சமிபத்தில் யூ டியுபில் நம்ம புதிய தாரகை நம்பிக்கை நட்சத்திரம் வருங்கால முதலைமச்சர் அக்கா பேசறதை பார்த்தேன்.
ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க. (அப்ப மூடிட்டு போவேன்டிதானேங்கிறீங்களா...நியாயம்தான். அதைத்தான் செஞ்சேன்!)
தமிழை வாழ வைத்த "வாழும் வள்ளுவரின்" புதல்வி தமிழ் பேச இத்தன தடுமாறங்களா!!
அப்பத்தான் ஒண்ணு புரிஞ்சது. இந்த பத்திரிக்கைகள் நிருபரெல்லாம் தனக்கு வேண்டியங்க அல்லது ஆளும் வர்கத்தினரை எப்படியெல்லாம் ஏத்தி விடறாங்க பாருங்க..
இந்த அம்மாவின் தமிழ் புலமையை அஹா.ஒஹா...ன்னு பக்கம் பக்கமா எழுதி இவங்கதான் இனி கலைஞரின் தமிழ் வாரிசுன்னு வேற "சினியர்/ஜூனியர்" கிகட்னெல்லாம் பக்கம் பக்கமா வாரா வாரம் கற்பூரம் காட்டி மணியடிக்கிறாங்க.
ஆனா அந்தம்மா என்னான்னா ஒரு நாலு வார்த்தை பேச தடுமாறுது. ஒரு விஷ்யத்தை சொல்ல தொடர்பில்லாமல் சம்பந்தா சம்பந்தமில்லாம் யார் யாரையோ சாடி துண்டு துண்டு வாக்கியங்களால் கிளரி கொட்டுது. எந்த வாக்கியமும் முழுசா முடிக்கிறதில்லை. (சில சமயம் இவங்க அப்பாவே அப்படித்தான்=== இதுக்காக அடிக்க வராதீங்க!)
ஏன் இப்படி? இதற்கு காரணம் பயிற்ச்சி குறைவே என்று தோன்றுகிறது.
இந்த அம்மா அந்த உரையில் முன்னுக்கு பின்னா பல விஷ்யங்களை பேசுறாங்க.
தமிழ் மக்கள் மிகப் பெரிய முன்னேற்றம் அடைஞ்சிட்டாங்க அதனால்தான் தி.நகரில் நாம் கூட்டம் நடத்த முடிகிறதுன்னு சொல்றாங்க. தி.நகர் என்ன ஆப்கானிஸ்தான்ல இருக்கா.? இல்லை நியுயார்க்ல இருக்கா?
சரி. இவங்க என்ன சொல்ல வராங்க யாரை குத்தறாங்கன்னு தெரியுது?
ஆனா என்ன பண்ண இந்த அம்மா சுமார் 40 வருஷம் கழிச்சி வந்து இதெ சொல்றாங்களே.?
இதே தி.நகரில தான் திரு. பெரியாரும் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே பேசிட்டு போயிருக்காரே.? இப்ப என்ன புதுசா?
இதை சொல்லிட்டு சில வாக்கியங்களுக்கு பிறகு தமிழ் நாட்டு மக்கள் முன்னேற தடை இருக்குன்னு சொல்றாங்க.? கண் இருந்தும் குருடர்களாக இருக்காங்கன்னு வேற சொல்றாங்க.
இப்ப எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகனும். தமிழ்நாடு முன்னேறிச்சா..முன்னேறலயா?
வழக்கமா தேர்தலில் தோத்தாதானே இவங்க அப்பா இப்படி "ஐயோ தமிழ்கமே கண்ணிருந்தும் குருடனாக் இருக்கியே" என்று புலம்புவார்?
சரி அதை விடுங்க.
இந்த அம்மா மேடைப் பேச்சுக்கு இன்னும் நிறைய பயிற்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மறைந்த எழுத்து மேதை சுஜாதாவின் நண்பராக சில வருடங்கள் இருந்த காரணத்தினாலேயே இவர் தாம் பெரிய இலக்கிய கர்த்தா என்று நினைக்கத் தொடங்கிவிட்டார். சில கவிதைகளை (அத எத்தனை பேர் வாங்கினான்?) எழுதியதாலேயே இவங்க கம்பனுக்கு அடுத்த கவி என்று "ஜால்ரா" கிகடன் வேண்டுமானால் எழுதி இவங்கள உசுப்பேத்தி விடலாம்.
ஆனா..இவங்களுக்கே இவங்க தகுதி தெரிய வேணாம்?
இவங்க முத பேட்டியில் இவங்கிட்ட கொஞ்சம் கூச்சம் (அளவுக்கு மீறி புகழறாங்களேன்னு) இருந்தது. ஆனா நம்ம தமிழ் ஊடக வழக்கப்படி
இவங்களை சுத்தி இருக்கிறவங்க, போதாததுக்கு இவங்க அப்பா வேற, மற்றும் கிகடன் மாறி பத்திரிக்கைகள் ஊதி ஊதி கடைசில இவங்க "ஓஹோ..உண்மையாவே நாம கம்பனுக்கு வாரிசுதான் போல" அப்படின்னு நம்ப ஆரம்பிச்சுட்டாங்க.
ஒரு ஆள இந்தம்மா சைக்கோன்னு சொல்லுது. காரணம் அந்த எழுத்தாளர் திரு. எம்.ஜி.ஆரின் உச்சரிப்பை (துப்பாக்கி சம்பவத்திற்கு பிறகு)கிண்டல் செய்தாராம்? அது நாகரீகம் இல்லையாம்.
அடா..அடா....
என்னா திடிரென்று எம்.ஜி.ஆர் கரிசனம்.?
ஆனா அதே எம்.ஜி.ஆரை இவங்க அப்பா பேசாத கிண்டலா?
எம்.ஜி.ஆரின் பேச்சு, தொப்பி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது
தொழில், பூர்வீகம் என்று சகல விஷ்யங்களை எத்தனை அசிங்கமாக பேச முடியுமோ அத்தனை அசிங்கமாக பேசவும் செய்து பேசுபவர்களை ஊக்குவித்து ரசித்தவர்தானே இவரது அருமை "வாழும் வள்ளூவர்" அப்பா?ட்.
எம்.ஜிஆரின் பேச்சை கிண்டல் செய்தவர் "சைக்கோ" என்றால் இவரது அப்பாக்கு என்ன பேர் வைக்கலாம்.?
என்ன கயமை பாருங்கள்? இவர்தான் தமிழ்கத்தின் எதிர்காலம்!!
கிழிஞ்சது போங்க..
எந்த விஷ்யமும் விமர்சனத்திற்கு உட்பட்டதே.? விமர்சனத்திற்கு அப்பாற் பட்டது என்று எதுவும் கிடையாது.
இதை நான் சொல்லவில்லைங்க. இவங்களின் "ஞான சூரியனான" பெரியார் ஒத்துகிட்டதுதாங்க..
No comments:
Post a Comment