‌வாள்.

ப‌ண‌ம் கேளு. கொடுக்காவிட்டால் ஆளை கொல்லு.

கொள்ளை அடி. அத‌ற்கு முன்பு சாட்சியாக‌ யாரையும் விட்டு வைக்காதே.
(இந்த‌ மாதிரி கொள்ளைய‌டிக்கும் முன்பு அந்த‌ வீட்டில் இருக்கும் அனைவ‌ரையும் போட்டுத் த‌ள்ளு முறை உத்திர‌ பிர‌தேச‌ ம‌ற்றும் ம‌த்திய‌ பிர‌தேச‌த்தை சேர்ந்த‌ ஒரு இன‌த்த‌வ‌ருக்கு வ‌ழி முறையாக‌வே கொள்ள‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ விஷ்ய‌ம‌ 1980க‌ளில் டெல்லியில் பெரும‌ள‌வு கொள்ளைக்காக‌ கொலை ந‌ட‌ந்த‌ போது விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. ப‌ல‌ கொலைக‌ளில் இந்த‌ விஷ்ய‌ம் உண்மை என்றே நிருப்பிக்க‌வும்ப‌ட்ட‌து. இங்கு ஒரு விஷ‌ய்த்தை க‌வ‌னிக்க‌ வேண்டும். 1980க‌ளிலும் டெல்லி மிக‌ வேக‌மாக ‍‍இன்று சென்னை வ‌ள‌ர்வ‌தைப் போல‌ வ‌ள‌ர்ந்த‌து.)


முன்பெல்லாம் சென்னை வ‌ரும் வ‌ட‌நாட்டின‌ர் யாரைக் கேட்டாலும் ந‌ம் ஊரின் அமைதியையும் மென்மையான‌ ம‌க்க‌ளையே புக‌ழ்வார்க‌ள்.

ந‌ம‌க்கு தெரிந்த‌தெல்லாம் ஜேப்ப‌டி திருட்டு, ஏமாத்தி திருடுவ‌து, போன்ற‌ சில்லைறை விஷ்ய‌ங்க‌ள்தான்.

அப்ப‌டியெல்லாம் இருந்த‌ த‌மிழ‌க‌ம் இன்று இப்ப‌டி மாறிய‌த‌ன் கார‌ண‌ம் என்ன‌?
காவ‌ல்துறை ஊழலில் முழுகி பொது ம‌க்க‌ளை கைவிட்ட‌த‌ன் கார‌ண‌மாக‌ ம‌க்க‌ளே நீதி வ‌ழ‌ங்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌ரோ? ‍

நீதித்துறை வ‌லுவிழ‌ந்து நீதி வ‌ழ‌ங்க‌ தாம‌த‌மாகி போவ‌தினால் இளைஞ‌ர் ச‌முதாய‌ம் கொலைதான் நியாய‌ம் என்று நினைக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌தோ?

ஊழ‌லில் முழுகிய‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் காவ‌ல் ம‌ற்றும் நீதித்துறையின் அல‌ட்சிய‌த்தால் எதையும் செய்ய‌லாம் என்று தொட‌ங்கி கொலையில் முடிகிற‌தோ.?

வெளிமாநில‌த்த‌வ‌ர் ந‌ம்மிட‌மிருந்து க‌ற்க‌ ஒன்றும் இல்லாம‌ல் போன‌தால் ந‌ம‌க்கு இந்த‌ வ‌ன்முறை தீர்வை க‌ற்றுக் கொடுத்துவிட்ட‌ன‌ரோ?


ந‌ம் ஊட‌க‌ங்க‌ள் கொலை ம‌ற்றும் உயிற் ப‌றிப்பின் வேதனைக‌ளை ம‌றைத்து அவைக‌ளை சாத‌னைக‌ளாக்கிவிட்ட‌ன‌வோ?

கொலைக‌ளை நியாய‌ப்ப‌டுத்தியும் ஊக்குவிப்ப‌தை போல‌வும் ப‌ட‌ம் எடுப்ப‌தையே பெருமையாக‌ச் சொல்லும் ஊட‌க‌வியாள‌ர்க‌ளுக்கு ஒரு கொலையின் பின்னாடி உள்ள‌ சோக‌ம் தெரியுமா?

கொல்ல‌ப்ப‌ட்ட‌வன் குடும்ப‌மும் ந‌டுத்தெருவுக்கு வ‌ருகிற‌து. கொன்ற‌வ‌னின் குடும்ப‌மும் ந‌டுத்தெருவுக்கு வ‌ருகிற‌து.

அது மட்டுமல்ல அப்படி நடத்தெருவுக்கு வரும் குடுமபத்திலிருந்து வரும் இன்னொரு தலைமுறை வன்முறையிலிருந்து பாடம் கற்காமல் "பழிக்குப் பழி" என்று மீண்டும் அதே சகதியில் ஊற காரணம் என்ன?

இதை யார் ப‌திவு செய்வ‌து?

கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌னின் குடும்ப‌ சோக‌த்தை கொலை செய்த‌வ‌ர் பார்த்தால் நிச்ச‌ய‌ம் அவ‌ர் அந்த‌ கொலையை செய்த‌திற்கு உண்மையாக‌ வ‌ருந்துவார்.
இன்னொரு முறை க‌த்தியை தூக்க‌ மாட்டார். ஆனால் அதை அவ‌ருக்கு அந்த‌ சோக‌த்தை

யார் எப்ப‌டி உண‌ர்த்துவ‌து?
இதில் ஊட‌க‌ங்க‌ளில் ப‌ங்கு என்ன‌?
ஏன் செய்ய‌வில்லை.?

தொட‌ர்ந்து அறுவா தூக்குப‌வ‌னே ஜெயிப்ப‌தாக‌ காட்டி காட்டி ஒரு இர‌ண்டு த‌லைமுறையை கெடுத்துவிட்டோம். இன்று வ‌ரும் மூன்றாம் த‌லை முறை உண்மையில் இப்ப‌டி வாழ்ந்தால் த‌ப்பில்லை என்று நினைக்கும் அள‌வுக்கு அவ‌ர‌து உண‌ர்வுக‌ள் ம‌ற‌த்துவிட்ட‌ன‌.

பெரும்பாலும் ச‌ரியான‌ க‌ல்வி க‌ற்ற‌வன், குடும்பத்தில் நல்ல முன்னுதாரனம் கண்டவன், இந்த‌ மாயையிலிருந்து த‌ப்பித்து செல்கிறான். அப்ப‌டி கல்வி க‌ற்காத‌வனும் வீட்டில் சரியான முன்னோடி இல்லாதவனுமே இந்த‌ ச‌க‌தியில் மாட்டிக் கொள்கிறான். இது நியாய‌மா?


இது மாற‌வேண்டாமா?

உள‌விய‌ல்ரீதியாக‌ ந‌ம் ச‌முதாய‌த்தில் ஒரு மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ வேண்டாமா?


நிச்ச‌ய‌மாக‌ இந்த‌ "எத‌ற்கெடுத்தாலும் கொலை" என்கிற‌ ம‌னோநிலைக்கு உள‌விய‌ல் ரீதியாக‌ கார‌ண‌ங்க‌ள் இருக்க‌ வேண்டும்.

ஒரு பொறுப்புள்ள‌ ச‌முதாய‌மாக‌ நாம் கார‌ண‌ங்க‌ளை ப‌ல்வேறு த‌ள‌த்தில் தேட‌ வேண்டும்.

வெளி மாநிலத்தவரின் குடியேற்ற‌ம் ப‌ற்றிய‌ என்னுடைய‌ கேள்வி ஒரு சிறிய‌ முய‌ற்ச்சிதான். அது ம‌ட்டுமே நிச்ச‌ய‌மாகன‌ கார‌ண‌ம் அல்ல‌.

வேறு என்ன‌ கார‌ண‌ங்க‌ளாம் நாம் ம‌னித‌ர்க‌ள் என்கிற‌ நிலையிலிருந்து வெகு வேக‌மாக‌ மிருக‌ங்க‌ள் என்கிற‌ நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ப‌தை ஆராய‌த‌ல் வேண்டும்.

மிக‌ அவ‌ச‌ர‌மாக‌ இந்த‌ விஷ்ய‌த்தில் ஒரு ச‌முக‌ விவாத‌ம் வ‌ந்து தெளிவு தேட‌ வேண்டும்

ஆராய‌ ம‌றுப்ப‌து ந‌ம் த‌மிழ் ச‌முதாய‌த்திற்கு ந‌ல்ல‌த‌ல்ல‌.
இது போன்று ஒரு மெத்த‌ன‌ம் அபாய‌க‌ர‌மான‌து.

பின்பு திருத்த‌ முடியாத‌ அள‌வுக்கு த‌மிழ‌க‌த்தின் உண்மையான‌ க‌லாசார (இன்னும் எங்காவ‌து மிச்ச‌ம் இருந்தால்!) முக‌ம் சிதைந்து போகும்.

Saturday, August 07, 2010

திரு. ஜெமோவுக்கு இன்னுமொரு விளக்கம்

எழுத்தாளர் சுஜாதாவை யாரும் விமர்சனமே செய்யக்கூடாதா? என்று சிலர் கேட்கலாம். ஒரு எழுத்தாளரை எப்படி விமர்சிக்கலாம் என்று இன்னொரு
எழுத்தாளருக்கு நாம் சொல்லித் தரவேண்டிய நிலையில் தமிழ் கூறும் நல்லுலகம் இருப்பது மிகவும் கேவலம்.


ஒரு வாசகனாக, விஞ்ஞானியாக (இவருக்கு உண்மையிலேயெ அறிவியல் தெரியும் ஐயா!!) திரு.சுஜாதாவை சில முறை சந்தித்தவராக, திரு.சுஜாதாவிற்கு சில அறிவியல் விஷ்யங்களை தெளிவு படுத்தியவராக (அடிக்கோடிட வேண்டிய செய்தி!) இருக்கும் திரு. வெங்கட் என்பவர் திரு.சுஜாதா இறந்தவுடன் எழுதிய இரங்கல் செய்தியில் எழுதியிருப்பதை கீழ் காணுங்கள்..திரு.ஜெமோவுக்கு பண்புடன் எப்படி எழுதுவது என்பது பழக்கப்படும்.

""சற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது.

ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொன்னூறு சதவீதத்தினரின் எழுத்துக்களில் இரண்டு பக்கங்களுள் ஒரு தடவையாவது சுஜாதா-வைக் காணமுடியும்.

என் பள்ளிப் பருவங்களில் சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் உருவகித்துக் கொண்டு ஸ்டெப் கட்டிங், சாக்பீஸைத் தூக்கிப்போட்டு வாயால் பிடித்தல் என்று தங்களுக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் எனக்காக நான் வரித்துக் கொண்ட தோற்றம் வஸந்த். அது “மோபெட்டில் ஏறி ஆக்ஸ்லரேட்ட எட்டு நொடிக்குள் அறுபது” என்று செயலில் துரிதம் காட்டுவதிலும், அடுத்தத் தெரு உஷாவிடம் அபத்த ஜோக் சொல்லவும், மதியம் தூங்கி எழுந்தவுடன் பேச்சு குளறும் பாட்டிக்கு வந்திருப்பது மயஸ்தேனியா க்ராவிஸ் என்று வாயில் நுழையாத பெயரைச் சொல்லி மாமாவைப் பயமுறுத்தவும், நீண்ட நேரமாக கட்டைப் போட்டு ஓவர்களை வீணடிக்கும் பீக்காசுவை ‘ஹேபியஸ் கார்பஸில்’ வெளியே அழைக்கிறேன் என்று எதிர் காப்டனிடம் சொல்லவும், செஸ்ஸில் தோற்றுப் போன வக்கீல் மாமாவிடம் ரை லோபெஸ் ஒப்பனிங்க்கு நைட்டை வெட்டுக்கொடுத்ததுதான் உங்கள் தோல்விக்குக் காரணம் என்று அவர் முகத்தில் பேஸ்த் அடிக்கச் சொல்லிவிட்டு நகர்வதற்கும் இன்னும் இத்யாதி மூளை, ஆண்மை, இளமை சமாச்சாரங்களுக்கும் நம்மிடம் இருக்கும் வஸந்த்-தனம்தான் காரணம் என்ற பதின்மக் கதாநாயகக் கனவுகளுக்குப் பேருதவியாக இருந்தது.
வானொலி மாமா சோதனைகள் என்று குழந்தைத்தனமாகவும், பொழுதுபோக்கு பௌதீகம் என்று வறட்சியாகவும் வாசித்துக் கொண்டிருந்த தமிழில் சிலிக்கன் சில்லுப் புரட்சியைக் கொண்டு வந்தவர் சுஜாதா. ஸ்பான், ஸ்பூட்னிக், கூரியர், சயண்டிபிக் அமெரிக்கன், நேஷனல் ஜியாகரபிக் சமாச்சாரங்களை ‘சுடச்சுட” அந்தக் காலங்களில் தமிழுக்குக் கொண்டுவந்தவர். என்னுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றியமைத்ததில் அவருக்கும் கொஞ்சம் பங்குண்டு. நான் பத்தாம் வகுப்பு முடித்து +2 செல்லும்பொழுது மிகச் சூடாக இருந்தது “காமெர்ஸ் க்ரூப்” படிப்பு (எக்கனாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்ஸி, கணக்கு) என்னுடன் படித்த சகாக்கள் எல்லோரும் சிஏ-ஆவதைக் கனவாகக் கொண்டு வர்த்தகப்படிப்பில் நுழைந்த பொழுது இயல்பியலிலும், பொறியியலிலும் சுஜாதா (யா.பெர்ல்மான், ரைட்னிக், ஈறாக) கட்டுரைகள் என்னை வர்த்தக வழிசெல்லாமல் தடுத்தாட்கொண்டு அறிவியலுக்கு வரவழைத்தது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கணினி வருகிறது என்று சுஜாதா எழுதும்பொழுதுதான் காகிதங்கள் வாயிலாக மாத்திரமே அறிந்திருந்த ஒன்றிலிருந்து நாம் நீண்ட காலம் தப்பமுடியாது எனவே இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று படிக்கும் ஆர்வம் வந்தது.

பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் பல தமிழ் மன்ற ஆண்டு விழாக்களுக்கு சுஜாதாதான் ஆஸ்தான தலைவர்). ஐஐஎஸ்ஸியில் படிக்கும்பொழுது சிலமுறைகள் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புகளில் அவரது கூர்மையான அவதானிப்பை நேரடியாக அறியமுடிந்தது. முதல் தடவை ஒரு சாவகாசமான சனிக்கிழமை காலை, இரண்டு மணி நேர இலக்கில்லா அரட்டைக்கு இடையில் மழைவிட்டிருந்த பொழுது காப்பி குடிக்கச் சென்றோம். ஓய்ந்த மழைக்குப்பின் ஐஐஎஸ்ஸின் சாலைகள் கழுவிவிடப்பட்டதுபோல் கருப்பாக, பளபளப்பாக மிகக் கவர்சியாக. சாலையின் இரு ஓரங்களிலும் கரையிட்டதுபோல் மஞ்சள் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அந்தப் பூக்களைப் பற்றிய பேச்சு வந்தது. இது என்ன பூ என்றார். நான் சரக்கொன்றை என்றேன். இதுக்கு இங்கிலீஷ்ல என்ன பேர் தெரியுமா என்று கேட்டார்? அவர் அறிந்திருக்கவில்லை. என் நண்பர் ஒருவர் இண்டியன் லேபர்னம் என்று சொன்னார். இந்தச் சந்திப்புக்கு அடுத்த இரண்டு வாரத்தில் கல்கியில் ஒரு புதிய தொடரை ஆரம்பித்தார் (தலைப்பு நினைவில் இல்லை, அது ஒரு பெங்காலி பேராசிரியரையும் அவரது இளம் மாணவியையும் பற்றிய கதை). அந்தக் கதையே இப்படித்தஅன் துவங்கும் “இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் இன்னதேதியில் சொல்லிவைத்தால்ப்போல் பெங்களூர் சாலையோரமெங்கும் மஞ்சள் பூக்கள் பூக்கட்டும்” எங்களுக்கும் சுஜாதாவுக்கும் நடந்த அதே இண்டியன் லேபர்னம் உரையாடல் எந்த மாற்றமுமில்லாமல் அந்த ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையில் கதையில் நடந்தது.

இரண்டாம் முறை இன்னும் சுவாரசியமானது. அப்பொழுது விகடனில் ‘நிலா நிழல்’ ‘என் இனிய இயந்திரா’ தொடர் மிகப் பிரபலமாக நடந்துகொண்டிருந்தது. அதில் ஸ்டார் வார்ஸைப்போல லேசர் ஆயுதமெல்லாம் வரும். ஒரு இடத்தில் லேசர் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தப்படும்பொழுத்து ஜீனோ என்ற இயந்திர நாய் நிதானமாக உன்னிடம் இருக்கும் லேசரின் பவர் அதன் கொகரென்ஸில் இருக்கிறது, நான் அதைப் போக்கி உன் துப்பாக்கியை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்று சொல்லும். அந்த சந்திப்பின் பொழுது எங்கள் ஆய்வகத்திலிருந்த லேசர்களை அவருக்கு இயக்கிக் காட்டிக்கொண்டிருந்தோம். (அந்தத் தொடருக்காகவே எங்கள் லாப்-க்கு வந்தாரோ என்று தோன்றுகிறது). அப்பொழுது coherence என்பது லேசரின் அடிப்படைப் பண்பு என்றும் அதை அவ்வளவு எளிதில் மாற்றமுடியாது என்றும் அவரிடம் சொன்னோம். தொடர்ந்து அப்பொழுது இந்திய இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திற்காக நான் செய்துகொண்டிருந்த Optical Phase Conjugation என்ற சோதனையை அவருக்கு விவரித்தேன். அதன் முக்கியமான இலக்கு ஒரு auto-tracking ஆடி போன்ற அமைப்பை உருவாக்குவது. இது ரொனால்ட் ரீகனின் ஸ்டார் வார்ஸ் ப்ரொக்ராம்க்குப் (Strategic Defense Initiative) பதில் சொல்ல வேண்டி இந்தியாவின் முயற்சிகளில் ஒன்று. வானில் பறக்கும் விமானத்திலிருந்து ஏவப்படும் லேசரை அதனிடமே திருப்பியனுப்பும் உத்தி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

அடுத்த வாரம் கதையில் ஜீனோவின் decoherence எல்லாம் பம்மாத்து சும்மா சுடு என்று சக காவலனிடம் ஒருவன் சொல்ல, அவன் சுட ஜீனோ phase conjugate mirror ஐப் பயன்படுத்தி அவனிடமே லேசரைத் திருப்பியனுப்பி அழிக்கும். நான் பழகிய மனிதர்களில் இத்தனைக் கூர்மையான அவதானம் கொண்டவர்கள், அந்த அவதானத்தை சுவரசியாமான உரைநடையாக்கம் செய்யும் திறன் கொண்டவர்கள் மிகச் சிலரே.

சுஜாதாவின் முதல் திரைப்பிரவேசம் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும் என்று தொடர்ச்சியாக அவர் கதைகள் திரைச்சேதம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இரண்டாம் வருகையில் அவருக்கு மாபெரும் வெற்றி ரோஜா, முதல்வன், இந்தியன், அந்நியன், ஆய்த எழுத்து, சிவாஜி என்று அவர் பங்களித்த படங்களில் பல மாபெரும் வெற்றியைப் பெற்றவை. எழுத்துக்கும் திரைக்கும் இடையில் சப்தமில்லாமல் சில நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதினார். பூர்ணம் விஸ்வநாதன் உதவியுடன் அபத்தத் துணுக்குத் தோரணங்களிடமிருந்து மேடை நாடகங்களை மீட்டெடுக்கும் முயற்சி பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும்கூட என்னைப் பொருத்தவரை அவர் ஆத்மார்த்தமாகச் செய்த ஒரே காரியம் இதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.

பலரும் எழுத்துத் துறையில் சுஜாதா அசாத்திய சாதனைகளைச் செய்து முடித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அவர் எழுதுபதுகளில் கட்டியம் கூறிய வருகை நிறைவேறவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் வர்த்தக ரீதியான அவரது அசாத்திய சாதனைகள். அலுங்காமல் போகிற போக்கில் எழுதுபவை பெருவெற்றியைப் பெறுவதும் ஒன்றிரண்டு உண்மை முயற்சிகள் தோல்வியைத் தருவதும் அவரது எழுத்தின் போக்கை முழுமையாக நிர்ணயித்துவிட்டன. அதன் காரணமாகவே அவர் எந்த ஆழமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லாவற்றிலும் தகவல் தெரிய ஒரு சுஜாதா போதும் ஆனால் எவற்றிலும் முழுமையான புரிதலை அவர் தந்ததில்லை. பெயர் உதிர்த்தல், ஜல்லியடி போன்று அவர் பிரபலமாக்கிய சில வார்த்தைகள் அவருக்கே முழுமையாகப் பொருந்திப்போவது வருத்தமான விஷயம்.

வேலைக்கிடையில் எந்தவிதமான ஆழமான முயற்சிகளுக்கும் இடமில்லாத நிலையில் பெங்களூரில் இருந்தவரை அவரால் அதுதான் சாத்தியம் என்று தோன்றியது. ஓய்வுக்குப் பின் அவர் மாபெரும் படைப்புகளை உருவாக்கப் போகிறார் என்றிருந்தது. வைணவம், அறிவியல், புதினம், சிறுகதை என்று ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கும் படைப்புகளை அறுபது வயதுக்குப் பின் படைக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னைப் பிரவேசத்திற்குப் பின் குமுதம், மணி ரத்னம், ஷங்கர் என்று வர்த்தகம் அவரை முழுமையாக விழுங்கிவிட்டது.

So long, Sujatha! Thanks for everything.""


நன்றி திரு.வெங்கட் அவர்களே!

http://domesticatedonion.net/tamil/2008/02/27/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/


இந்த‌ வ‌லைப்பூவில் இந்த‌ க‌ட்டுரைக்கு யார் யார் எப்ப‌டி விரிவாக‌ நாக‌ரீக‌மாக‌ பின்னூட்ட‌மிட்டிருக்கின்ற‌ன‌ர் என்ப‌தை ப‌டிப்ப‌த‌ற்கே அந்த‌ வ‌லைப்பூன் தொட‌ர்பினை இங்கு ப‌திக்கிறேன்


இந்த‌ ந‌ண்ப‌ரின் செய்திக‌ளில் நம்மில் பலருக்கு முழுவ‌தும் உட‌ன்பாடில்லாம‌ல் போக‌லாம். ஆனால் அவ‌ர் த‌மது க‌ருத்தை எடுத்துவைத்த‌ வித‌ம் மிக‌வும்
நாக‌ரீக‌மான‌து. த‌ம்மை எது பாதித்த‌து. தாம் எதை எதிர்பார்த்து அது ந‌ட‌க்காம‌ல் போயிற்று என்று மிக‌ மிக‌ அழ‌காக‌ எழுதியிருக்கும் இவ‌ர் பாராட்டுகுரிய‌வ‌ர்.

ஜெமோ இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளிட‌மிருந்து க‌ற்க‌ வேண்டிய‌து நிறைய‌ இருக்கிற‌து

Friday, August 06, 2010

"ஜெமோ"



"ஜெமோ"

இந்த மனிதர் தாம் ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்று கூறிக் கொள்கிறார்.

ஒரு தனிமனித நாகரீகம் அறியாத இவர் எப்படி ஒரு இலக்கியவாதியாக இருக்க முடியும். அப்படியென்றால் இலக்கியவாதிக்கு தனிமனித நாகரீகம் வேண்டாமா?

இந்த "சுய விளம்பர வியாதி",யாரை இப்போது தூற்றத் தொடங்கியிருக்கிறார் தெரியுமா?

மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதாவை!

இந்த "ம்மா.மனிதரால்" பாமரர்கள் என்று அழைக்கப்படும் நம் போன்றவர்களின் பெரும் அன்பைப் பெற்ற திரு. சுஜாதாவை இந்த மனிதர் தனிப்பட்ட முறையில் தாக்கத் தொடங்கியது இலக்கியம் என்றால் நான் இங்கிலாந்தின் மன்னன்.

இவ‌ரைப் ப‌ற்றி நான் கேள்விப் ப‌ட்ட‌துண்டு. இவரது கதைகளையும் கட்டுரைகளையும் படித்துப் பார்க்க முயற்ச்சித்து தோற்றதுண்டு. புரிவதற்குள் பொழுது விடிஞ்சுடுங்க. பத்து வரிக்குள் போரடித்துவிடும். அசாத்திய பொறுமை வேண்டும். வாணம்னு விட்டுட்டேன்.

இவ‌ரை "சைக்கோ" என்று ந‌ம்ம‌ க‌னிமொழி அம்மா பேசிய‌ கூட்ட‌த்தில் வ‌ரைய‌ரைக்க‌ப் ப‌ட்ட‌ போது கொஞ்ச‌ம் யோசித்த‌துண்டு. ஆனா, இவ‌ர் அப்ப‌டித்தானோ என்று இப்போது நினைக்க‌த் தோன்றுகிற‌து.

சுஜாதாவை இவ‌ர் ப‌ல‌ வித‌ங்க‌ளில் பொறாமை கொண்டு தாக்குகிறார்.

இவ‌ரது கூற்றுப் ப‌டி சுஜாதா அறிவிய‌ல் விஷ‌ய‌மாக‌ எழுதிய‌ அனைத்தும் குப்பை காரணம் அவை மேலெழுந்த‌ வாரியாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ குற்ற‌ச்சாட்டில் உண்மை உண்டா?

இல்லை. கார‌ண‌ம். சுஜாதா தாம் எழுதிய‌ அனைத்தும் ஒரு சுட்டி அல்ல‌து தொட‌க்க‌ம் என்றே கூறுகிறார்.இந்த‌ தொட‌க்கத்திலிருந்து நீங்க‌ள் தேட‌த்தொட‌ங்குங்க‌ள் என்றே உங்க‌ளை அழைக்கிறார். டி.என்.ஏ.வைப் ப‌ற்றி அவ‌ர் ஒரு சிறிய‌ வெளிச்ச‌ம் ம‌ட்டுமே காட்டிய‌தாக‌க் கூறுகிறார்.

சுஜாதா ஒரு சாலை விள‌க்கு போல‌ அல்ல‌து ஒரு சாலை வ‌ழிகாட்டி போல‌ செய‌ல்ப‌ட்டார். அதை அவ‌ர் சுவார‌சிய‌மாக‌ ந‌ல்ல‌ சுவையுட‌ன் தேர்ந்த‌ நையாண்டியுட‌ன் செய்தார். இது ந‌ம்ம‌ ஜெமோவுக்கு சுத்த‌மா வ‌ராது.

எந்த‌ ஒரு சாலை வ‌ழிகாட்டியும் உங்க‌ளை ஊர் போய் சேர்க்காது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜெமோ என்ன‌ சொல்கிறார் என்றால் சுஜாதா உங்க‌ளை உங்க‌ளின் வீட்டின் வாச‌ல் வ‌ரைக் கொண்டு செல்ல‌வில்லை என்று கோப‌ப் ப‌டுகிறார்.

திரு. ஜெமோ சுஜாதாவை குறை சொல்லி அவ‌ர‌து புக‌ழை ப‌ங்க‌ப் ப‌டுத்தி த‌ன்னை உய‌ர்த்திக் கொள்ள‌ முடியாது. சொந்த‌மா எதாவ‌து சுவார‌சிய‌மா எழுதி புக‌ழ‌டைந்தால்தான் உண்டு.

ஜெமோவின் பார்வை ஏற‌க்குறைய‌ இந்திய‌ க‌ல்வித் திட்ட‌த்தின் கீழ் வ‌ரும் ப‌ழைய‌ ஆசிரிய‌ர்க‌ளின் (பெரும்பாலும்!) எண்ண‌ங்க‌ள் போல‌வே உள்ள‌து.

அதாவ‌து நான் ஆசிரிய‌ன். நீ மாண‌வ‌ன்.

என‌க்கு எல்லாம் தெரியும். உன‌க்கு எதுவுமே தெரியாது.

நீ முட்டாள். நான் உன்னை புத்திசாலியாக்கிக் காட்டுவேன்.

கேள்வி கேட்காம‌ல் நான் சொல்வ‌தை ம‌ட்டும் கேள். நீ உய்விக்க‌ப் ப‌டுவாய்.

நான் உன‌க்கு எல்லாவ‌ற்றையும் சொல்லிக் கொடுக்கிறேன்.

இப்ப‌டிச் செய்யாத‌வ‌ன் ந‌ல்ல‌ ஆசிரிய‌ன் அல்ல‌.

இதுதான் ஜெமோவின் பார்வை.

ஆனால் உண்மை இதுவா?

இல்லை!..இல்லை!..இல்ல‌வேயில்லை.


எந்த‌ ஆசிரிய‌ரும் ஒரு மாண‌வ‌னின் ஒட்டு மொத்த‌ அறிவிற்கும் கார‌ண‌மாகிவிட‌ மாட்டார்க‌ள்.

ஒரு மாண‌வ‌ர் ஒரு ஆசிரிய‌ரிட‌ம் வ‌ரும் போது தாம் எந்த‌ திசையில் ப‌ய‌ணிக்க‌லாம் என்கிற‌ அறிமுக‌ம் ம‌ட்டுமே அவ‌னுக்கு தேவைப் ப‌டுகிற‌து.

அத‌ற்கு மேல் அந்த‌ மாண‌வ‌ன் தாமேதாம் ப‌ய‌ணிக்க‌ வேண்டும்.

மாண‌வ‌ரும் ஆசிரிய‌ரும் க‌ல‌ந்துரையாடி அறிவை ப‌கிர்த‌லில்தான் ஒரு மாண‌வ‌ன் மேம்ப‌டுகிறான். ஆசிரிய‌ரும் மேம்ப‌டுகிறார்.

வெறும் போதித்த‌ல் ம‌ட்டும் க‌ற்பித்த‌ல் ஆகாது. ஆனால் இன்று ஜெமோ போன்றவ‌ர்க‌ளால் அதுதான் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து.

சுஜாதா இதிலிருந்து மாறுப‌ட்டார். அவ‌ர் சுவார‌சிய‌மாக தமக்கு அறிமுகமான ஒவ்வொரு விஷ‌ய‌த்தையும் த‌ம் வாச‌க‌ர்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்தினார். த‌ம‌க்கு தெரிந்த‌ அனைத்தையும் அவ‌ர் வாந்தி எடுப்ப‌தைப் போன்று கொட்டி ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை ஆயாச‌ப்ப‌டுத்த‌வில்லை.

வெறும் அறிமுகம் அம்புடுதேன். மேலெ தெரிந்து கொள்ள வேண்டுவோர் தாமே அந்தந்த துறை சம்பந்தப்பட்ட நூல்களைத் தேடி தெரிந்து கொள்வார்கள் என்று நம்பினார்.

அவர் என்றும் தம் வாசகர்களை முட்டாள்கள் என்று கருதியாது கிடையாது. சொந்தமாக யோசிக்க மாட்டார்கள் என்று நினைத்தது கிடையாது.

அத‌னால்தான் அவ‌ர் ல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ வாச‌க‌ர்க‌ளால் ஆராதிக்க‌ப்ப‌ட்டார்.


அடுத்து இவ‌ர் திரு. சுஜாதாவை த‌னிப் ப‌ட்ட‌ முறையில் தாக்குகிறார். அதாவ‌து திரு. சுஜாதா த‌னிப்ப‌ட்ட‌ முறையில் சிடுமூஞ்சியாம். மேலும் அவ‌ர்
பொழுது போகாம‌ல் க‌ணினியில் "சின்ன‌ ப‌ச‌ங்க‌ விஷ்ய‌ம்" பார்த்துக் கொண்டிருந்தாராம்.

இதெல்லாம் ப‌டிக்கும் போதுதான் இவ‌ர் ஒரு "சைக்கோ" என்று ப‌ல‌ர் கூறுவ‌தில் அர்த்த‌ம் உள்ள‌தோ என்று நினைக்க‌த் தோன்றுகிற‌து.

திரு. சுஜாதாவை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ச‌ந்தித்த‌வ‌ர்க‌ள் இதை ஒரு போதும் ஒத்துக் கொள்ள‌ மாட்டார்க‌ள். அவ‌ரை நான் எந்த‌ வித‌ அறிமுக‌மும் இன்றி ச‌ந்தித்திருக்கிறேன். சாதார‌ண‌ வாச‌க‌னாக‌ ஒரு தெரு முனையில் இருவ‌ரும் சிக‌ரெட் வாங்கும் போது (டெல்லியில்!)பார்த்து ஒரு அரைம‌ணி நேர‌ம் பேசிக் கொண்டிருந்தேன். என‌க்கு அவ‌ர் சிடுமூஞ்சியாக‌த் தெரிய‌வில்லை.மிக‌வும் உற்ச்சாக‌மாக‌ பேசினார்.

மேலும் ஒரு "சிடுமூஞ்சி" எப்ப‌டித் த‌ன்னைச் சுற்றி அல்ல‌து த‌ன‌க்கு நெருக்க‌மாக‌ இவ்வ‌ள‌வு பெரிய‌ ந‌ட்பு வ‌ட்ட‌த்தை உருவாக்கிக் கொள்ள‌ முடியும் என்கிற‌ அடிப்ப‌டை கேள்வி கூட‌ கேட்க‌த் தெரியாத‌வ‌ன் இந்த‌ த‌மிழ் வாச‌க‌ன் என்று ஜெமோ ந‌ம்புகிறார். ஜெமோவின் ந‌ட்பு வ‌ட்ட‌ம்தான் நாட‌றிந்த‌ ஒன்றாயிற்றே!.. இவ‌ருக்கு ந‌ண்ப‌ர்க‌ளை விட‌ எதிரிக‌ள் அதிக‌ம்.

சாதார‌ண‌மாக‌ ஒரு ம‌னித‌னுக்கு அடிப்ப‌டையாக‌ ந‌கைச்சுவை உண‌ர்வு இல்லையேல் அவ‌ர் நிச்ச‌ய‌மாக‌ ந‌கைச்சுவையுட‌ன் கூடிய‌ ப‌டைப்புக‌ளை தொடர்ந்து, பலராலும் பாராட்டும் வகையில் ப‌டைக்க‌ முடியாது என்ப‌து உண்மை. ஒவ்வொரு எழுத்தாளரும் நிச்ச‌ய‌மாக‌ தாம் ஆழ்ம‌னதில் அதிக‌மாக‌ ந‌ம்புவ‌தை,ர‌சிப்ப‌தை, அஞ்சுவ‌தை, வெறுப்ப‌தை, எதிர்பார்ப்பதை, எதிர்ப்பதை, போன்றவற்றையே எழுத்தில் கொண்டு வர முயற்ச்சிக்கிறார்கள் என்ப‌து பெரும‌ள‌வுக்கு உண்மை.

த‌ன‌து எண்ண‌ங்க‌ளை இன்னொரு க‌தா பாத்திர‌த்தின் மீது ஏற்றி சொல்வ‌து வ‌ழ‌க்க‌மான‌ விஷ்ய‌ம்தான்.

அப்ப‌டி பார்க்கும் போது ஜெமோவின் ம‌ன‌தில் என்ன‌ உள்ள‌து என்ப‌து அவ‌ர‌து எழுத்தில் தெரிகிற‌து என்று கொள்வோம்.

ஏற்க‌ன‌வே சுஜாதாவுக்குப் பிற‌கு எல்லோரும் என் எழுத்தைத் தான் ப‌டிக்கிறார்க‌ள் என்று சொல்லிக்கிட்டு அலைய‌ற‌வ‌ங்க‌ நிறைய‌ பேர் இருக்காங்க‌.

அது கூட‌ ப‌ர‌வாயில்லை என்று இப்போது தோன்றுகிற‌து.

கார‌ண‌ம். ஜெமோ போன்ற‌வ‌ர்க‌ள் சுஜாதாவைப் ப‌ற்றி பொய்யுரைத்தால் த‌ன‌க்கு வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் கூடும் என்ற‌ நினைப்பு முந்தைய‌தைவிட‌ கேவ‌ல‌மாக‌ இருக்கிற‌து.

இவர் சுஜாதாவிற்கு கீதையின் சாராம்சத்தை விளக்கினாராம்.

அடா..அடா..இவர் கதா காலட்சேபம் வேறு செய்வார் போலிருக்கு.

சுஜாதா நிருபண வாததிற்கும் காலம் காலமாக வந்த நம்பிக்கைக்கும் உண்டான மோதலின் இடையில் சங்கடப்பட்டார் என்று சொல்கிறார்.
இது பொய்.

நிருபண வாதத்திற்கும் நம்பிக்கை மற்றும் நிகழ்வுக்கும் உண்டான மோதலை அவர் உணர்ந்திருந்தார் என்கிற அளவோடு இது சரி. அவர் அதனால் சங்கடப்பட்டார் என்பது திரித்துச் சொல்வது. காலம் காலமாக எல்லா அறிஞர்களும் செய்த தேடலைத்தான் அவரும் செய்தார்.

ஒரு முறை கேள்வி பதிலில் ஒரு வாசகர் "விஞ்ஞான தேடல் என்று முற்றுப் பெறும்" என்று கேட்ட போது " விஞ்ஞானத் தேடல் பிறப்பின் ரகசியம் அறியும் போது முற்றுப் பெறும்" என்று ஒரு ஒற்றை வரியில் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இது தடுமாற்றமா? தேடலா?

சுஜாதா ஜெமோ வைப்போல எழுத முயற்ச்சித்து தோற்றுப் போனராம். அதையும் இவரிடமே சொன்னாராம்.என்ன ஒரு அவதூறு?சுஜாதா இனி வரமாட்டார் என்கிற நம்பிக்கையில் எப்படியெல்லாம் அவதூறு செய்கின்றனர்?

இதை சுஜாதா "ஸ்டைலில்" எடுத்துக் கொள்வோம். அதாவது இது சுஜாதா ஜெமோவை கிண்டல் செய்திருப்பார். அதாவது "உன்னைப் போல (மோசமான) ஒரு கட்டுரை எழுதனும்னு முயற்ச்சி பண்றேன். முடியல"..இந்த சுய விளம்பர பிரியரும் அதை உண்மை என்று நம்பி உளறிக் கொட்டுகிறது.


சுஜாதா டை அடிக்கிறார். இள‌மையாக‌ தெரிகின்றார்..(ஏன் வயத்தெரியுதா!) டீ குடிக்கிறார்.வீட்டில் இருக்கும் போது அவர் எப்படி இருந்தார்?
இப்ப‌டியெல்லாம் ஜெமோ ஏன் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் விம‌ர‌சிக்க‌ வேண்டும்?

இந்த‌ ஆள் உண்மையின் வெளிச்ச‌த்தைக் க‌ண்டு அஞ்சுகிறார்.


திரு. சுஜாதாவின் உய‌ர‌ம் மிக‌வும் அதிக‌ம்.
அவ‌ர‌து வாச‌க‌ர்க‌ளின் உய‌ர‌மும் அதிக‌ம்.
சுஜாதாவை ர‌சித்த‌வ‌ர்க‌ள் இது போன்று சின்ன‌புள்ள‌த் த‌ன‌மால்லாம் யோசிக்க‌வில்லை.

அவ‌ர‌து எழுத்தை ர‌சித்த‌வ‌ர்க‌ள் அவ‌ர் அன்று காலையில் என்ன‌ சாப்பிட்டார் அல்ல‌து அன்று அவ‌ர் க‌ழிவ‌றையில் முக்கினாரா என்றெல்லாம் யோசிக்க‌ வில்லை.

அப்ப‌டிப்ப‌ட்ட‌ வாசகர்க‌ளை அந்த‌ பெரிய‌ ம‌னித‌ர் வ‌ள‌ர்க்க‌வில்லை என்ப‌தே அவ‌ருக்குப் பெருமை.

திரு. ஜெமோவின் இந்த‌ "அடுத்த‌வ‌ர்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ளை" ஆய்வு செய்யும் முறை அதிர்ச்சி அளிக்கிற‌து.

இவ‌ர் ம‌ன‌த‌ள‌வில் குறையுள்ள‌வ‌ர் ம‌ட்டும‌ல்லாத‌ ஒரு திட்ட‌மிட்டு தாக்கும் குற்ற‌வாளியாக‌வும் தென்ப‌டுகிறார். (Attack with a criminal motive!)

எழுத்தை விம‌ர்ச‌ன‌ம் செய்கிறேன் என்கிற‌ போர்வையில் இப்ப‌டி த‌ர‌ம் தாழ்ந்து, அதுவும் நிருபிக்க‌ முடியாத விஷயங்களை, எழுந்து வ‌ந்து ம‌றுப்ப‌ளிக்க‌ முடியாத இட‌த்தில் இருக்கிறார் என்ற‌ எண‌ண‌த்தில் க‌ட்டுக்க‌தைக‌ளையும் க‌ற்ப‌னைக‌ளையும் வெளியிடுவது இவ‌ர‌து வ‌க்கிர‌ ம‌ன‌த்தையே வெளிக்காட்டுகிற‌து.

சுஜாதா எழுத்துல‌கில், சினிமா உல‌கில் ம‌ற்றும் ச‌முக‌ வாழ்க்கை விஷ்ய‌த்தில்
இந்த‌ ஜெமோ போன்ற‌வ‌ர்க‌ள் தொட‌ முடியாத‌ உச்ச‌த்தில் இருந்தார் என்ப‌து
இனி நிருபிக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌தில்லை.

உண்மையில் ஜெமோதான் தான் அந்த‌ உய‌ர‌த்தை நினைத்து பார்க்க‌க்கூட‌ த‌குதியுடைவ‌ர்தானா என்ப‌தை நிருபிக்க‌ வேண்டிய‌ நிலையிலுள்ளார்.

ஒன்றை ஜெமோ நினைவில் கொள்ள‌ வேண்டும்.
வெறுப்பு என்ப‌து ஒரு தவிற்க்க வேண்டிய மனோ நிலை.
அதை மனிதில் வைத்திருந்தால் வைத்திருப்பவரின் எண்ணம் எழுத்து, செயல் பார்வை உருவம் என்று எல்லாவற்றையும் பாதிக்கும். அழிவைத்தேடி இட்டுச் செல்லும்

சுஜாதா யாரையும் எத‌ற்காக‌வும் த‌னி ம‌னித‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் செய்த‌தில்லை.
இன்னும் சொல்ல‌ப் போனால் அவ‌ர் ச‌க‌ த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ளை குறை கூறி யாரும் கேட்ட‌றியார்.


ச‌க‌ எழுத்தாள‌ர்க‌ளை எடை போடும் வேலை வாச‌க‌ர்க‌ளுடைய‌து என்ப‌து அவ‌ர்
உண‌ர்ந்திருந்தார். அந்த வேலையை அவர் ஒரு போதும் செய்ததில்லை.

"உன் எழுத்துக்க‌ள் ச‌ரியாக‌ இருந்தால் நீ ம‌திக்க‌ப்ப‌டுவாய். இல்லையேல் ஒதுக்க‌ப்ப‌டுவாய்" என்ப‌தில் அவ‌ர் தெளிவாக‌ இருந்தார்.

இந்த‌ ஜெமோவின் நோக்க‌த்தை (In English "Criminal Intent") பார்க்க‌ ப‌ய‌மாக‌ இருக்கிற‌து. இவரின் இந்த குணங்கள் இப்போது தோன்றியிருக்க வாய்ப்பில்லை. இது தேர்ந்த, கடைந்தெடுத்த, அயோக்கியத்தனமான, நய வஞ்சகத்தில் ஊறிய, நரித்தனமான, மிகவும் வளர்ந்த விஷ விருட்சம் போன்றதாகப் படுகிறது. (இதற்கு மேல் போட வன்மையான வார்த்தைகள் எமக்கு தோன்றவில்லை)

ம‌றைந்த‌ அந்த‌ மிக‌ப் பெரும் எழுத்தாள‌ரின் குடும்ப‌த்தார் இவ‌ர் வெளியிட்ட‌ குப்பைக‌ளால் ம‌ன‌ம் வெதும்பியிருக்க‌ வாய்ப்புண்டு. ஆனாலும் மேன் ம‌க்க‌ள் மேன் ம‌க்க‌ளே என்ப‌து போல‌ அவ‌ர்க‌ள் இதை புற‌ந்த‌ள்ளி செல்வ‌ர்.

ஒரு முறை சுஜாதிவிட‌ம் இந்த‌ சிறு ப‌த்திரிக்கை எழுத்தாள‌ர்க‌ளின் அடித‌டி ச‌ண்டைகளைப் (இன்னும் அடிச்சுகிற‌ங்க‌ப்பு!) ப‌ற்றி கேட்ட‌ போது..அவ‌ர் அதை அவ‌ர‌து ந‌டையிலேயே..."வெறும் குழாய‌டி ச‌ண்டை..நான் க‌ல‌ந்து கொள்வ‌தில்லை" என்றே கூறி வில‌கினார்.

ந‌ல்ல‌ ம‌னித‌ர் துஷ்ட‌ரை க‌ண்டால் தூர‌த்தான் வில‌குவ‌ர்.

இந்த சாரு நிவேதிதாக் கூட கோபத்தில் ஏதாவது ஏடாகூடமா எழுதுவாரு..பேசுவாரு. ஆனா அவர்கூட இது போன்று பொய்யுரைத்து வஞ்சிக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

இன்னும் நிறைய எழுதத் தோணுகிறது. ஆனாலும் தொடர்ந்து ஒரு கோபத்திலேயெ என் மனநிலை இருப்பதை நானே விரும்பவில்லை. ஆக நான் இதைப்பற்றி இன்னும் சிந்தித்து எழுதி நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.


ஜெமோ இதுவ‌ரை எழுதிய‌தோ அல்ல‌து இனி எழுத‌ப்போவ‌தோ முக்கிய‌ம‌ல்ல‌. அவ‌ர் முத‌லில் ஒரு நேர்மையான‌ ம‌னித‌னாக மாறுவதற்கு முய‌ல‌ட்டும். அதுவே அவ‌ர் இந்த‌ ச‌முதாய‌த்திற்கு செய்த‌ பெரும் பேறாக‌ இருக்கும்

Friday, July 23, 2010

போபால் விபத்தும் பிரிட்டானிய பெட்ரோலியத்தின் விபத்தும்! ‍ பகுதி=2






இந்த கட்டுரைக்கு இரண்டாம் பகுதி எழுத தொடங்குவதற்கு முன்பு வலைத்தளத்தில் இதன் தொடர்பாக ஒரு கட்டுரையைக் கண்டேன்.
அந்த கட்டுரை என் எழுத்தைவிட ஆழமாகவும் நிறைய புள்ளிவிவரங்களுடன்
இருந்தது. அதை அனைவரும் அறிய அதன் வலைத் தொடர்பினை இங்கு
இணைத்துள்ளேன். திரு.முத்துகிருஷ்ணனின் இந்த கட்டுரை மிகவும் யோசிக்கவும், இந்தியா என்று தம் மக்களை மனிதர்களாக மதிக்க கற்றுக் கொள்ளப் போகிறது என்று விசனப்படவும் வைக்கிறது.

வலைத் தொடர்பு: http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=3157


நன்றி: "உயிர்மை" வலைத்தளம்.


இந்த கட்டுரையிலேயே இந்த போபால் விபத்திற்கு பின் நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை திரு. முத்துக்கிருஷ்ணன் ஒரு கனவு கண்டதைப் போல எழுதியிருக்கிறார்.

இந்த கட்டுரைக்கு பின் நான் இரண்டாம்பாகம் எழுதுவதற்கு ஏதும் இல்லை.

கட்சி பாகுபாடில்லாமல் ஜாதி பாகுபாடில்லாமல் மதபாகுபாடில்லாமல் ஒன்றாகக் கூடி தம் மக்களையே கொள்ளையடித்து சொகுசு காணுவதையே கூட்டாக செய்யும் ஒரு கொலைவெறி கும்பல் அரசியல் என்கிற பெயரால் இந்தியாவைச் சூறையாடவா நாம் சுதந்திரம் பெற்றோம்?

கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் நடிகர் நடிகைகளைப் பற்றி எழுதுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவையாக மாறி கொஞ்சம்கூட சமுதாய நோக்கம், மற்றும் கடமையில்லாத முதுகெலும்பில்லாதப் புழுக்களாக மாறிவிட் ஊடகங்கள் இந்த நாட்டை எங்கு அழைத்துச் செல்கின்றன?



ச‌க‌ ம‌னித‌ரை கொஞ்ச‌ம் கூட‌ ம‌னிதாப‌த்துட‌ன் அணுகாத, சீருடை அணிந்த‌, அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு வால் பிடித்து சாமான்யனின் மீது கொலைவெறியுட‌ன் ச‌ட்ட‌ப்ப‌டி வ‌ன்முறையை க‌ட்ட‌விழ்த்துவிடும் கும்ப‌லாக‌ இருக்கும் காவ‌ல்துறை ந‌ம்மை இன்னும் என்ன‌ செய்ய‌ப்போகிற‌து?

வேலை கிடைத்த‌ நாளிலிருந்து ஓய்வு பெறும்வரை யாரைப் பிடித்தால் எந்த‌ ப‌த‌வி கிடைத்து இன்னும் எவ்வ‌ள‌வு ச‌ம்பாதிக்க‌லாம் என்ப‌தையே நித‌மும் யோசித்து, த‌ம்மிட‌ம் வ‌ரும் ம‌க்க‌ளிட‌ம் இன்னும் எவ்வாறு ல‌ஞ்ச‌ம் வாங்க‌லாம் என்ப‌தை ஒரு விஞ்ஞான‌ முறையில் யோசித்து அம‌ல்ப‌டுத்தும் அர‌சு அதிகாரிக‌ள் எனும் இந்த‌ பேராசைக்கூட்ட‌ம் இன்னும் என்ன‌ செய்ய‌ போகிற‌தோ?

எல்லாம் முடிந்து கொஞ்ச‌ம் நீதி கிடைக்குமா என்று நீதிம‌ன்ற‌த்துக்குச் சென்றால் அங்கு நீதி அல்லது சாதகமான தீர்ப்புக்கு இவ்வ‌ள‌வு விலை
என்று விள‌ம்ப‌ர‌ விலை வைத்து விற்காத‌ குறையாக‌ சீர‌ழிந்து போன‌ நீதித்துறை!

ஆக‌ ஒரு நாடு சிற‌ப்பாக‌ ந‌ட‌க்க, ஒழுங்காக‌ இய‌ங்க‌ வேண்டிய‌ 5 துறைக‌ள் அல்ல‌து 5 தூண்க‌ளான‌ மேற்கூறிய‌ 5 துறைக‌ளும் பேராசையின் பிடியில் சிக்கி அவைக‌ளின் அடிப்ப‌டை க‌ட‌மைக‌ளுக்கு நேர் எதிரான‌ செயல்க‌ளில் ஈடுபடுகின்ற‌ன‌.

எப்ப‌டி ஒரு ம‌னித‌னின் உட‌லில் இருக்கும் அங்க‌ங்க‌ள் அவைக‌ளின் அடிப்ப‌டை செய‌ல்பாட்டிற்கு விரோத‌மாக‌ செய‌ல்ப‌ட்டால் அந்த‌ ம‌னித‌ன் துன்புறுவதும் இற‌ப்ப‌தும் நிச்ச‌ய‌மோ அது போல‌ ஒரு நாட்டின் அழிவிற்கு மேற்க்கூறிய‌ துறைக‌ளின் (Politics, Government, Executive, Judiciary and so called voice of the people which is also known as Press) செய‌ல்பாடுக‌ளே கார‌ண‌மாகும்.

வேர்க‌ளில் வெந்நீரைக் கொட்டி எந்த‌ செடியையும் வ‌ள‌ர்க்க‌ இய‌லாது.
ந‌க‌ர்புற‌த்திலும் கிராம‌புற‌த்திலும் காடுக‌ளில் வாழும் ப‌ழ‌ங்குடிக‌ளையும் அழித்து இவ‌ர்க‌ள் எந்த‌ நாட்டை ஆள‌ப்போகிறார்க‌ள்? செஞ்ச‌ட்டை நோய் ச‌ட்டீஸ்க‌ர் ம‌ற்றும் ம‌த்திய இந்திய‌ காடுக‌ளில் வ‌ள‌ர்ந்திற்கு நாம் சீனாவை குறை சொல்ல‌க்கூடாது. கார‌ண‌ம் இவ‌ர்க‌ளின் ந‌ல‌னை க‌வ‌னிக்காம‌ல் போன‌து ந‌ம‌து த‌வ‌றுதானேய‌ன்றி சீனாவின் த‌வ‌று இல்லையே?

அண்டை மாநில முன்னாள் முதலமைச்சருக்கே தடியடி!

சொந்த நாட்டு முன்னாள் ஜனாதிபதியையே தன் செருப்பை தானே தூக்க வைக்கும் "பாதுகாப்புச் சோதனை" செய்யும் விமானநிலைய அதிகாரி!

அண்டை மாநிலத்திற்கு குடிக்க தண்ணி கொடுக்காதையே ஒரு சாதனையாக கூறும் ஒரு மாநில முதல்வர்!


புற்று நோய் முற்றிவிட்ட‌து!


காப்பாற்றவ‌து க‌ஷ்ட‌ம்

Wednesday, July 14, 2010

போபால் விபத்தும் பிரிட்டிஷ் பெற்றோலியம் விபத்தும்!


1984ம் ஆண்டு போபால் நகரம் ஒரு பெரும் சோகத்தில் துயரத்திற்கு ஆட்பட்டது. அன்று இன்றுள்ளது போல் தொலைத் தொடர்பு வசதிகள் நாடு முழுவதும் பெருகவில்லை. இன்று உள்ளதைப் போன்று செயற்க்கை கோள் சார்ந்த தனியார் தொலைக் காட்சிகளும் இல்லை. எல்லா செய்திகளும் சற்றே கால தாமதமாகத்தான் கொஞ்சம் உண்மையும், நிறைய யூகங்களுடன் கசியத் தொடங்கும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் ஒரு அமெரிக்க கம்பெனியில் நிகழ்ந்த விபத்து இது. இந்த விபத்தில் சுமார் 15,000 மக்கள் உடனடியாகவும் மேலும் சுமார் 15,000 பேர் 3 மாதங்களுக்குள்ளாகவும் இறந்ததாக ஒரு கணக்கு உண்டு. வழக்கப்படி அரசின் கணக்குப் படி சுமார் 3000 பேர் மட்டும் இறந்ததாகக் கூறப்படுகிறது. மற்றப்படி அடுத்த வந்த காலகட்டங்களில் மேலும் சுமார் 5.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் இன்றும் மூன்று தலைமுறைகளாக அங்குள்ள மக்கள் பல்வேறு வகைகளாக பாதிக்கப்பட்டு வருவதாக தன்னார்வுக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

சரி. இதற்கும் சமிபத்தில் (ஏப்ரல் 2010ல்) அமெரிக்க கடற்கரையில் (மெக்ஸிகோ வளைகுடாவில்) நிகழ்ந்த ஒரு எண்ணெய் கிணறு விபத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் நடந்த விபத்துக்களில் இல்லை.
அதை சம்பந்தப் பட்டவர்கள் கையாண்ட விதத்தில் இருக்கிறது விஷயம்.


இதிலிருந்து நாம் (அரசு, மற்றும் ஊடகங்கள் மற்றும் பொது மக்களாகிய)படிக்க வேண்டியவை நிறைய உண்டு. படிப்போமா இல்லையா என்பது நமது கேள்வி.

முதலில் விபத்தின் தன்மையை ஒப்பிடுவோம்.

போபாலில் நடந்த விபத்தை மெக்சிகோ வளைகுடா விபத்துடன் ஒப்பிட முடியாது. வேண்டுமானால் ஜப்பானில் நடந்த அணுகுண்டு தாக்குதலுடன் இதை ஒப்பிடலாம். காரணம் யூனியன் கார்பைட் விபத்திற்கு முன்பும் பின்பும் உலகில் இது போன்று ஒரு தொழிற்சார்ந்த விபத்து ஏற்பட்டதில்லை. மோசமான் விதிமுறைகள் அல்லது விதிமுறைகளே இல்லாத நாடுகளில் கூட இது போன்ற பெரிய மனித உயிரிழப்பு நேரவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேன்டும்.

பீ. பி. விபத்தில் உயிரிழந்தவர்கள் 11 நபர்கள். போபால் விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 30000 (விவாததிற்குரிய) பேர்களுக்க்கு மேல்.

போபாலி உயிரிழந்த கால்நடைகள் சுமார் 5 லட்சத்திற்கும் மேல்.

பீ.பி விபத்து மற்றும் எண்ணெய் கசிவினால் உயிரிழந்ததாக சொல்லப்படும் கடல்வாழ் உயிரனங்கள் சுமார் 20 பறவைகள் மற்றும் 5 ஆமைகள். மீன்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இதுவரை யாரும் அதை கணக்கெடுக்கவில்லை. கணக்கெடுக்க முடியுமா என்றும் தெரியவில்லை.

இப்படி ஒவ்வொரு தளத்திலும் இந்த இரு விபத்துக்களும் மலைக்கும் சிறு கல்லுக்குமான வித்தியாசம் போன்று உள்ளது. ஆனால்....

இது சம்பந்தமாக இந்தியா மற்றும் அமெரிக்கா எடுத்த அல்லது எடுக்கின்ற‌ நிலைப்பாடுகள் மலைக்க வைக்கின்றன.

போபால் விபத்தில் அமெரிக்கா முதலிம் மெளனமே சாதித்தது. இன்றும் அது இந்தியாவில் இந்தியர்களின் கவனக்குறைவால் நடந்த விபத்து என்றே சித்தரிக்கப்படுகிறது.

இது ஒரளவுக்கு உண்மையாக இருந்தாலும் இது சரியா?

இந்த விஷயத்தில் இந்தியாவும் (!) முதலில் மெளனமே சாதித்தாலும் பின்பு மெல்ல பேருக்காக கூவத் தொடங்கியது. இருந்தாலும் இன்று வரை இந்திய அரசாங்கம் இந்த விபத்திற்கு இந்திய தொழிலாளர்களின் அசிரித்தையான நடவடிக்கையே காரணம் என்று நம்புவதாகத்தான் தெரிகிறது. இது ஏறக்குறைய அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடேயாகும்.

அதே அமெரிக்கா இன்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்று பெயர் இருப்பதினாலேயே எண்ணெய் கசிவுக்கு காரணம் அந்த கம்பெனியும் அதை நடத்தும் நிர்வாகியும் (இவர் ஒரு பிரிட்டிஷ்காரர்) பொறுப்பு என்கின்ற விதத்தில் பிரசாரம் செய்கின்றது. உண்மையில் இந்த விபத்து நடந்த இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் மற்றும் துணை குத்தகைக்கார கம்பெனிகள் எல்லாம் (ஹாலி பர்ட்டன் போன்ற)அமெரிக்க கம்பெனிகளே!ஆனால் சாமர்த்தியமாக விபத்து நடந்த காரணத்தை யாரும் கேள்வி கேட்காமல் அதற்கு பின்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறைபாடுகளுக்கு தாய் கம்பெனியான பிரிட்டிஷ் பெட்ரோலியமே காரணம் என்று கேட்டு மிரட்டுகின்றது அமெரிக்கா!

சரி!. இதுவும் ஒரு வாததிற்காக நியாயம் என்றே கொள்வோம். ஆனால் இதே வாதத்தை யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கும் ஏன் இந்த அமெரிக்கா செய்யவில்லை. அந்த சமயத்தில் மெளனம் காத்ததேன்?
பிறகு நடக்கும் கூத்தை பாருங்கள்.

விபத்து நடந்து 2 மாததில் எண்ணெய் கசிவு ஏற்ப்பட்டவுடன் அமெரிக்க பத்திரிக்கைகள்,தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக கூக்குரல் இடத்தொடங்குகின்றன.

ஆனால் நமக்கு போபால் விபத்தில் அடிபடும் யூனியன் கார்பைட் ஒரு அமெரிக்க கம்பெனி என்பதே இன்னும் (26 வருடங்களுக்கு பிறகும்) பலருக்கு தெரியாது. இதில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களும் அடக்கம். இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல!. இன்னும் பலருக்கு விபத்து நடந்ததே தெரியாது. நன்றி நமது ஊடகங்கள்.!!

எண்ணெய் கசிவு ஏற்ப்பட்ட 3 மாதத்தில் அமெரிக்க செனட் சபையின் புலன் விசாரணைக்குழுவுக்கு முன்பு பிரிட்டிஷ் பெட்ரோலிய தலைவர் ஆஜர் படுத்தப்பட்டு கேள்வி கேட்கப்பட்டு வறுத்தெடுக்கப்படுகிறார். மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவைக்கப் படுகிறார். இதை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பி மக்களிடம் கொண்டு செல்கின்றன.

ஆனால் போபால் விபத்தில் யூனியன் கார்பைடின் அன்றைய இந்திய தலைவர் கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்தில் விடுதலை செய்யப்படுகிறார். பின் அரசின் தனி விமானத்தில் டெல்லி சென்று அங்கிருந்து சொந்த நாடான அமெரிக்காவிற்கு தப்பி செல்கிறார்.இதற்கு அன்றைய மத்தியபிரதேச முதன் மந்திரியான அர்ஜுன்சிங்கும், மத்தியில் நரசிம்ம ராவும், ராஜிவ்காந்தியுமே காரணம் என்று இன்று சொல்கின்றனர். இன்றுவரை அந்த அமெரிக்கர் தேடப்படும் குற்றவாளியாகத்தான் இருக்கிறார்.

இந்த அவலத்தை அன்று எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை. இந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது என்று யாரும் சொல்லி இன்று தப்பிக்கலாம். ஆனால் உண்மை வேறானாது. உள்ளூர் மற்றும் தலை நகரை சேர்ந்த அனைத்து பத்திரிக்கைகளுக்கும் தெரிந்த விஷ்யம்தான் இது. என்ன கேவலம் பாருங்கள்?

சரி. இப்போது மிகப்பெரிய சுற்றுப்புற சூழல் விபத்திற்கு பின் (சுமார் 20 பறவைகளின் உயிரழப்பிற்குபின்!) அமெரிக்க அதிபர் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் இடைக்கால நிவாரணமாக
சுமார் 1 பில்லியன் டாலர்கள் (சுமார் 4500 கோடி ரூபாய்கள்) கேட்கிறார். எதற்கு? சுற்றுசூழல் சுத்திகரிப்பதற்கு, மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதற்கு மற்றும் சுற்றுலா துறையின் வீழ்ச்சியனால் பாதிக்கப்பட்டோருக்க்கு இடைக்கால இழப்பீடு வழங்க இந்த நிதி என்கிறார். இது இடைக்கால நிதிதான். முடிவில் சுமார் 20 பில்லியன் டால்ர்கள் (சுமார் ரூ 90,000 கோடி) வரை பிரிட்டிஷ் பெட்ரோலியம் தரவேண்டியிருக்கும் என்று கருத்தப்படுகிறது. இந்த எண்களும் மாறவாய்ப்புண்டு.

ஆனால் போபால் விபத்தில் நடந்த அநியாயத்தை பாருங்கள்.
விபத்து நடந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு மேலும் பலர் உயிர் இழந்ததிற்குப் பிறகு சுமார் ரூ.2500 கோடியை இந்திய அரசிற்கு தருவதற்கு யூனியன் கார்பைட நிறுவனம் ஒத்துக் கொண்டது. (அரசிடம் போன பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி போய் சேர்ந்தது என்பது தனி சோகக்கதை.) இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் அந்த யூனியன் கார்பைடுக்கு இந்தியாவில் எவ்வளவு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருந்தது என்பதாகும். இதை யாராவது கவனித்தார்களா? இல்லை.

என்னுடைய யூகம் அந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு இந்த 2500 கோடிகளை விட அதிகம் என்றே நினைக்கிறேன். உதாரணமாக சென்னை கிண்டியில் (தொழில் பேட்டையில்) இருந்த அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய நிலம் மற்றும் கட்டிடம் எப்படி யாரால் விற்கப்பட்டு இன்று அங்கு மிகப்பெரிய கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்களின் அலுவலகமாக மாறியது என்று யாராவது ஆராய்ந்தால் விளங்கும்.
செய்தார்களா நமது அறிவு சார்ந்த ஊடகங்கள்?. இல்லையே!

கேள்வி கேட்டார்களா நமது செஞ்சட்டை தோழர்கள்!? இருந்தால் எம் மக்களுக்கு தெரிவிக்கலாம்.!!
இது போன்று அந்த யுனியன் கார்பைட் நிறுவனத்திற்கு சென்னை, டெல்லி, மும்பை, கல்கொத்தா என்று நாடு முழுவதும் பரந்து விரிந்த சொத்துக்கள் இருந்ததன. அந்த சொத்துக்களை விற்க முனையும் போது இந்த வழக்கு தடையாக இருந்த காரணத்தால் கொஞ்சம் வாய்க்கரிசி (2500 கோடி) போட்டு
கைக் கழுவி விட்டது அந்த கம்பெனி. இதில் யார் யார் லாபம் பார்த்தார்களோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இன்று அந்த யூனியன் கார்பைட் கம்பெனியை உலக அளவில் வாங்கி வியாபாரம் செய்வது "டொவ்" கெமிகல் என்னும் இன்னொரு அமெரிக்க கம்பெனி. இந்த கம்பெனி தனக்கும் போபால் வழக்குக்கும் சம்பந்தமே இல்லை ஆகவே தான் யாருக்கும் நட்ட ஈடு தர இயலாது என்று தெளிவாக சொல்லிவிட்டது. இவர்கள் இப்போது இந்தியாவில் கடை விரித்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அது வேறு கதை.

சரி நம்ம பிரச்சனைக்கு வருவோம்.
சுமார் 20 பறவைகளும் 2 ஆமைகளும் இறந்தற்கு சுமார் 4500 கோடி என்றால் 30000 மனிதர்களுக்கும் 5,00,000 கால் நடைகளுக்கும் எத்தனை கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று யோசித்து பாருங்கள்.

விபத்து நடந்து 3 மாத்திலேயே இப்படி கூத்தடிக்கும் அமெரிக்கா அன்று ஏன் மெளனம் சாத்தித்தது?

இதற்கெல்லாம் காரணம் நாமே!!

நம்மிடம் உளவியல்ரீதியாகவே பல்வேறு குறைப்பாடு இருப்பதாக எனக்குப் படுகிறது.நாம் நடத்தும் அரசு, நம் ஊடகம், நம் வியாபாரம் நம் தனிப்பட்ட வாழ்க்கை என்று பலவித்ததில் நாம் குறைப்பாடுள்ளவர்களாக இருக்கிறோம் என்பது உண்மை.

இந்த போபால் விபத்தை நாம் அணுகிய விதத்தை பகுதி 2ல் பார்ப்போம்.
.

Saturday, July 10, 2010

பேசும் (கதறும்!!) படம்!





இந்த படத்திற்கு கருத்து விளக்கம் ஆகியவை எழுத தேவையில்லை என்பது என் கருத்து.

ஆயிரம் விஷ்யங்களை ஒரு படத்தில் சொல்லலாம் என்பதன் இன்னொரு சாட்சி! (தமிழ் ஊடகங்கள் கவனிக்க வேண்டும்!)


நன்றி பட்டாப்ட்டிஅவர்களே.!..வலைப்பதிவில் தாங்கள் விவரித்த மொத்த கருத்தும் இதில் அடக்கம் ..






















Thursday, July 08, 2010

சாருவுக்கு ஒரு கடிதம் -


அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,

உங்களின் வலைப்பக்கத்தை தவறாமல் தினம் படித்து இன்புறுகிறேன் என்று பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்க வருவேன்.

இதுபற்றி உங்களுக்கு நான் எழுதும் கடிதம் இது.

முதலில் உங்களின் வலைப்பக்கத்தை படிக்க தொடங்கிய போது ஒரு சுவாரசியம் இருந்தது. ஏதோ ஒரு சொல்ல வருகீறீர்கள். என்ன என்று புரிந்து கொள்ள முயற்ச்சிப்போம் என்று தொடங்கினேன். ஆனால் போக போக (எனக்கு தெரிந்து!) உங்களின் தினப்படி கட்டுரைகளில் ஒரு ஆற்றாமையும் ஒரு அயற்ச்சியும் ஒரு கோபமும் இருப்பது தெளிவாகிற்று. கோபம் என்று நான் கூறியது எல்லா சமுக நோக்கர்களும் கூறும் தற்போதையச் சமூக நிலை குறித்தான தார்மீக கோபம் அல்ல.

உங்களின் பொருளாதார நிலை குறித்த கோபம். உங்களுக்குகான (நீங்கள் நியாயம் என்று நினைக்கும்!) அங்கீகாரம் கிடைக்காதற்கானக் கோபம்! நீங்கள் அடையத்துடிக்கும் உச்சத்திற்கு செல்லுவதற்கான வழி தெரியாத‌ கோபம்!. ("அடப் பாவிகளா" என்பீர்கள்)

உண்மையில் இதைச் சொன்னாலும் நீங்கள் கோபம் கொள்வீர்கள்.
இதைத்தான் சமீபத்தில் சங்கர் என்கிற வாசகர் தெளிவு படுத்தினார். ஆனால் நீங்கள் அதை கேட்பதாக இல்லை.
யோசித்து பாருங்கள்! உங்களின் தற்போதைய வெற்றிக்கோ தோல்விக்கோ இன்னொருவர் காரணமா? நிச்சயமாக இல்லை.

நீங்கள்தான்.!!

"உண்மையை சொல்கிறேன். சத்தியத்தை சொல்கிறேன்" என்று நீங்கள் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது உங்களது உரிமை. ஆனால் இதனால் யாருக்கு லாபம்?

"உங்கள் எழுத்துக்கள்தான் என் அறிவு விழியை திறந்தன! உங்கள் எழுத்துக்களை படித்தப் பின் தான் எனக்கு இந்த உலகத்தை பார்க்கத் தெரிந்தது!" என்று எழுதும் வாசகர்களின் கடிதங்களைக் கொண்டு உப்பு புளி கூட வாங்க முடியாது என்பது உங்களின் எழுத்துலேயே வெளிச்சம்.

இத்தனைக்கும் இந்த மகானுபாவர்கள் உங்களின் வலைத்தள பக்கத்தை படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை பதித்து தன் பெயர் அதில் வந்தவுடன் அதன் மூலம் மகிழ்வுரும் அன்பர்கள். இப்படி எழுதுபவர்களெல்லாம் உங்களின் புத்தகங்களை வாங்கியிருந்தாலேயே உங்களின் வருமானம் கொஞ்சம் பெருகியிருக்கும். ஆக இவர்களாலும் உங்களுக்கு லாபமில்லை.

தன்னைப் பற்றியே "மிக" அதிகம் புகழ்ந்து கொள்ளும் ஒரே தமிழ் எழுத்தாளர் நீங்களாத்தான் இருப்பீர்கள்.


உங்களின் இசை ரசனை உலகிலேயெ உயர்வானது என்கீறீர்கள்.
உங்களின் சினிமா ரசனை உலகிலேயெ உயர்வானது என்கீறீர்கள். இதற்கு இந்தியாவிலேயே யாரும் இணை கிடையாது என்று சவால் வேறு விடுகீறீர்கள். யாருக்குமே புரியாத பல பெய‌ர்களை சொல்லி அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று தமிழ்நாட்டில் வாதிட்டு என்ன பயன்?

"பின்நவீனத்துவம்" என்கிறீர்கள். எனக்கு நவீனம் என்றால் "புதிய" என்ற ஒரே அர்த்தம் மட்டும் தெரியும். அது என்ன பின் நவீனத்துவம். "BACK TO THE FUTURE" - போலவா? புரியல சாமி!

இன்று தமிழகம் இருக்கும் நிலையில், செந்தமிழ் நாட்டு மக்கள் பெட்ரோலிய விலை உயர்வையும், காஸ் சிலிண்டர் உயர்வையும் இதனால் வீட்டுப் பொருளாதாரத்தில் ஏற்ப்படும் ஓட்டையைப் பற்றியும் கவலை கொண்டு இருக்கிறார்கள். தினசரி சமுகப் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்து கொஞ்சம் வலைப்பக்கம் வந்தால் இப்படி நீங்கள் அவர்களை வறுத்து அவர்களின் அறியாமையை எள்ளி நகையாடிக் கொண்டிருந்தால் எவன் உங்களின் எழுத்துக்களை மேலும் அறிய உங்களின் புத்தகங்களை வாங்குவான்?.

உங்களின் கருத்துப்படி நீங்கள் ஐரோப்பிய மனநிலை கொண்ட ஆனால் போதாத காலத்தினால் (பொல்லாத காலத்தினால்!) தமிழகத்தில் வந்துப் பிறந்துவிட்ட ஒரு மனிதர். இப்படி எத்தனை காலம் சொல்லிக் கொண்டிருக்கப் போகீறீர்கள்? உங்களுக்கு ஐரோப்பா எந்த அளவுக்குத் தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஐரோப்பாவை ஒரளவுக்கு தெரியும். 10 ஆண்டுகளாக ஐரோப்பாவில் வாழ்ந்து வருகிறேன்! இந்தியாவில் அல்லது தமிழகத்தில் இருப்போரெல்லாம் ஏங்கி தூக்கு மாட்டிக் கொண்டு தொங்குமளவுக்கு ஐரோப்பா சொர்கமா! என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அதற்காக நான் தமிழகத்தை ராஜா பாடியது போல் (சொர்கமே என்றாலும்!!) சொல்லவில்லை. நிச்சயம் இந்தியா மற்றும் தமிழகம் ஐரோப்பியரிடமிருந்து அல்லது உலகிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஆயிரமிருக்கு. என்னுடைய வலைப்பக்கத்திலேயே அதைப் பற்றி விரிவாக் ஒரளவுக்கு எழுதியிருக்கிறேன்.

இருந்தாலும் உலகமும் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகளும் நிறைய உண்டு என்பதையும் அறிய வேண்டும்.

சரி!.. உங்களுக்கு ஐரோப்பா அவ்வளவு விருப்பம் என்றால் நீங்கள் இங்கு குடியேறலாமே! யார் தடுத்தது? ஆனால் ஒன்று! இங்கு உங்களின் தமிழ் எழுத்து விலை போகாது. பிரஞ்சோ! ஸ்பானிஷோ அல்லது ஜெர்மானிய மொழியோதான் கற்று எழுத வேண்டும். அப்படி எழுதினாலும் அவர்களின் கலாசார வேர்களை நீங்கள் கற்க ஒரு ஆயூள் தேவை. ! அப்புறம் எங்க எழுத!!

நீங்கள் பிறந்து, வளர்ந்து, அறிந்த ஒரு (தமிழ்)நாட்டு மக்களையே பெருமளவு கவர முடியாதவர் வேறு மொழி கற்று அங்கு ஜெயிப்பேன் என்பதை உங்களின் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.


முதலில் உங்களை புரிந்து கொள்ளூங்கள்.

மற்றவர்கள் குறைகளை விவரிக்கும் போது மட்டும் நீதி பேசும் நீங்கள் உங்கள் முறை வரும் போது செளகரியமாக நீதியை மறந்து விடுகிறீர்கள்.

"நீயா நானாவில்" கோபி உங்களை வஞ்சகமாக வரவழைத்து உங்களின் விளக்கங்களை பெறுமளவு சொல்லவே விடாமல் வெறும் மன்னிப்பு மட்டுமே கேட்க வைத்தது எத்துனை குற்றமோ அத்துனை குற்றம் நீங்கள் உங்களுடைய கருத்துக்கு எதிர்கருத்துக்களை சாடும் முறை. உதாரணமாக இந்த வாரத்தில் நீங்கள் ஞாநியைப்பற்றி எழுதியவை.

முன்பு ஞாநி உங்களை குறை சொன்னார் என்று கோபம் கொண்டு காத்திருந்து இன்று அவர் அமெரிக்கா சென்றிருக்கும் சமயத்தில் "பிராமண வாக்கு" அல்லவா என்று அவரது ஜாதியை வெளிப்படுத்தி பாய்ந்தது கேவலம். மேலும் அவருக்கு நல்ல ஸ்பான்சர்கள் வாய்க்கட்டும் என்று கேலி வேறு. தேவையா?

நான் ஞானியின் கைக்கூலி என்று என் மீது பாயாதீர்கள். நான் மேலே சொன்னது ஒரு உதாரணம்தான். ஜெயமோகனை நீங்கள் விவரிக்கும் விதம் இன்னும் மோசம்.

ஒரு சக எழுத்தாளர் மற்றும் கருத்தாளர் மீது இத்தனை காழ்ப்புணர்வு தேவையா? இதுதான் நீங்கள் அறிந்த ஐரோப்பிய பழக்கமா? தனிப்பட்ட முறையில் தாக்குவது எந்த ஐரோப்பிய நாகரீகம்?

ஞாநி தன் எழுத்துக்களில் எப்போதும் தன் சாதியின் அடையாளத்தை திணித்ததில்லை. உண்மையில் அவருக்குத் தன் ஜாதியின் பேரில் அபிமானம் இருக்குமா என்பது கூட சந்தேகமே! அவரது கருத்துக்களுக்கு உடன்படாதவர்களும் அவரை ஒரு ஜாதியின் பெயரால் சீண்ட மாட்டார்கள் (திராவிட இயக்கங்களை தவிர!‍ அது அவர்களின் தனிப்பட்ட ஸ்டைல்!)

நான் படித்தவரை திரு. ஞாநி சாதிச் சகதியைத் தாண்டித்தான் தான் கருத்துக் களைப் பதித்திருக்கிறார்.

அவரை நீங்கள் இப்படி தரம் தாழ்ந்து சீண்டலாமா?

உங்களின் எழுத்துக்களை மற்றவர்கள் மதம் மற்றும் சாதீக் கண்ணாடி கொண்டுப் பார்ப்பது தவறுதானே? அதே தவறை நீங்கள் செய்யலாமா?
உங்களின் மதமோ அல்லது சாதியோ எனக்குத் தெரியாது என்பது வேறு விஷயம். தெரிந்தாலும் எம் போன்று வெறும் கருத்துக்களை மட்டுமே நாடிப் போகின்றவர்கள் எழுதியவரின் சாதி மத அடையாளங்களை சட்டை செய்வதில்லை.


பாரதியின் பாடல்களை எமக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்த போது அவர் ஒரு பிராமணர் என்று சொல்லிக் கொடுக்கவில்லை. அவர் ஒரு தேசிய கவி என்றே எம் ஆசிரியை சொல்லிக் கொடுத்தார். பின்னாளில்தான் அவரது ஜாதிப் பின்புலம் நாங்கள் தற்செயலாக தெரிந்து கொண்டோம்.

இன்றுவரை எனக்கு பாரதிதாசனின் ஜாதி தெரியாது! தெரியவேண்டியதுமில்லை.
இத்தனைக்கும் சிறுவயதில் பாரதிதாசனின் மகன் எம் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்துல்ரகுமானி கவிதையை படித்து ரசித்த காலங்களில் அவரது மதம் எமது கண்ணுக்கு தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது பெயரைக்கூட அவர் மாற்றிக் கொண்டு எழுதவில்லை.

இப்படி பேசிக் கொண்டே போகலாம்.
இதற்காக நீங்கள் என்ன மதம் என்று நான் கேட்க தயாராக இல்லை. அது எனக்கு தேவையில்லாத விஷயம்.
இருந்தாலும் நீங்கள் நாசூக்காக ஒரு சக எழுத்தாளரின் சாதியை வெளிப்படுத்தி அல்லது சொல்லி வஞ்சப் புகழ்ச்சி பாடுவது தவறு.

இது போல எத்துணைப் பேரை நீங்கள் பகைத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. கோபமும் ஆற்றாமையும் மனிதனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்று பாருங்கள்.

சுஜாதாவிற்கு பிறகு உங்கள் எழுத்துக்களைத்தான் இளைஞர்கள்/இளைஞிகள் மிகவும் விரும்புவதாக நீங்களாக்க் கூறியுள்ளீர்கள். உங்களின் புத்தகங்களின் விற்பனையைப் பார்த்தால் (உங்களின் கணக்குப் படியே) அந்தக் கூற்றீல் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

சரி.! அந்த சுஜாதா அப்படி ஒரு மகத்தான வெற்றியைப் எப்படி பெற்றார் என்று யோசித்தீர்களா?

அவர் எதற்காகவும் யாருடனும் தன்னை ஒப்பிட்டுக் கொண்டதில்லை.

யாருக்கும் அவர் உபதேசித்ததில்லை.

யாரையும் அவர் ஊடகங்களில் பகிங்கரமாக திட்டியதில்லை. திட்டி எழுதியதில்லை. (எனக்கு அவரை தனிப்பட்ட வகையில் தெரியாது! இருந்தாலும் அவரை தெரிந்தவர்கள் கூட, அவர் தனிப்பட்ட முறையிலும் நல்லவர் என்றே கூறுகின்றனர்)

அவர் தன் மேதாவித்தனைத்தை தானே மெச்சிக் கொண்டதில்லை.
ஒரு முறை தன் எழுத்துக்களை அவரைக் கொண்டே விமர்சிக்கச் சொன்ன போது அவர் அதை ஒரு தர்ம சங்கடமாகவே உணர்ந்து எழுதினார்.

சிலர் அவரை அந்த கால எழுத்தாளரான தேவனுடன் சிலசமயம் ஒப்பிட்ட போது (அவரது ஆரம்ப கால நகைச்சுவை கூடிய துப்பறியும் கதைகளை கொண்டு!) அவர் அதை மறுத்ததுடன் மட்டுமல்லாது பிற்காலத்தில் அதனினும் மாறுப் பட்டே எழுதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

தனக்கு தெரிந்தவற்றை, புரிந்தவற்றை, புதிய விஷயங்களை அழகாக ஒரு கதையின் ஊடாகவோ அல்லது ஒரு கட்டுரையின் ஊடாகவோ அவர் தொடர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்படி சொல்வதிலும் ஒரு அழகுணர்ச்சியை கையாண்டார்.

அதில் ஒரு காழ்ப்புணர்ச்சி இல்லை. கயமை இல்லை. எதிராளியை வீழ்த்தி கொக்கரிக்கும் ஆணவம் இல்லை.

அவரைப் பின்பற்றுவது அத்துணை எளிதல்ல என்றும் இன்னொருவர் அதுப் போல வர சமிபத்தில் சாத்தியமல்ல என்றும் மனுஷ்யபுத்திரன் கூறுகின்றார்.

அவர் போல இன்னொரு ஐரோப்பிய அல்லது அமெரிக்க எழுத்தாளர் எழுதிப் புகழ் பெற்றிருந்தால் அந்த எழுத்தாளர் மிகச் சாதாரணமாக ஒரு தீவையை சொந்தம் கொண்டாடும் அளவுக்கு செல்வந்தராக இருந்திருப்பார் என்று திரு. மதன் அவர்கள் திரு. சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் சொன்னார். அது உண்மைதான்.

ஆனால் அந்த உண்மை சுஜாதாவிற்கு அவர் உயிருடன் இருந்த போதே தெரியாதா? நிச்சயம் தெரிந்திருக்கும்.
ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக் கொண்டதேயில்லை. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்று அவர் பலமுறை மறைமுகமாகக் கூறினார்.

அதுதான் அவரது உயர்நிலைக்கு காரணம்.

மேலும் ஒரு முறை மறுபிறப்பைப் பற்றிய கேள்வியில் மீண்டும் பிறந்தால் தான் இதே தமிழ் எழுத்தாளனாக அதே முதுகு வலியுடன் பிறக்க வேண்டும் என்பதே தன் விருப்பமாகக் கூறினார். கவனியுங்கள்! அவர் அடுத்த பிறவியிலாவது தான் ஒரு ஐரோப்பிய அல்லது அமெரிக்க எழுத்தாளராகப் பிறந்து ஒரு தீவை விலைக்கு வாங்க கேட்கவில்லை.

இப்போது சொல்லுங்கள்! வெற்றியின் வழி தெரிந்ததா?

"நான் எந்த காலத்திலும் சுஜாதாவை ஒரு எழுத்தாளராக மதித்ததில்லை. அவர் ஒரு எழுத்தாளரே இல்லை. அவர் ஒரு கதை சொல்லி.(அது என்ன கருமாந்தரமோ!).அவர் ஒரு இலக்கியவா(வியா)தியே அல்ல! நான் வேறு ரகம். நான் உலக இலக்கியத்தின் ரட்சகன்" என்று நீங்கள் கூறலாம்.

ஆனால் உண்மையில் நீங்கள் அவர் அடைந்த்தைப் போன்று புகழடையவும், அங்கீகரிக்கப்படவும், செல்வம் பெறவுமே (அவர் பெற்றாரா என்று தெரியாது) ஏங்குகிறீர்கள் என்பது நிதர்சனம்.

மேலும் ஒரு விஷயம்.

ஒவ்வொரு மனிதனின் மனவிகாரங்கள் அவரது செயல் அல்லது படைப்புகளில் வெளிவரப் பார்க்கும். அதை சாமர்த்தியமாக ஒதுக்குவதே ஒரு சிறந்த மனிதனின் செயலாகும் என்று படித்திருக்கிறேன்.

"ஒரு 7 வயது பெண் குழ்ந்தையை............போன்று"..என்ன ஒரு மட்டமான உவமானம்!!!. இந்த கருமத்தை மீண்டும் மீண்டும் வேறு எழுதி உங்களின் இயலாமையை கோபத்தை வெளிப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

இன்னொரு முறை " அவரையும் என்னையும் எப்படி ஒப்பிட முடியும்...தனியறையில் யாருடை ........சரியாக வேலை செய்கிறது என்பதை போன்ற‌ விஷயமா" என்பது போன்ற எழுத்துக்கள் உங்களை பொதுவாக பார்வையாளர் மத்தியில் எங்கு நிறுத்தும் என்பது தெரியாதா?

ரஞ்சீதா ராஜசேகருடன் இருந்த நிலை குறித்து விவரிக்கும் போது இன்னும் கண்ணீயம் காக்க வேண்டும். அவர் எதை சுவைத்தார்?அவருக்கு என்ன தண்டனை போன்ற அபத்தங்களை நிறுத்தலாம்.

நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள் என்கிற கோபத்தை விட நீங்கள் தூக்கி நிறுத்திய நபர் உங்களை இப்படி நாலு பேருக்கு பதில் சொல்ல வைத்து விட்டானே என்கிற கோபமே உங்களை இன்னும் இது போன்று அந்த விவகாரத்தில் பேசச் சொல்கிறது.
இதற்கு நீங்கள் இப்போது ஒன்றும் செய்ய இயலாது. ஒரளவுக்கு பேர் தெரிந்த மனிதராக இருப்பவர்கள் தங்களை கவர்ந்த விட்ட ஒரே காரணத்தினால் இன்னொரு தனிமனிதரை தங்களின் எழுத்து அல்லது ஊடகத்தின் மூலமாக் உயர்த்திப் பிடிக்கும் போது இது போன்று விபத்துக்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். காரணம்...to error is human!!

ஆக திரு. சாரு அவர்களே! கொஞ்சம் யோசியுங்கள்.

தொடர்ந்து வலைத்தளத்தில் நீங்கள் படிக்கப் பட வேண்டியவராக இருக்க மற்ற வியாபார பத்திரிக்கைகள் செய்யும் அதே விளம்பர உத்தியான "அதிர்ச்சி" உத்தியை (MATERIAL FOR SHOCK VALUE!) கையாளுவது சில சமயம் எதிர் விளைவுகளையும் உண்டாக்கும்.

56 வயதில் தெருவுக்கு தெரு பப்பு எங்கிருக்கிறது என்று தேடி பின் அதைப் பற்றி எழுதுவது ஒரு டைரிக் குறிப்பாக இருக்கலாம். நிச்சயமாக இலக்கியமா?

வெறும் பெண் ரசிகைகளைப் பற்றி விலாவரியாகக் கூறி உங்களின் இளமையின்(!) ரகசியத்தை எழுதுவதும் ஒரு டைரிக் குறிப்பே. (நிச்சயம் நான் வயத்தெரியவில்லை! ‍ என் இளமை எனக்கு தெரியும்!) யாருக்காக இந்த இளமைத் தோற்றம் என்று தெரியவில்லை! ஒருவேளை தலைமுடிக்கு, மீசைக்கு மை அடிப்பது போன்று இது ஒரு உத்தி என்றே நினைக்கிறேன். முன்பு 70 / 80களில் சில தமிழ் எழுத்தாளர்கள் இந்த உத்தியை உபயோகித்தனர்.
இது எந்த விதத்தில் உங்கள் எழுத்துக்களை பரவலாக்க உதவும் என்று தெரியவில்லை.

திருவல்லிக் கேணி முரளி, தனுஷ் போன்று உங்களின் தீவிர ஆதரவாளர்கள்
சொல்வது போன்று நான் வெறும் சாதாரண வாசகன் தான். எனக்கெல்லாம் பதிலளித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். ஆனால் சிந்தியுங்கள்.

இன்று வரை நீங்கள் எழுதியது மக்களை சென்றடையவில்லை என்றால் அதற்கு உங்கள் எழுத்தும் ஒரு காரணமாக இருக்கலாம். யாருக்கு தெரியும்?

56 வயதில், தொடர்ந்து ஒரு 30 வருடம் ஒரு மொழியில் எழுதி கிடைக்க வேண்டிய புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைக்காமல் போகும் போது,(உங்களின் கூற்றுப்படி) மீண்டும், மீண்டும் உங்களை விளக்கிக் கொள்ள தேவைப்படும் போது ஒரு அயர்ச்சி உண்டாவது நியாயமே. இந்த உழைப்பில் பாதி கூட செய்யாதவனுக்கு மரியாதை செய்யப்படுவதாக நீங்கள் நினைத்தால் வருவது ஆற்றாமையே!

ஆனால் அதை வெல்ல நீங்கள் எடுக்கும் ஆயுதம் வீண் கோபம். அது சரியல்ல.

உங்களின் எழுத்துக்கு அதற்குரிய உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத்தான் பலரும் நினைக்கிறார்கள். உங்களின் புத்தகம் விற்க வேண்டுமானால் ஒன்று இன்னும் சிறப்பாக எழுதுங்கள். அல்லது சிறப்பான விற்பனை உத்திகளை கையாளுங்கள்.

உங்கள் வலைத்தளத்திலேயே "இ‍‍புத்தகமாக" விற்கலாமே"

அதெல்லாம் சரி! வலைத்தளத்தில் கூகுள் "வைக்கிபிடியாவில்" போய் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் என்று எழுதினால் பல பேர் பெயர்கள் (உ.ம். ராமகிருஷணன், சுந்தரராமசாமி, சுஜாதா)வருகிறது.

உங்கள் பெயரை காணவில்லையே!!!
உங்களுக்கு வலைத்தளத்திலும் நண்பர்கள் அதிகமில்லை போலிருக்கு.

சீக்கிரம் உங்கள் பெயரை அந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் சேருங்கள்.
வாழ்த்துக்கள்.

Wednesday, May 26, 2010

சிங்களவரின் நாகரீகம்.



இன்று மனது மிகவும் சோர்ந்திருக்கிறது. காரணம் இன்று காலை டியுப் தமிழில் ஒரு விடியோ பார்த்தேன். அதில் போரில் கொல்லப்பட்ட தமிழ்விடுதலை பெண் புலிகளின் சடலங்களை சிங்கள ராணுவம் கையாளும் படம்.

மிகவும் கொடுமை.

எத்தனை இளைய பெண்கள் இவர்கள்? இவர்களுக்கு கனவுகள் கிடையாதா?

மனம் மிகவும் கனத்து போனது.

மரணம் சோகம்தான். எல்லோருக்கும் ஏற்படுவதுதான்.

அந்த மரணம் யார் மூலம் எப்படி வருகிறது அது எப்படி கையாளப்படுகிறது என்பது ஓரளவுக்கு நாம் வாழும் வாழ்க்கையை சார்ந்திருக்கிறது.

அது மேலும் நாம் வாழும் சமுதாய்த்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது.

இந்த இளம் பெண்களின் சடலங்களை ஏதோ இறந்த நாயை இழுத்து போடுவது போல போட்டது மிகவும் கொடுமை.

இந்த கொடுமையின் தாக்கத்தை வார்த்தைகளில் என்னால் கொண்டுவர முடியவில்லை.
ஏன் இந்த அவலம்.?

ஒரு நாட்டின் அல்ல‌து இன‌த்தின் க‌லாசார‌ம் அவ‌ர்க‌ள் வாழ்வை கையாளும் வித‌த்தில் எப்ப‌டி பிர‌திப‌லிக்கிற‌தோ அதே போல் அவ‌ர்க‌ள் சாவை கையாளும் வித‌த்திலும் பிர‌திப‌லிக்கிற‌து.

சிங்க‌ள‌ இன‌த்தின் க‌லாசார‌ம் இதுதானா!
போரில் வெல்வ‌து தோற்ப‌து வேறு. இந்த‌ பெண் வீராங்க‌னைக‌ள் (அவ‌ர்க‌ளை பொறுத்த‌வ‌ரை அதுதான் நிஜ‌ம்!) வீர‌மாக‌ போராடித்தானே செத்தார்க‌ள்?
பின் ஒரு வீராங்க‌னைக்கு கொடுக்க‌ வேண்டிய‌ ம‌ரியாதையை ஏன் இவ‌ர்க‌ளுக்கு அளிக்க‌வில்லை?
வீர‌ம் த‌ன்னிட‌ம் இருந்தாலும் ம‌ற்ற‌வ‌ரிட‌ம் இருந்தாலும் பாராட்டுவ‌துதான் உண்மையான‌ வீர‌னுக்கு அழ‌கு என்று ப‌டித்திருக்கிறேன்.

உண்மையான‌ சிற‌ந்த‌ க‌லாசார‌ம் மிக்க‌ நாட்டில் சாலையில் அடிப‌ட்ட‌ ஒரு நாயின் பிண‌த்தைக் கூட‌ மிக‌வும் கெள‌வுர‌வ‌மாக‌ கையாள‌வார்க‌ள்.

சிங்க‌ள‌ரின் நாக‌ரிக‌ம் இதுதானா?

இற‌ந்த‌ அந்த‌ பெண்க‌ளின் உட‌லில் இருக்கும் உடைக‌ளை க‌ளைந்து என்ன‌ க‌ண்டார்க‌ள்? ஒருவேளை ஆணா பெண்ணா என்று பார்த்தார்க‌ளா.?
எத‌ற்கு க‌ண‌க்கெடுக்க‌வா? ச‌ரி எடுத்தீர்க‌ள். ஆனால் அதை ஒரு ம‌ருத்துவ‌ரை கொண்டு ஒரு நாக‌ரிமான‌ இட‌த்தில் ம‌றைவாக‌ செய்ய‌மாட்டீர்க‌ளா? பிற‌கு அந்த‌ உட‌லை நாக‌ரீக‌மாக‌ மூடி அனுப்ப‌ மாட்டீர்க‌ளா? இப்ப‌டியா!

ஒரு ராணுவ‌ம் எப்ப‌டி இய‌ங்குகிற‌து என்ப‌து அந்த‌ நாட்டின் "ம‌னோ நிலையை"
வெளிக் காட்டுகிற‌து என்பார்க‌ள்.

அப்ப‌டி பார்த்தால் இந்த‌ ராணுவத்தினரின் நடவடிக்கைகளை கொண்டு சிங்க‌ள‌ நாட்டின் ம‌னோ நிலையை ஊகிக்க‌ முடிகிற‌து.

ஹிட்ல‌ரின் ஆட்சியில் யூத‌ர்க‌ளை அந்த‌ ராணுவ‌ம் கையாண்ட‌ வித‌ம்தான் என‌க்கு ஞாப‌க‌ம் வந்த‌து.

ஹிட்ல‌ரின் ஆட்சி கால‌ம் சுமார் 10 ஆண்டுக‌ள் ந‌டந்த‌து. அப்போது அவ‌ரும் தான் யாராலும் வீழ்த்த‌ப் ப‌ட‌ வாய்ப்பில்லை என்றே ந‌ம்பினார். ஆனாலும் அவ‌ர் வீழ்த்த‌ப்ப‌ட்டார்.

ராஜ‌ப‌க்க்ஷே ச‌ரித்திர‌த்தை ப‌டிக்க‌ வேண்டும். இவ‌ர் இல‌ங்கையை அழைத்துச் செல்லும் பாதை ஹிட்ல‌ர் ஜெர்ம‌னியை அழைத்து செல்லும் அதே பாதைதான்.

இது பேச்சு வார்த்தைக்க‌ளுக்கு த‌யாரில்லாத‌ ஒரு முர‌ட்டு கொலைகார‌ கூட்ட‌மாக‌ தெரிகிற‌து. ராணுவத்திற்கும் கூலிப்படைக்கும் வித்தியாசம் காண சிங்கள நாடு தவறிவிட்டது. தனது ராணுவத்தை கூலிப்படையாகத்தான் ஆட்சியாளர்கள் நினைக்கிறனர் என்று தெரிகிறது.

இந்த நிகழ்வுகள் மற்றும் காட்சிகள் த‌மிழ‌னின் (முக்கிய‌மாக‌ ஈழ‌த்த‌மிழ‌ன்) ம‌னதில் தீராத‌ வ‌லியையும் வேத‌னையையும் உண்டாக்கியுள்ள‌து. இது ம‌ற‌க்க‌ப் ப‌டும் என்ப‌து வெறும் க‌ன‌வு. தமிழ் இன‌த்தின் மீது இவ‌ர்க‌ள் எத்த‌னை வ‌ன்ம‌ம் கொண்டுள்ள‌ன‌ர் என்ப‌து இந்த‌ ப‌ட‌ங‌ளின் மூல‌மாக‌ தெரிகிற‌து.

சிங்க‌ள‌ ச‌முதாய‌ம் விழித்துக் கொண்டு இந்த‌ அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் ராஜ‌ப‌க்க்ஷ் போன்ற‌ அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌மிருந்து த‌ன்னை மீட்டு கொள்ளாவிட்டால் வெகுவிரைவில் இவ‌ர்க‌ள் உல‌க‌ப் பார்வையில் த‌னிமைப் படுத்த‌ப்ப‌டுவார்க‌ள். மேலும் இவ‌ர்க‌ள் இதைவிட‌ ப‌டுப‌ய‌ங்க‌ர‌மான‌ வ‌ன்முறைக‌ளுக்கு ஆளாவ‌து நிச்ச‌ய‌ம். அந்த‌ வ‌ன்முறை ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌மிருந்து வந்தாலும் வராவிட்டாலும், க‌ட்டுப்பாடில்லாத‌ சொந்த‌ ராணுவ‌த்தினாலேயே வ‌ந்து சேரும்.

இது ஜோசிய‌மில்லை. ப‌ல‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ளை பாருங்க‌ள். கட்டுபாடில்லாத‌ ராணுவ‌ம் என்ன‌ செய்யும் என்ப‌து தெளிவாக‌ புரியும். வெறிபிடித்த‌ கூட்ட‌த்திற்கு சொந்த‌ கூட்ட‌ம் ம‌ற்ற‌ கூட்ட‌ம் என்று வித்தியாச‌ம் கிடையாது.

இங்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். நான் புலிகளின் ஆதரவாளன் இல்லை. உண்மையில் அவர்களின் அணுகுமுறை மற்றும் வன்முறையில் எனக்கு உடன்பாடில்லைதான்.

ஆனால் இன்று நான் கண்டது மனித நாகரீகத்திற்கு சவால் விடும் செயலல்லவா? இது போல் எந்த சமுதாயமும் கேவலப்படவோ சீரழியவோ கூடாதல்லவா?

க‌டைசியாக‌ ஒரு வார்த்தை!

ஒரு நேர்மையான‌ நோக்க‌த்திற்காக‌, கொண்ட‌ கொள்கைக்காக, தம் இனம் தலை நிமர்ந்து வாழ, த‌ம் உயிரை பணயம் வைத்து போரிட்ட‌ இந்த‌ இள‌ம் பெண்க‌ளின் ம‌னோப‌ல‌ம் விய‌க்க‌ வைக்கிற‌து. இவ‌ர்க‌ளின் ம‌னோ நிலையை வெளியில் இருக்கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்வ‌து மிக‌வும் க‌டின‌ம். இவ‌ர்க‌ள் எடுத்துக் கொண்ட‌ பாதை ச‌ரியா இல்லையா என்ப‌து ப‌லாராலும் விவாதிக்க‌ப்ப‌டுகிற‌து. நான் அத‌ற்குள் செல்ல‌ த‌யாரில்லை.

ஆனால் ஒன்று சிங்க‌ள‌வ‌ர் நாகீரிக‌ம் கொண்ட‌வ‌ரில்லை என்ப‌து தெளிவாகிற‌து.

Thursday, April 15, 2010





சமிபத்தில் யூ டியுபில் நம்ம புதிய தாரகை நம்பிக்கை நட்சத்திரம் வருங்கால முதலைமச்சர் அக்கா பேசறதை பார்த்தேன்.

ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க. (அப்ப மூடிட்டு போவேன்டிதானேங்கிறீங்களா...நியாயம்தான். அதைத்தான் செஞ்சேன்!)

தமிழை வாழ வைத்த "வாழும் வள்ளுவரின்" புதல்வி தமிழ் பேச இத்தன தடுமாறங்களா!!

அப்பத்தான் ஒண்ணு புரிஞ்சது. இந்த பத்திரிக்கைகள் நிருபரெல்லாம் தனக்கு வேண்டியங்க அல்லது ஆளும் வர்கத்தினரை எப்படியெல்லாம் ஏத்தி விடறாங்க பாருங்க..

இந்த அம்மாவின் தமிழ் புலமையை அஹா.ஒஹா...ன்னு பக்கம் பக்கமா எழுதி இவங்கதான் இனி கலைஞரின் தமிழ் வாரிசுன்னு வேற "சினியர்/ஜூனியர்" கிகட்னெல்லாம் பக்கம் பக்கமா வாரா வாரம் கற்பூரம் காட்டி மணியடிக்கிறாங்க.

ஆனா அந்த‌ம்மா என்னான்னா ஒரு நாலு வார்த்தை பேச‌ த‌டுமாறுது. ஒரு விஷ்ய‌த்தை சொல்ல‌ தொட‌ர்பில்லாம‌ல் ச‌ம்ப‌ந்தா ச‌ம்ப‌ந்த‌மில்லாம் யார் யாரையோ சாடி துண்டு துண்டு வாக்கிய‌ங்க‌ளால் கிள‌ரி கொட்டுது. எந்த‌ வாக்கிய‌மும் முழுசா முடிக்கிற‌தில்லை. (சில‌ ச‌ம‌ய‌ம் இவ‌ங்க‌ அப்பாவே அப்ப‌டித்தான்‍‍‍=== இதுக்காக‌ அடிக்க‌ வ‌ராதீங்க‌!)

ஏன் இப்ப‌டி? இத‌ற்கு கார‌ண‌ம் ப‌யிற்ச்சி குறைவே என்று தோன்றுகிற‌து.

இந்த‌ அம்மா அந்த‌ உரையில் முன்னுக்கு பின்னா ப‌ல‌ விஷ்ய‌ங்க‌ளை பேசுறாங்க‌.
த‌மிழ் ம‌க்க‌ள் மிக‌ப் பெரிய‌ முன்னேற்ற‌ம் அடைஞ்சிட்டாங்க‌ அத‌னால்தான் தி.ந‌க‌ரில் நாம் கூட்ட‌ம் ந‌ட‌த்த‌ முடிகிற‌துன்னு சொல்றாங்க‌. தி.ந‌க‌ர் என்ன‌ ஆப்கானிஸ்தான்ல‌ இருக்கா.? இல்லை நியுயார்க்ல‌ இருக்கா?

ச‌ரி. இவ‌ங்க‌ என்ன‌ சொல்ல‌ வ‌ராங்க‌ யாரை குத்த‌றாங்க‌ன்னு தெரியுது?

ஆனா என்ன‌ ப‌ண்ண‌ இந்த‌ அம்மா சுமார் 40 வ‌ருஷ‌ம் க‌ழிச்சி வ‌ந்து இதெ சொல்றாங்க‌ளே.?

இதே தி.ந‌க‌ரில‌ தான் திரு. பெரியாரும் சுமார் 40 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே பேசிட்டு போயிருக்காரே.? இப்ப‌ என்ன‌ புதுசா?

இதை சொல்லிட்டு சில‌ வாக்கிய‌ங்க‌ளுக்கு பிற‌கு த‌மிழ் நாட்டு ம‌க்க‌ள் முன்னேற‌ த‌டை இருக்குன்னு சொல்றாங்க‌.? க‌ண் இருந்தும் குருட‌ர்க‌ளாக‌ இருக்காங்க‌ன்னு வேற‌ சொல்றாங்க‌.

இப்ப‌ என‌க்கு ஒண்ணு தெரிஞ்சாக‌னும். த‌மிழ்நாடு முன்னேறிச்சா..முன்னேற‌ல‌யா?

வ‌ழ‌க்கமா தேர்த‌லில் தோத்தாதானே இவ‌ங்க‌ அப்பா இப்ப‌டி "ஐயோ த‌மிழ்க‌மே க‌ண்ணிருந்தும் குருடனாக் இருக்கியே" என்று புல‌ம்புவார்?

ச‌ரி அதை விடுங்க‌.

இந்த‌ அம்மா மேடைப் பேச்சுக்கு இன்னும் நிறைய‌ ப‌யிற்ச்சி எடுத்துக் கொள்ள‌ வேண்டும்.
ம‌றைந்த‌ எழுத்து மேதை சுஜாதாவின் ந‌ண்ப‌ராக‌ சில‌ வ‌ருட‌ங்க‌ள் இருந்த‌ கார‌ண‌த்தினாலேயே இவ‌ர் தாம் பெரிய‌ இல‌க்கிய‌ க‌ர்த்தா என்று நினைக்க‌த் தொட‌ங்கிவிட்டார். சில‌ க‌விதைக‌ளை (அத‌ எத்த‌னை பேர் வாங்கினான்?) எழுதிய‌தாலேயே இவ‌ங்க‌ க‌ம்ப‌னுக்கு அடுத்த‌ க‌வி என்று "ஜால்ரா" கிக‌ட‌ன் வேண்டுமானால் எழுதி இவ‌ங்க‌ள‌ உசுப்பேத்தி விட‌லாம்.

ஆனா..இவ‌ங்க‌ளுக்கே இவ‌ங்க‌ த‌குதி தெரிய‌ வேணாம்?

இவ‌ங்க‌ முத‌ பேட்டியில் இவ‌ங்கிட்ட‌ கொஞ்ச‌ம் கூச்ச‌ம் (அள‌வுக்கு மீறி புக‌ழ‌றாங்க‌ளேன்னு) இருந்த‌து. ஆனா ந‌ம்ம‌ த‌மிழ் ஊட‌க‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டி
இவ‌ங்க‌ளை சுத்தி இருக்கிற‌வ‌ங்க‌, போதாத‌துக்கு இவ‌ங்க‌ அப்பா வேற‌, ம‌ற்றும் கிக‌ட‌ன் மாறி ப‌த்திரிக்கைக‌ள் ஊதி ஊதி க‌டைசில‌ இவ‌ங்க‌ "ஓஹோ..உண்மையாவே நாம‌ க‌ம்ப‌னுக்கு வாரிசுதான் போல‌" அப்படின்னு ந‌ம்ப‌ ஆர‌ம்பிச்சுட்டாங்க‌.

ஒரு ஆள‌ இந்த‌ம்மா சைக்கோன்னு சொல்லுது. கார‌ண‌ம் அந்த‌ எழுத்தாள‌ர் திரு. எம்.ஜி.ஆரின் உச்ச‌ரிப்பை (துப்பாக்கி ச‌ம்ப‌வ‌த்திற்கு பிற‌கு)கிண்ட‌ல் செய்தாராம்? அது நாகரீகம் இல்லையாம்.
அடா..அடா....


என்னா திடிரென்று எம்.ஜி.ஆர் க‌ரிச‌ன‌ம்.?

ஆனா அதே எம்.ஜி.ஆரை இவ‌ங்க‌ அப்பா பேசாத‌ கிண்ட‌லா?
எம்.ஜி.ஆரின் பேச்சு, தொப்பி, அவ‌ர‌து த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கை ம‌ற்றும் அவ‌ர‌து
தொழில், பூர்வீக‌ம் என்று ச‌க‌ல‌ விஷ்ய‌ங்க‌ளை எத்த‌னை அசிங்க‌மாக‌ பேச‌ முடியுமோ அத்த‌னை அசிங்க‌மாக‌ பேசவும் செய்து பேசுப‌வ‌ர்க‌ளை ஊக்குவித்து ர‌சித்த‌வ‌ர்தானே இவ‌ர‌து அருமை "வாழும் வ‌ள்ளூவ‌ர்" அப்பா?ட்.

எம்.ஜிஆரின் பேச்சை கிண்ட‌ல் செய்த‌வ‌ர் "சைக்கோ" என்றால் இவ‌ர‌து அப்பாக்கு என்ன‌ பேர் வைக்க‌லாம்.?

என்ன‌ க‌ய‌மை பாருங்க‌ள்? இவ‌ர்தான் த‌மிழ்க‌த்தின் எதிர்கால‌ம்!!
கிழிஞ்ச‌து போங்க‌..

எந்த‌ விஷ்ய‌மும் விம‌ர்ச‌ன‌த்திற்கு உட்ப‌ட்ட‌தே.? விம‌ர்ச‌ன‌த்திற்கு அப்பாற் ப‌ட்ட‌து என்று எதுவும் கிடையாது.
இதை நான் சொல்ல‌வில்லைங்க‌. இவ‌ங்க‌ளின் "ஞான‌ சூரிய‌னான‌" பெரியார் ஒத்துகிட்ட‌துதாங்க‌..


இன்று ஒரு தமாஷான வலைபதிவை படித்தேன்.

சமுக அரசியல் சினிமா என்று சகல விஷயங்களில் இருக்கும் அபத்தம் மற்றும் அவலங்களை ரொம்ப தமாஷா ஒரு ஆள் வலைபதிவாக செய்யறாரு.
பிளாகின் பேரு " பட்டா பட்டி".
www.pattapatti.blogspot.com

பயங்கரமான தமாஷ் பேர் வழி.
ரொம்பவும் ஒரிஜினலான ஆளு போல.

வலைப்பதிவைப் பார்த்து படித்து வாய் விட்டு சிரித்தது (என் பையன் என்னை பைத்தியத்தை பார்பது போல பார்த்தான்!! என்ன நினைத்தானோ??)
இதுதான் முதன் முறை.

மனசுவிட்டு சிரிக்க உடனே அணுகவும் பட்டாபட்டி..

ஏம்பா..சரிதானே..

Tuesday, March 09, 2010

மூகங்கள்!!

மூகங்கள்!

நாம் எல்லோரும் பலஇடங்களில் பல விதமாக காட்சிதருகிறோம். இது கிட்ட தட்ட எல்லோருக்கும் ஒரளவு தெரியும். ஆனால் இதைப் பற்றி எத்தனை பேர் சிந்திக்கின்றனர்.? எத்தனைப் பேர் இதை ஒத்துக் கொள்கின்றனர்.?
ஆனால் யாரைக் கேட்டாலும் தாங்கள் எல்லா நேரத்திலும் எல்லாரிடமும் ஒரே மாதிரி பழகுவதாகவும் செயல்படுவதாகவும் சொல்வார்கள். தங்களிடம் பாசாங்கு இல்லையென்றே சொல்கின்றனர்.


தமிழர்கள் / இந்தியர்களை கேட்டால் உலகிலேயெ இந்தியர்கள்தான்/தமிழர்கள்தான் பொய்யாக வாழாமல் உண்மையாக வாழ்வதாகச் சொல்லுவார்கள். மேலும் இவரிகளின் கருத்துப்படி மேலைநாட்டில் கலாசார ஒழுக்கமெ கிடையாது. மேலைநாட்டினர் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்வதாகவும் அவர்களின் வாழ்வில் ஆழ்ந்த கருத்தோ கோட்பாடுகளோ இல்லையென்று அடித்துக் கூறுவார்கள். இது உண்மையா?


தமிழர்கள்/இந்தியர்கள் ஒரு உண்மையான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்களா? இவ‌ர்களிட‌ம் பொய்யுறை இல்லையா? இவ‌ர்க‌ளின் ச‌முக‌ பொருளாதார‌ அர‌சிய‌ல் இப்ப‌டி பொய்யை அடிப்ப‌டையாக‌ கொண்ட‌தில்லையா?
இவ‌ர்க‌ள் ம‌ன‌சாட்சியின்ப‌டி ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தீங்கிழைக்காம‌ல் சுய‌ந‌ல‌ம் பாராட்டாம‌ல் தின‌ச‌ரி வாழ்க்கையை மேற்கொள்கிறார்க‌ளா? இவ‌ர்க‌ள் தின‌மும் உண்மையான‌ ம‌கிழ்ச்சியை அனுப‌விக்கிறார்க‌ளா?


கேள்விக‌ள்..கேள்விக‌ள்..கேள்விக‌ள்.


இத‌ற்கு விடைதேட‌ முற்ப‌ட்டோம்.
ச‌ரி. முத‌லில் ஒரு சாதார‌ண‌ ந‌டுத்த‌ர‌ வ‌ர்க‌த்து ம‌னித‌ரின் தின‌ச‌ரி வாழ்க்கையில் அவ‌ர் எத்த‌னை முறை பொய்யுறைக‌ள‌ தெரிந்தே சொல்கிறார்?
தாம‌தமாக‌ அலுவ‌ல‌க‌ம் வ‌ந்தால் உண்மையான‌ கார‌ண‌ங்க‌ளை ஒரு போதும் சொல்வ‌தில்லை. அத‌ற்கு கார‌ண‌ம் சுமார் 99% இவ‌ர‌து திட்ட‌மிடாத‌தே முக்கிய‌ கார‌ண‌மாக‌ இருக்கும். ஆனால் இதே தவறை மற்றவர் அல்லது இவருக்கு கீழ் இருக்கும் பணியாளர் செய்யும் போது இவர் அதை கடுமையாக கண்டிப்பார்." இவங்க எப்போதுமே இப்படிதான் சார்? பொய்யைத் தவிர வேறொன்றுமே சொல்லமாட்டார்? ........எல்லோருமே அப்படித்தான்."(விடுபட்ட இடத்தில் அந்த மனிதரின் பிர்தேசமோ, மொழியோ, அல்லது ஜாதியோ சேர்த்துக் கொள்ளுங்கள்)


அலுவ‌ல‌க‌த்தில் ம‌ற்ற‌வ‌ர் செய்த‌ செய‌லுக்கு பாராட்டு இவ‌ருக்கு கிடைத்தால் அதை ம‌றுப்பேதும் சொல்லாம‌ல் வாங்கி கொள்வார். அப்ப‌த்தான் அவ‌ர் பிழைக்க‌த் தெரிந்த‌வ‌ர். இல்லையே இவ‌ர் பிழைக்க‌த் தெரியாத‌வ‌ர். ஆனால் இவரது பாராட்டை மற்றவர் வாங்கிக் கொண்டால் "அயோக்கியன்..தூரோகி".



ப‌க்க‌த்திலிருக்கும் பெண் அல்ல‌து ஆண் த‌ன்னை கண்டு உருகினால் ந‌ம‌க்கு ச‌ந்தோஷ‌ம். "நாமதான் ஹீரோ / ஹீரோயின்..சூப்பரில்ல.!."இதை த‌ன் வாழ்க்கை துணையிட‌ம் சொல்வோமா? சொன்னால் நீ முட்டாள் அல்ல‌து பைத்திய‌க்கார‌ன்? சொல்லாவிட்டால் நீ கில்லாடி! இதையே மற்றவர் செய்தால் அவர் "கடைந்தெடுத்த அயோக்கியன்.நம்பிக்கை துரோகி..இவனெல்லாம் நிக்க வச்சு சுடனும் சார்".


ஒரு விஷ்ய‌த்திற்காக‌ வ‌ரிசையில் நிற்க‌ வேண்டியுள்ள‌தா? உட‌னே அங்கு ந‌ம‌க்கு தெரிந்த‌வ‌ர் வேலை செய்கிறார்க‌ளா என்று பார்த்து அவ‌ர் மூல‌ம் வ‌ரிசையை முந்த‌ அல்ல‌து த‌வ‌ரிக்க‌ முய‌ல்கிறோமா? அப்ப‌டி செய்தால் நீங்க‌ள் ந‌ல்ல‌ "நெட்வொர்க்" வைத்திருக்கிறீர்க‌ள் என்று நீங்களே உங்களை பாராட்ட தயங்க மாட்டீர்கள். இதை ஒரு குற்ற‌மாக‌வே பார்க்க‌ ம‌றுக்கிறீர்க‌ள். வ‌ரிசையில் நிற்ப‌து இழிவாக‌வே உங்க‌ளுக்கு ப‌டுகிற‌து. இப்ப‌டி இல்லாம‌ல் நீங்க‌ள் வ‌ரிசையில் நின்று, சிபாரிசு இல்லாம‌ல் காரிய‌ம் செய்வ‌தை பிழைக்க‌த் தெரியாத‌வ‌ர் செய்யும் செய‌ல் என்ப‌து த‌மிழ‌ர்/இந்திய‌ர்க‌ளின் பெருவாரியான‌ க‌ருத்து.
இதை ஒரு ஒழுக்க‌க்கேடாக‌வே பார்க்க‌ ம‌றுக்கிற‌து ந‌ம் ச‌முக‌ம். இதைப் உங்க‌ளிட‌ம் எதிர்பார்த்து அல்ல‌து இத‌ற்கு உங்க‌ளை ஆட்ப‌டுத்தும் ந‌ப‌ர் உங்க‌ளின் மோச‌மான‌ எதிரியாக‌க் க‌ருத‌ப்ப‌டுவார்.


நீங்க‌ள் வேலை செய்யும் ப‌த‌வியின் கார‌ண‌மாக‌ உங்க‌ளுக்கு யாராவ‌து கையூட்டு கொடுக்கும் போது நீங்க‌ள் அதை வாங்க‌ ம‌றுத்தால் நீங்க‌ள் ஒரு "உத‌வாகாரை". உங்க‌ளுக்கு கையூட்டு கொடுத்தால்தான் நீங்க‌ள் வேலை செய்வீர்க‌ள் என்றால் நீங்க‌ள் பிழைக்க‌த் தெரிந்த‌வ‌ர். மேலும் நீங்க‌ள் ஏமாற்றாம‌ல் உங்க‌ள் க‌ட‌மையைச் செய்தால் நீங்க‌ள் "நியாய‌மான‌வ‌ர்" ம‌ற்றும் "வாக்கு த‌வ‌றாத‌வ‌ர்". "ப‌ர்பெக்ட் ஜென்டில்மென்".
ஆனால் நீங்க‌ள் கையூட்டு கொடுக்க‌ நேர்ந்தால் அதை வாங்கும் ஆள் "ப‌க‌ல் கொள்ளைக்கார‌ர்" மேலும் " இந்த‌ நாடு உருப்ப‌டுமா?" "ஒரு நியாய்ம் வேண்டாம்?" என்று கேள்விக‌ள் வேறு கேட்க‌ப்ப‌டும்.
உதார‌ண‌ம் : நில‌ப் ப‌திவு ம‌ற்றும் வாக‌ன‌ ப‌திவு அலுவ‌ல‌க‌ம். (இங்கு ல‌ஞ்ச‌த்தை ஒழிக்க‌வே முடியாது).


ஒரு பொருள் இல‌வ‌ச‌மாக‌ கிடைக்கிற‌து என்றால் அந்த‌ பொருள் த‌ங்க‌ளிட‌ம் இருந்தாலும் (உ.ம். இல‌வ‌ச‌ தொலைக் காட்சி)சும்மா போய் வாங்கிவைத்துக் கொள்ளாத‌வ‌ர்க‌ள் த‌மிழ‌க‌த்தில் எத்த‌னைப் பேர்?
"சும்மாத்தானே சார் த‌ர்றாங்க‌" இது சும்மா வ‌ர‌வில்லை த‌ங்க‌ளின் வ‌ரிப் ப‌ண‌த்திலிருந்து வ‌ருகிற‌து என்று எத்த‌னைப் பேர் உண‌ர்கிறார்க‌ள்? அப்ப‌டியே உண‌ர்ந்தாலும் "அதுச‌ரி..ந‌ம்ம‌ ப‌ண‌ம்தான் ந‌ம‌க்கே திரும்பி வ‌ருகிற‌து" என்று சால‌ஜாப்பு வேறு.
த‌ம்மிட‌ம் ஏற்க‌ன‌வே இருப்ப‌தாலும் த‌ம‌க்கு அது தேவைப்ப‌டாத‌தாலும் அல்ல‌து த‌ன‌க்கு அதைப் பெற‌ த‌குதியில்லாத‌தாலும் எத்த‌னைப் பேர் எத்த‌னைப் பொருள்க‌ளை ம‌றுத்திருக்கின்ற‌ன‌ர்? இலவசத்தை பெறுவதில் ஏற‌க்குறைய‌ எல்லோரும் அடிமைக‌ள் என்றே சொல்ல‌லாம். (உ.ம்.ரேஷ்ன் கார்டு).
இது திருட்டு இல்லையா? ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சேர‌ வேண்டிய‌தை த‌ட்டிப் ப‌றித்த‌லாகாதா? இப்ப‌டி த‌குதியில்லாத‌வ‌ர்க‌ள் வாங்காம‌ல் இருந்தால் அந்த‌ பொருளை கொள்முத‌ல் செய்வ‌தாலும், அத‌ற்கு மானிய‌ம் அளிப்ப‌தாலும் அர‌சுக்கு ஏற்ப‌டும் செல‌வீன‌ங்க‌ள் குறைந்தால் அந்த‌ வ‌ரிப்ப‌ண‌ம் வேறு ப‌ல‌ காரிய‌ங்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌ட‌லாம். அல்லது வ‌ரிச்சுமை ச‌ற்றே குறைய‌லாம் அல்ல‌வா? ஆனால் இந்த‌ விஷ்ய‌த்திற்கு உட‌ன‌டிப‌தில்.."நாம‌ வாங்காட்டா என்ன‌ சார்? ந‌ம்ம‌ பேரைச்சொல்லி வேற‌ எவ‌னோ வாங்கிட்டு போப்போறான்".
அதுச‌ரி..அவ‌ர் குற்ற‌வாளி என்றால் நீங்க‌ள் என்ன‌?


த‌மிழ‌ர்/இந்திய‌ர் த‌ம் வாழ்நாளில் தாம் ச‌ம்பாதித்த‌ வ‌ருமான‌த்தில் எத்த‌னை ச‌த‌விகித‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்காக‌ அல்ல‌து த‌ன்னைவிட வ‌றுமையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு செல‌விட்டிருக்கிறார் என்று ஆராய்ந்தால் மிக‌ப் பெரிய‌ ஏமாற்ற‌மே மிஞ்சும். அப்ப‌டி செல‌வு செய்வ‌தை 99 விழுக்காடு ம‌க்க‌ள் யோசித்தே பார்த்த‌தில்லை. அவ‌ர் கோடியில் ச‌ம்பாதித்தாலும் அல்ல‌து ஆயிர‌ங்க‌ளில் ச‌ம்பாதித்தாலும் அல்ல‌து நூற்றுக் க‌ண‌க்கில் ச‌ம்பாதித்தாலும் அது அத்த‌னையும் தாம் த‌ம் உற‌வு குடும்ப‌ம் என்றே செல‌வு செய்கின்ற‌ன‌ர்.
இத்த‌னைக்கும் இவ‌ர்க‌ள்தான் க‌ர்ண‌னைப் ப‌ற்றி மிக‌ உய‌ர்வாக‌ பேசுவார்க‌ள்.


இப்ப‌டி செல‌வு செய்யாத‌த‌ற்கு கார‌ண‌ம் இந்தியாவின் வ‌றுமைதான் என்று யாராவ‌து சொன்னால் ந‌ம்பாதீர்க‌ள். கார‌ண‌ம் க‌ட‌ந்த‌ ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ உல‌கில் த‌ங்க‌த்தை மிக‌ அதிக‌ம் இற‌க்கும‌தி செய்யும் நாடுக‌ளில் இந்தியா மூத‌ன்மை வ‌கிக்கிற‌து. இது எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து?


இந்தியாவில்தான் மிக‌ப் பெரிய‌ கோடீஸ்வ‌ர‌ர்க‌ள்கூட‌ கொஞ்ச‌ம் கூட‌ தான் வாழும் அல்ல‌து த‌ன்னை சுற்றியுள்ள‌ ச‌முக‌த்தைப் ப‌ற்றி கொஞ்ச‌ம் கூட‌ க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை.


இதைச் சொன்ன‌வுட‌ன் "அஹா..எப்ப‌டி இதைச் சொல்ல‌லாம்..அந்த‌ ப‌ள்ளி இல்லையா..இந்த‌ ச‌த்திர‌ம் இல்லையா..இந்த‌ கோவில் இல்லையா" என்று உதார‌ண‌ம் காட்ட‌த் தொட‌ங்காதீர்க‌ள்.
ச‌முக‌த்திற்கு செய்வ‌து என்ப‌து கோவிலுக்கு செய்வ‌தில்லை. ப‌ள்ளிக் க‌ல்வி வியாபார‌ம் ஆகிவிட்ட‌ப் பிற‌கு க‌ல்விக் கூட‌ங்க‌ளைப் ப‌ற்றி சொல்ல‌க்கூடாது.
திருப்ப‌தி பெருமாளுக்கு செய்வ‌து அந்த‌ண‌ர்க‌ளை அழைத்து சோறுப் போடுவ‌து இதெல்லாம் ச‌முக‌ ப‌ய‌ன்பாடு ஆகாது.


உண்மையான‌ ச‌முக‌ ந‌ல‌ன் என்ப‌து சுற்றுச் சுகாதார‌த்தை போற்ற‌ ப‌ண‌ம் த‌ருத‌ல், அல்ல‌து அது ச‌ம்ப‌ந்த‌மான‌ ஆராய்ச்சிக்கு வ‌ழிவ‌கைச் செய்த‌ல், ம‌ருத்துவ‌ உத‌விக‌ளை ஏழைக்க‌ளுக்கு ம‌லைவாழ் ம‌க்க‌ளுக்கு எடுத்துச் செல்லுத‌ல் (அவ‌ர்க‌ளை உங்க‌ளிட‌ம் = ந‌க‌ர‌த்திற்கு= அழைக்காம‌ல் அவ‌ர்க‌ளிட‌ம்
இவைக‌ளை கொண்டு செல்லுத‌ல்), இல‌வ‌ச‌ த‌ர‌மான‌ க‌ல்வி அல்ல‌து க‌ல்விக்கான‌ க‌ட்டுமான‌ ப‌ணிக்கான‌ (க‌ட்டிட‌ம், உப‌க‌ர‌ண‌ங்க‌ள்)பொருள்க‌ளை
கிராம‌ம் கிராமாக‌ கொண்டு செல்லுத‌ல், இந்திய க‌லாசார‌ம் அல்ல‌து மொழி சார்ந்த‌ க‌லாசார‌த்தை பேணுவ‌த‌ற்கான‌ க‌ட்ட‌மைப்புக‌ளை உருவாக்குத‌ல், ந‌ல்ல‌ த‌ர‌மான‌ நூல‌க‌ளை வெளிக் கொண‌ர‌ வ‌ர்த‌க‌ ரீதியில்லாம‌ல் இல‌க்கிய‌த்தின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ உத‌வுத‌ல், தொட‌ர்ந்து மொழி சார்ந்த‌ வ‌ள‌ர்ச்சிக்காக‌ திற‌ன்வாய்ந்த‌ ம‌க்க‌ளைக் கொண்டு ஊட‌க‌ங்க‌ளில் பங்கு கொள்ளூத‌ல்
இப்ப‌டி பல‌ வ‌கையாகும்.


1. இந்தியாவில் பெரிய‌ அள‌வில் ம‌ருந்து ச‌ம்ப‌ந்த‌மான‌ ஆராய்ச்சி ந‌ட‌க்கிற‌தா?
ந‌ட‌க்கிற‌து என்றால் அது எத்த‌னை ம‌ற்றும் யாரால்?


2.சிறு விஞ்ஞானிக‌ள் அல்ல‌து தொழில் முனைவோர்க‌ளுக்கு ஊக்குவிக்க‌ ஊட‌ங்க‌ள் மூல‌மாக‌ என்ன‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ந‌ட‌க்கிற‌து? இப்ப‌டிப் ப‌ட்டோர் வ‌ங்கிக‌ளை ந‌ம்பியிராம‌ல் வேறு ஏதாவ‌து உத‌வி செய்யும் அமைப்பு உள்ள‌தா?


3. வாழ்வின் முன்னேற்ற‌ம் என்றால் அது அர‌சு வேலையை நாடுவ‌து அல்ல‌து சினிமாவில் பேரெடுப்ப‌து அல்ல‌து அர‌சிய‌லில் சேருவ‌து. இதுவ‌ல்லாது வேறு வ‌ழி காட்ட‌ப்ப‌டுகிற‌தா?


இது போன்று எத்த‌னை வ‌கைக‌ளில் ச‌முதாய‌த்திற்கு இந்த‌ கோடீஸ்வ‌ர‌ர்க‌ள் ப‌ய‌ன் த‌ர‌லாம்? செய்தார்க‌ளா?


இந்தியாவில் உழைக்கும் அனைவ‌ரும் த‌ங்க‌ள் வ‌ருமான‌த்தில் சுமார் 5 விழுக்காடு ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ச‌முதாய‌ ந‌ல‌ன் சார்ந்த‌ திட்ட‌ங்க‌ளுக்கு கொடுக்க‌த் தொட‌ங்கினாலேயே இந்தியாவில் வ‌றுமை ஒரே வ‌ருட‌த்தில் காணாம‌ல் போய்விடும். இதுவ‌ரை ஏன் செய்ய‌வில்லை?


கார‌ண‌ம் நாம் மிக‌ப் பெரிய‌ சுய‌ந‌ல‌வாதிக‌ள்.


இந்தியாவில் ம‌ண‌ம‌க்க‌ள் வாங்கு வ‌ர‌த‌ட்சிணை அச‌ர‌ வைக்கிற‌து.


இந்தியாவில் ச‌ராச‌ரியாக‌ சுமார் 10 ப‌வுன் ந‌கை க‌ல்யாண‌ சீராக‌ கொடுக்க‌ப் ப‌டுகிற‌து.(இது மிகவும் குறைந்தபட்ச மதிப்பீடு) அதாவ‌து சுமார் 80 கிராம் த‌ங்க‌ ந‌கை எந்த‌ வித‌ ப‌ய‌ன் பாடும் இல்லாம‌ல் ஒரு வீட்டில் முட‌ங்கி போகிற‌து. ஒரு வ‌ருட‌த்தில் சுமார் 1 கோடி திரும‌ண‌ங்க‌ள் ந‌ட‌ப்ப‌தாக‌ வைத்துக் கொள்வோம். அப்ப‌டியானால் ஒரு வ‌ருட‌த்தில் சுமார் 800 ட‌ன் த‌ங்க‌ம் எந்த‌ வித‌ ப‌ய‌ன் பாடும் இல்லாம‌ல் முட‌ங்கிப் போகிற‌து. இத‌ன் இன்றைய‌ ப‌ண‌ ம‌திப்பீட்டில் பார்க்க‌லாம்.


80 கிராம் = ரூ.96000/=
800 ட‌ன் = ரூ. 9600,00,00,000/=


அதாவ‌து சுமார் 9600 கோடி ரூபாய்க‌ள் விர‌மாகிற‌து. இதைத் த‌விர‌ பாத்திர‌ம் ப‌ண்ட‌ம், உடைக‌ள் ம‌ற்றும் வ‌ருவோர் போவோருக்கெல்லாம் உண‌வு என்று எத்தனை கோடி ரூபாய்க‌ள் ந‌ம‌து பெருமைக்காக‌ வீண‌டிக்கிறோம்.


ம‌லைப்பாக‌ இருக்கிற‌து அல்ல‌வா?
இன்னுமா நாம் ந‌ம்மை ஏழ்மை நாடு என்று சொல்லிக் கொள்வ‌து?


ந‌ம‌க்கு எத்த‌னை கோடிக‌ள் வ‌ருமான‌ம் வ‌ந்தாலும் நாம் ஏமாற்ற‌த் த‌வ‌றுவ‌தில்லை.
பேராசை என்ற‌ வெள்ள‌த்தில் திளைப்ப‌தில் நாம் ம‌ன்ன‌ர்க‌ள்.
ஆட்டோ ஓட்டுப‌வ‌ராக‌ இருந்தாலும் அல்ல‌து "ச‌த்திய‌ம்" ராஜுவாக‌ இருந்தாலும் ச‌ரி ந‌ம‌க்கு ப‌ண‌ம் போத‌வே போதாது.
ஆசைப் ப‌டுவ‌து வேறு. பேராசைப் ப‌டுவ‌து வேறு என்ப‌தை கூட‌ நாம் ம‌ற‌ந்து விட்டோம்.
நியாய‌மாக‌ ந‌ம‌க்கு ந‌ம் திற‌மை, ப‌டிப்பு, உழைப்பு, வாய்ப்பு இத‌ன் அடிப்ப‌டையில் கிடைக்க‌ வேண்டிய‌வைக‌ளுக்கு அசைப் ப‌ட்டால் அது ஆசை.
ஆனால் நாம் ந‌மக்கு இது வேண்டு என்று நினைக்கிறோமேய‌ன்றி அத‌ற்கு நாம் த‌குதியான‌வ‌ரா அல்ல‌து அதை நேர்மையாக‌ அடைய‌ முடியுமா என்று யோசிப்ப‌தில்லை.


மேலும் ஒருவ‌ர் ஒரு கோடிக்கு (இன்றைய‌ தேதியில்)மேல் ப‌ண‌ம் சேர்த்து என்ன‌ செய்ய‌ப் போகிறார் என்று அவ‌ருக்கெ தெரியாது.
உ.ம். ச‌த்திய‌ம் ராஜு. அவ‌ர‌து சொத்து அவ‌ர் த‌ன் நிறுவ‌ன‌த்திலேயே திருட‌ வேண்டிய‌ கார‌ண‌ம் என்ன‌?
மேலும் இன்னும் மேலும் என்கிற‌ ஒரு வித‌மான‌ ம‌னோவியாதிய‌ன்றி வேறு என்ன‌?
அவ‌ர் திருடாம‌லேயே ஒழுங்காக‌ நிறுவ‌ன‌த்தை (உல‌காளாவிய‌து)ந‌ட‌த்தியிருந்தாலேயே இன்னும் ஒரு 10 வ‌ருட‌ங்க‌ளில் அவ‌ர‌து சொத்து
இரு ம‌ட‌ங்காயிருக்கும்.


ஆக‌ நாம் சொத்து சேர்க்க‌ என்ன‌ வேண்டுமானாலும் செய்வோம்.
ஆனால் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் கேட்டு பாருங்க‌ள். ஒரு ஆள் கூட இதை
ஒத்துக் கொள்ள‌ மாட்டார்.


ஒரு ஆட்டோ ஓட்டுன‌ரிட‌ம் கேளூங்க‌ள் அவ‌ர் தின‌ச‌ரி எத்த‌னை பேரிட‌ம் ச‌ரியான‌ காசு வாங்கினார் என்று? எல்லாமே நியாய‌மான‌ ச‌வாரி என்பார்.
ஆனால் அவ‌ருக்கு தெரியும். அவ‌ர் பிடுங்கிய‌து அநியாய‌ம் என்று.
"என்னாசார் ப‌ண்ற‌து..நாங்க‌ளும் வாழ்னுமே" வ‌ழ‌க்க‌மான‌ ப‌ல்ல‌வி.


அப்ப‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ஏமாற்றித்தான் த‌மிழ்நாட்டில் வாழ‌ முடியுமா?
அப்ப‌டி இருந்தால் கேவ‌ல‌மில்லையா?


ம‌ளிகைக் க‌டைக்கார‌ரை கேளுங்க‌ள். க‌ல‌ப்ப‌ட‌மில்லையா என்றால்
இல்ல‌வே இல்லையென்பார்.
அவ‌ர‌து த‌னிப்ப‌ட்ட‌ ப‌திலும் "நாங்க‌ளும் வியாபார‌ம் செய்து நாலு காசு பாக்க‌னுமில்ல‌".
பூக்காரியை கேளுங்க‌ள், முழும் ச‌ரியாக‌ போட‌ப்ப‌டுகிற‌தா என்று?
க‌ற்பூர‌ம் ஏத்தி ச‌த்திய‌மே செய்வார்.
த‌னியாக‌ கேட்டால் "என்னா ப‌ண்ற‌து..ர‌வுடிக்கு மாமுல் குடுத்து, த‌ண்ட‌ல் க‌ட்டி ஊட்டை யார் பார்த்துகிற‌து!"..புருஷ‌ன் குடிகார‌ன். கார‌ண‌ங்க‌ளா இல்லை.

சினிமா தியேட்ட‌ர் வைத்திருப்ப‌வ‌ரை கேளுங்க‌ள். "ஏன்..பாதி ப‌ட‌த்தில் குளிர் வ‌ச‌தி நிறுத்த‌ப் ப‌டுகிற‌டது? ஏன் க‌ழிவ‌றை மோச‌மாக‌ உள்ள‌து"..
அவ‌ர‌து த‌னிப்பாட‌ல்: " என்னா சார் ப‌ண்ற‌து..கார்ப‌ரேஷ‌ன், மின்சார‌ வாரிய‌ம், லோக்க‌ல் போலீஸ், ர‌வுடி மாமுல், எல்லாத்தை தாண்டி ப‌ட‌மும் ஓடாம‌ல் கையை க‌டிக்குதே"

எல்லோருக்கும் கார‌ண‌ங்க‌ள் இருக்கிற‌து. ஒரு தொழிலை த‌ம்மால் ச‌ரியாக‌ செய்ய‌ முடியாம‌ல் போனால் அதிலிருந்து வில‌கி த‌ம‌க்கு தெரிந்த‌ வேறு
தொழிலை செய்யாம‌ல் அந்த‌ தொழிலேயே மொள்ள‌ மாறித்த‌ன‌மும் முடிச்ச‌விக்கி த‌ன‌மும் செய்து நீடிக்க‌ நினைப்ப‌து த‌வ‌றில்லையா? திருட்டுத்த‌ன‌மில்லையா?
இதுதான் த‌மிழ‌ன்/இந்திய‌ க‌லாசாரமா?

மேலே நான் கூறிய‌ கேள்விக‌ள் ஏதாவ‌து அநியாய‌மா?

இது போன்று ஏதாவ‌து ஒன்று மேலை நாடுக‌ளில் ந‌ட‌க்கிற‌தா?
அப்ப‌டியிருக்க‌ அவ‌ர்க‌ள‌து க‌லாசார‌ம் எப்ப‌டி ஒரு மோச‌மான‌ க‌லாசார‌ம் ஆகும்?

மேலை நாடுக‌ளில்:
1. அரசாங்க அலுவலகத்தில் அலுவலர் தம் கடமையை செய்ய நீங்கள் கையூட்டு தரவேண்டுமா?
2. க‌ல்லூரியில் சேர்வ‌த‌ற்கு ல‌ஞ்ச‌ம் உண்டா?
3. மின்சார‌ இணைப்பு பெற‌ ல‌ஞ்ச‌மோ அல்ல‌து மின்சார‌ம் திருட‌ ல‌ஞ்ச‌மோ உண்டா?
4. சாலை விதிக‌ளை மீற‌ காவ‌ல‌ர் கையூட்டு பெறுவாரா?
5. எந்த‌ ஒரு இட‌த்திலும் வ‌ரிசை மீறுத‌ல் ந‌டை பெறுமா?
6. நீங்க‌ள் ச‌ட்ட‌ பூர்வ‌மாக‌ செய்யும் எந்த‌ தொழிலுக்கும் ர‌வுடிக‌ள் அல்ல‌து அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு "மாமூல்" த‌ர‌வேண்டி இருக்குமா?
7. வாட‌கை வாக‌ன‌த்தில் "மீட்ட‌ருக்கு மேல் போட்டு குடுசார்" உண்டா?

இந்திய‌ன் தாத்தா சொன்னால் போல், இந்தியாவில் அவ‌ர‌வ‌ர் க‌ட‌மையை செய்ய‌வே நாம் ல‌ஞ்ச‌ம் கொடுக்க‌ வேண்டியுள்ள‌து. ஆனால் ம‌ற்ற‌ நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ அவ‌ர்க‌ள் க‌ட‌மையை செய்யாதிருக்க‌ ல‌ஞ்ச‌ம் பெற‌ வாய்புண்டு. அதுவும் மாட்டிக் கொண்டால் க‌ட்டாய‌ம் விரைவில் த‌ண்ட‌னை நிச்ச‌ய‌ம்.

இதுவ‌ரை சொன்ன‌து அதிக‌ம் என்று நினைத்தீர்க‌ளானால் நான் இன்னும் சொல்ல‌ ஆர‌ம்ப்பிக்க‌வேயில்லை என்றே சொல்ல‌லாம்.

நான் இன்னும் அர‌சிய‌ல்வாதிக‌ளைப் ப‌ற்றி பேச‌வே தொட‌ங்க‌ வில்லை.
வீட்டில் உள்ள‌ உற‌வுக‌ளைப் ப‌ற்றி பேச‌த் தொட‌ங்க‌வில்லை.
ஊட‌க‌ங்க‌ளின் நிலைப்பாட்டை அல்ல‌து செய‌ல்பாட்டை இன்னும் தொட‌வேயில்லை.
சாமான்ய‌ ம‌னித‌னின் ச‌முக‌ க‌ட‌மைக‌ளின் நிழ‌லைக் கூட‌ இன்னும் நான் சுட்டிக்காட்ட‌வில்லை.

அத‌ற்குள்ளாக‌வே அலுப்பு த‌ட்டுகிற‌து.
க‌விஞ‌ர் சொன்ன‌துதான் நினைவுக்கு வ‌ருகிற‌து!
"பொய்யிலே பிற‌ந்து பொய்யிலே வ‌ள‌ர்ந்த புல‌வ‌ர் பெரும‌க்க‌ளாக‌வே!" நாம் இருக்கிறோம்.

இதில் நாம் மிக‌ உய‌ர்ந்த‌ க‌லாசார‌த்தை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ பேசிக் கொள்கிறோம். ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தூற்ற‌வும் செய்கிறோம்.
வெட்க‌மாக‌ இல்லை ந‌ம‌க்கு?
என‌க்கு இருக்கிற‌து.

Monday, February 22, 2010












நேற்றைய தியாகங்களின் மீது கட்டப்பட்டவைதான் இன்றைய வெற்றிகள்.
இன்றைய வியர்வைகள்தான் நாளைய வெற்றியின் அஸ்திவாரங்கள்
.

Wednesday, February 10, 2010

நம்மவரின் வியாபார தெறமை!!!


இது என்னோட புலம்பல்தான்.
நானும் பல வெளிநாட்டு இந்தியரைப் போல இந்தியாவை விட்டு வெளிநாடு வந்து பல வருஷங்களாச்சு.

ஆனா வழக்கமான செய்யவேண்டிய கடமைகளை தவறாது செய்வேன். அதாவது விடாம கணினியில் தமிழ் காமெடி பாக்கிறது. ஜூ.வி. படிக்கிறது. கடைக்கு போய் சி.டி/ட்விடி வாங்கி பார்த்து (குத்து மதிப்பா ஆணா பெண்ணா என்று தெரியும்)பிரிண்ட் மோசம்னு புலம்பறது. காரில் தவறாம தமிழ் பாட்டு போட்டு கேட்பது. ரெண்டு தமிழர் கூடினா இளையராஜாவா அல்லது ரஹமானான்னு பட்டி மன்றம் நடத்தற்து. கடைசில..மெட்ராஸ் வெய்யிலுக்கு ஏங்கறது!!.

அப்புற‌ம் எப்ப‌ சார் ஊருக்கு?

பார்ப்போம். செப்டெம்ரில் போலாம்னு இருக்கேன்..

இப்படி பேசிக்கிட்டு இருந்த‌வ‌தான். ஆனா ச‌மீப‌த்தில் ஒரு த‌வ‌றை செய்தேன்.

இந்தியா இப்ப‌ வ‌ள‌ர்ச்சிப் பாதையில‌ வேக‌மா போய்கிட்டு இருக்குன்னு எல்லா பத்திரிக்கைக‌ளும் எழுதுதா?

ச‌ரி.. நாமும் கொஞ்ச‌ம் கூட‌ போவோமேன்னு ஒரு வியாபார‌ம் ஆர‌ம்பிக்க‌லாம்னு நினைச்சேன். அதான் த‌ப்பா போச்சு.

என‌க்கு சில‌ சிநேகித‌ர்க‌ள் உண்டு. அவ‌ர்க‌ள் ஆடை உற்ப‌த்தி தொழில் செய்ப‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் எப்போது பார்த்தாலும்..
"மாப்பிள.. ஆர்ட‌ர் பிடிச்சுக்குடு..ந‌ல்ல‌ க‌மிஷ‌ன் த‌ர‌வோம்.
எவ‌ன் எவ‌னோ அங்கிருந்து இங்க‌ வ‌ந்து ஆர்ட‌ர் குடுத்து க‌மிஷ‌ன் வாங்கிறான்.
நீ செஞ்சா என்ன‌? நாமும் கொஞ்ச்ம் செட்டல் ஆகலாமில்ல"
அப்படின்னு பிட்ட‌ போட்டாங்க‌.

நானும் நிஜ‌மாத்தான் சொல்றாங்க‌ போலிருக்குன்னு...

"எதுக்குடா யாருக்கோ செய்றீங்க‌..ந‌ம்ம‌ளே வெளிநாட்டில் விக்க‌லாமேன்னு!"
ச‌மிப‌த்தில் சொன்னேன்.

"ஆஹா..சூப்ப‌ர்" அப்ப‌டின்னு சொன்னாங்க‌.

நான் எந்த‌ பொருளை செய்ய‌ சொன்னேன் என்ப‌தை இங்கெ சொல்ல‌வில்லை.
அது ர‌க‌சிய‌ம்.

ஆனால் நான் ஒரு "மாதிரி" யை கொடுத்து "இது போல‌ செய்யுங்க‌ப்பா" அப்ப‌டின்னு கொடுத்தேன்.

செய்றேன்னு சொல்லிட்டு வாங்கிட்டு போன‌வ‌ங்க‌த்தான்.

புஷ் போய் ஒபாமா வ‌ந்து ஒரு வ‌ருஷ‌ம் கூட‌ ஆகி போச்சு

எப்ப‌ கேட்டாலும்.. "க‌வ‌லை ப‌டாதீங்க‌ன்னா..ரெடியாட்டிருக்கு."

ஒரே ப‌தில்.

ஒரு விஷ‌ய‌த்தை ஒத்துக்க‌னும். இவ‌ங்க‌ பேச்சு மாற‌விங்க‌ இல்ல‌.

எப்போதும் ஒரே பேச்சுத்தான்.

அதாவ‌து "ரெடியாட்டிருக்ங்க‌ண்ணா".

ஆச்சு...வாரா வார‌ம் என் போன் பில்லு எகிறிய‌துதான் மிச்ச‌ம்.

அவ‌ங்க‌ ப‌தில்ல‌ மாற்ற‌மேயில்ல‌. ச‌ரி..ரொம‌ப‌ நாளாச்சேன்னு ஓரு எட்டு நேரா போய் என்னான்னு கேட்க‌லாமுன்னு போனா...

என்ன‌வெல்லாமோ க‌தை சொல்றாய்ங்க‌.

ச‌ரின்னு இன்னொரு ஆளை பிடிச்சோம். அவ‌ரு ஒரு "மாதிரியை" (சாம்பிள்) ப‌ண்ணி காமிச்சாரு. அது நான் குடுத்த‌ மாதிரியை போல‌வே இல்லை.

ப‌ல‌ குறைக‌ள். ச‌ரி..முத‌ல் மாதிரித்தானே. பின்னாடி ச‌ரி ப‌ண்ணிட‌லாமுன்னு அவ‌ர் கிட்ட‌ நான் க‌ண்ட‌ குறைக‌ளை ச‌ரி செய்ய‌ சொன்னேன்.

ஆச்சு..மூணு மாச‌மா ஆளையும் காணும். பேச்சையும் காணும். (அசோக‌ன் வ‌ச‌ன‌ம்தான் நினைவுக்கு வ‌ருகிற்து...ஷிலா..ஆறு மாச‌மா ஆளையும் காணும்..அஞ்சு ல‌ட்ச‌ ரூபாய் ப‌ண‌த்தையும் காணும்னு..நான் ப‌ட‌த்தில் மொட்டைத‌லையோட‌ சொல்வார்..(எந் த‌லையும் இப்ப‌ மொட்டைதான்))

இதுக்கு ந‌டுவுல‌ இந்த‌ வியாபார‌ விஷ்ய‌மா சில‌ க‌ணினி நிபுண‌ர்க‌ளை ச‌ந்திச்சேன். நான்: வெப் சைட் உண்டாக்க‌னும்.

ந‌ம்மாளு: அஹா..சூப்ப‌ர்.. செஞ்சுட‌லாம் சார்.. நான் உங்க‌ளுக்கு சில‌ சாம்பிள் காட்றேன். எல்லாம் ந‌ம்ம ஆளுங்க‌ செஞ்ச‌துதான்.(யார் இந்த‌ ந‌ம்மாளுங்க‌ற‌து ஆண்ட‌வ‌னுக்கெ வெளிச்ச‌ம்.!)

உங்க‌ வெப்ல‌ ஃப்ளாஷ் போட்டு ஃபோட்டொ ஷாப் போட்டு ப‌கென்டுல‌ எஸ்க்யுல் டாட்ட் பேஸ் வைச்சு செஞ்சுட‌லாம் சார்...ஒரு விஷ்ய‌ம் சார். ப‌ட்ஜெட் என்னாசார்.?

நான்: அஹா ..ரொம்ப‌ விஷ்ய‌ம் தெரிஞ்ச‌வ‌ன் போலிருக்கு. வேலை சுல‌ப‌மா முடிஞ்சுடும்..அப்டின்னு ம‌ன்சுக்குள்ள‌ நினைச்சுகிட்டு என் ப‌ட்ஜெட்டை சொன்னேன்.

ந‌ம்மாளு: எந்த‌ ஊருக்கு சார் இந்த‌ சைட்?

நான் நாட்டை சொன்னேன்.

ந‌ம்மாளு: முடிச்சுட‌லாம் சார்.

எல்லாம் பேசிட்டு போய் ஒரு வார‌ம் க‌ழிச்சு த‌ருவ‌தாக‌ சொன்ன‌ எந்த‌ விவ‌ர‌த்தையும் த‌ராம‌ல் ஒரு குறிப்பிட்ட‌ தொகையை ம‌ட்டும் அட்வான்ஸாக‌ கேட்பார் ந‌ம்மாளு.

என்ன‌சார்? அப்ப‌டீன்னு கேட்டா..

இமெயில் அனுப்பிச்சேனே கிடைக்க‌ல‌யா? அப்ப‌டின்னு ஒரு பிட்ட‌ போடுவார்.
இமெயில் என்ன‌ இந்திய‌ த‌பால் துறையா க‌டித‌த்தை தொலைப்ப‌த‌ற்கு?

ஆச்சு..இவ‌ரும் இன்னும் நான் கேட்ட‌ விள‌க்க‌ங்க‌ளை த‌ர‌ப் போகிறார்.

இப்ப‌டி ந‌ம்மூரில் வியாபார‌ம் செய்ய‌ எவ‌ரிட‌ம் தொட‌ர்பு கொண்டாலும் ஒரு
தாம‌த‌ம். அல்ல‌து தொட‌ர்பு கொள்வ‌தில் ஒரு குழ‌ப்ப‌ம்.

ஏன்..?

ஆனால் இதே ஆட்கள் வடநாட்டிலிருந்து வருபவரிடமோ அல்லது வெள்ளைக்காரரிடமோ தொங்கோ தொங்கு என்று வியாபாரத்திற்காக‌ தொங்குகிறார்.

அவர்களுக்காக இவர்கள் கடனை உடனை வாங்கி செலவழிக்க தயங்குவதில்ல.
பொருள்களை கடனுக்கு வழங்கிவிட்டு பிறகு காசுக்கு இந்த வடநாட்டவரிடமோ அல்லது வெள்ளைக்காரரிடமோ தொங்குகிறார்கள். அல்லது பல சமயம் ஏமாந்து போகிறார்கள்.

ஏன் இந்த வித்தியாசம்?

யோசித்து பார்த்ததில் ஒன்று விளங்கியது.
இவர்கள் நம்மவர்களை அதிகமாக நம்புவதில்லை.

இரண்டாவது. இவர்களின் மனிதில் தெரிந்தோ தெரியாமலோ வடநாட்டினர் மற்றும் வெள்ளைக்காரர் உயர்ந்தவர் என்கிற மனப்பான்மை ஊறிக்கிடக்கிறது.
(அது அவர்கள் வேற்று மொழி பேசுவதால் கூட இருக்கலாம்.)


மேலும் இதையெல்லாவ‌ற்றையும் விட‌ முக்கிய‌மான‌து. இவ‌ர்க‌ளுக்கு தொலைநோக்கு பார்வையில்லாத‌துதான்.

அடுத்த‌ வார‌ம் அல்ல‌து அடுத்த‌ மாத‌ம் கூலிக்கு என்ன‌ செய்வ‌து.?
ஏதாவ‌து அடிச்சு கொடுத்து காசு பாத்துட‌னும். அவ்வ‌ள‌வுதான்.
த‌ர‌த்தைப் ப‌ற்றி அதிக‌ம் அல‌ட்டிக் கொள்ள‌ கூடாது.

ரெண்டு வ‌ருஷ‌ம் "எப்ப‌டியாவ‌து (இதுக்கு ப‌ல‌ அர்த்த‌ங்க‌ள் உண்டு)"
தொழில‌ ந‌ட‌த்தினோமா..காசு பாத்தோமா..ஊர்ல‌ ப‌ள‌ப‌ள‌ன்னு ஒரு
வீட்டை க‌ட்டினோமா..சூப்ப‌ரா ஒரு ஹோண்ட‌ சிட்டி காரில் போனோமா?
இவ்வ‌ள‌வுதான் இவ‌ர்க‌ளின் தொலைநோக்கு பார்வை.

பிற‌கு எப்ப‌டி உருப்ப‌டும்.

ம‌ற்ற‌வ‌ருக்காக‌ உழைப்ப‌தே பெரும் புண்ணிய‌ம் என்கிற‌ அள‌வில்தான் இவ‌ர்க‌ளின் ஆசைக‌ள் இருக்கின்ற‌ன‌.

இவ‌ர்க‌ளின் சொற்க‌ளுக்கும் செய‌ல்க‌ளுக்கு இருக்கும் வித்தியாச‌த்தை பெரிதாக‌ நினைப்ப‌தில்ல‌.
"வியாபார‌த்துல‌ இதெல்லாம் ச‌க‌ஜ‌ம‌ப்பா" அப்ப‌டின்னு க‌வுண்ட‌ர் பாணியில் சொல்லிவிட்டு போயிகிட்டே இருக்காங்க‌.

நேர‌ம் த‌வ‌றாமையை இவ‌ர்க‌ள் ஒரு வியாபார‌ உத்தியாக‌ ம‌திப்ப‌தே இல்லை.

பின்னாடி இருந்து ஒருவ‌ர் தார் குச்சி போட்டுகிட்டே இருந்தாதான் பொருளின் த‌ர‌த்தைப் ப‌ற்றி இவ‌ர்க‌ள் க‌வ‌லைப்ப‌டுகிறார்க‌ள்.

தெரியாத‌ விஷ்ய‌த்தை தெரிந்த‌தாக‌ சொல்லிக் கொள்வ‌தில் இவ‌ர்க‌ள் ம‌ன்ன‌ர்க‌ள். அதுவும் ஒரு வியாபார‌ த‌ந்திர‌மாக‌ நினைக்கிறார்க‌ள்.

அந்த‌ குண‌ம் பின்னாளில் த‌ங்க‌ளை பொய்ய‌ர்க‌ளாக்கும் என்ப‌தில் இவ‌ர்க‌ளுக்கு அச்ச‌மில்லை. கேட்டா ..இருக்க‌வே இருக்கு..க‌வுண்ட‌ர் ப‌தில் "வியாபார‌த்துல‌......."..

இந்த‌ குறைக‌ளுக்கு இவ‌ர்க‌ள் ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளையும் நாட்டில் இருக்கும் நிலைமையும் (ஊழ‌ல்,ம‌ற்ற‌து..ம‌ற்ற‌து..) சொல்வார்க‌ள்.
அதாலொழிய‌ இந்த‌ குறைக‌ளுக்கு தாங்க‌ளும் ஒரு கார‌ண‌ம் என்ப‌தை அற‌வே சொல்ல‌ மாட்டார்க‌ள்.

ஒரு சின்ன‌ உதார‌ண‌த்தை சொல்கிறேன்.
சமிபத்தில் ஒரு ஆய்வின் படி உல‌க‌ அள‌வில் பின்ன‌லாடை பொருள்க‌ளின் விற்ப‌னையில் நாம் வெறும் 2 முத‌ல் 3 ச‌த‌விக‌த்தைதான் உருவாக்குகிறோம்.

ந‌ம்மைவிட‌ சிற‌ப்பாக‌ இருக்கும் நாடுக‌ளைப் பார்த்தால்::

முத‌லிட‌த்தில் இருப்ப‌து..சொல்ல‌வே வேண்டாம். சைனாதான்.

இர‌ண்டாவ‌து மூன்றாவ‌து...நாடுக‌ளாக‌ பிலிப்பைன்ஸ், ம‌லேசியா போன்ற‌ மிக‌ச்சிறிய‌ நாடுக‌ள்கூட‌ ந‌ம்மைவிட‌ அதிக‌மாக‌ பின்ன‌லாடையில் ஏற்றும‌தியில்
சிற‌ந்து விள‌ங்குகின்ற‌ன‌.

நாம் இன்னும் திருப்பூரின் பெருமையையே பேசிக் கொண்டிருக்கிறோம்.

இந்த‌ திருப்பூரில்தான் நான் ஒரு பின்னலாடை மாதிரியை தயாரிக்க போராடிக் கொண்டிருக்கிறேன்.
கார‌ண‌ம் கேட்டா..
"ஆள் கிடைக்க‌ல‌ சார்".

இந்த திருப்பூரில் இத்த‌னை ஏற்றும‌தியாள‌ர்க‌ள் இருக்கும் இட‌த்தில் இதுவ‌ரை
ஒரு உல‌க‌த்த‌ர‌ வாய்ந்த‌ பின்னலாடை ப‌யிற்ச்சிக் க‌ல்லூரி வ‌ரார‌து ஏன்?

நான் சொன்ன‌ ப‌யிற்ச்சி..வ‌டிவ‌மைப்ப‌தில் ம‌ட்டும‌ல்ல‌..
சாமான்ய‌ தொழிலாள‌ர்க‌ளையும் ப‌யிர்பிக்கும் தொழில்கூட‌ம்.
அது இருந்தால் "ஆள் கிடைக்க‌ல‌ சார்" என்கிற‌ பேச்சே வ‌ராதே.

இதை ஏன் செய்ய‌வில்லை?

இப்போது ப‌யிர்ச்சி எப்ப‌டி தெரியுமா?

முத‌லில் 13 வ‌ய‌து பைய‌னோ பெண்ணோ ப‌டிப்பு வ‌ர‌வில்லை என்றால‌ அல்ல‌து குடும்ப‌ வ‌றுமையின் கார‌ண‌மாக‌ வேலைக்கு வ‌ருவார்.

"பிசிறு வெட்டுமா?"
"எண்ணி க‌ட்டுமா?"

"நூல் கொண்டு குடு"

"மெஷ்னை துடை"

இப்ப‌டி தொட‌ங்கி..கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தானே பார்த்து க‌ற்றுக் கொள்ப‌வ‌ர்க‌ள்தான் பின்னாடி "மிஷ்னிஷ்ட்" என்று "பெருமை"ய‌டைகிறார்க‌ள்.

இவர்களிடம் ஒரு தரக் கட்டுப்பாடு ஆர்வம் இல்லை.மேலும் தரகட்டுப்பாடு வழிமுறை இல்லை. We need a globaly accepted quality control procedure. But it is not there. What ever is there is a custom build version or individual version of quality control which is neither tranfered nor developed further till another major international buyer comes along to move forward.

அப்ப‌டி இருக்க‌ இவ‌ர்க‌ளின் செய‌ல்க‌ளில் எப்ப‌டி த‌ர‌க்க‌ட்டுபாட்டை அவ‌ர்க‌ள் உண‌ர்வார்க‌ள்.
தாங்க‌ள் எங்கு க‌ற்றோமோ அங்கிருக்கும் ந‌ல்ல‌து தீய‌து எல்லாம் சேர்ந்துதான்
இவ‌ர்க‌ளின் தொழிலில் தெரிய‌வ‌ரும்.

மேலும் ஒருவ‌ருக்கு தொழில் தெரியுமா அல்ல‌து தெரியாதா என்ப‌தே முத‌லாளி அந்த‌ தொழிலாளியை வேலை செய்ய‌ வைத்துதான் உண‌ர‌முடியும்?

இது என்ன‌ அவ‌ல‌ம்.

என் பல கேள்விகளில் இதுவும் ஒன்று.

பார்ப்போம்.

ஆனால் என் தேடுதல் தொடரும்

Silk Cotton Yarn