:- இதை கொஞ்சம் சுருக்கி தமிழ்நாட்டில்
இவர்களின் செயல்பாடுகள் என்று பார்க்க முயல்வோம்.
மேலை நாடுகளில் செத்து போன கிறிஸ்துவத்தை பெரும் பொருட்செலவில் தமிழகத்தில்
இந்தியாவில் பரப்ப மிக நுண்ணிய அளவில் திட்டமிடப்பட்டு செயல்பாடுகள் நடந்து
வருகின்றன.
ஆப்பிரிக்கா போன்ற ஒருங்கிணைக்கப் படாத கலாசாரத்தில் கிறிஸ்துவத்தை
நிறுவுவது இவர்களுக்கு வெகு எளிதாக இருந்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஏற்கனவே 5000 ஆண்டுகளாக
வளர்ந்து இந்தியரின் வாழ்வில் ஒவ்வொரு
செயல்பாட்டிலும் ஊறி நிலை கொண்டுள்ள வேற்றுமையில் ஒற்றுமை கண்ட ஒரு மதத்தை எதிர்
கொள்வது இவர்களுக்கு பெரும் சவால்.
இதுவரை தங்களை ஒரு புதிய வழியாக காட்டிக் கொண்டவர்கள் அப்படி செய்து பெரிய
அளவில் மாற்றங்களை உண்டாக்க முடியாமல் போவதாலோ அல்லது பொறுமையிழந்த காரணத்தாலோ
இன்று தங்களை வேறாக காட்டாமல் இங்கேயே உருவான ஆதி மதமாக காட்ட முனைகின்றனர்.
இதிளிருந்துதான் சைவமும், வைணமும், புத்தமும், ஜைனமும்
வளர்ந்ததாக ஒரு பக்கம் பரப்ப தொடங்கியிருக்கின்றனர்.
இதன் நீட்சியாக சரச்கள் கட்டிட கலை, இலக்கியம், இசை, வழிபாட்டு
முறை, கொடிமரம், தோரணம், தேரோட்டம், பஜனைகள், அமாவாசை
சிறப்பு பலி, ஏகாதசி பிரார்த்தனை என்று இந்த
அபத்தங்கள் செல்கிறது.
இதில் இந்து ஆன்மிகத்தின் ஒரு வெளிப்பாடாக இருந்த கர்நாடக இசையில் கையை
வைக்கின்றனர். இது தவறில்லை என்பவர்கள் ஷேக் சின்னமௌலான முதல்
சிம்போனியில் தேவாரம் பாடிய இளையராஜாவையும் காட்டுகின்றனர். இவைகள் ஒரு சின்ன விதிவிலக்குகள். எத்தனை
இந்துக்கள் தேவாரத்தை சிம்போனியில் பாடுகின்றனர்?
சின்ன மௌலானவுக்கு பிறகு எத்தனை இஸ்லாமியர்கள் கர்நாடக சங்கீதத்தை கையில்
எடுத்தார்கள் ? ஆக இதை ஒதுக்குவோம். அதே
நிலைதான் இன்று கிறஸ்துவ பாடலை காசுக்காக பாடும் அருணா சாய்ராமும், ஒ.ஸ். அருணும்,
நித்திய ஸ்ரீயும் அடைவார்கள். இப்படியும் செய்தார்கள் என்று ஒரு செய்தியாக நின்று
போவார்கள். அதை தாண்டி இவர்கள் கர்நாடக சங்கீதத்தின் மூலத்தையே மாற்றிவிடுவார்கள்
என்பதெலாம் காமெடி. காரணம் கர்நாடக
சங்கீதத்தை பாடுபவர்கள் மட்டும் வளர்ப்பதில்லை.
உட்கார்ந்து கேட்பவர்களின் ஆதரவும்தான் வளர்க்கிறது. இவர்களுக்கு முன்பே
இயேசுவை வைத்து கீர்த்தனைகளை காப்பி அடித்து cdi போட்ட பாகவதர்கள் உண்டு. அவர்கள்
இன்று எங்கே என்று தேடத்தான் வேண்டும். காரணம் இந்த இசையை கேட்பவர்களே
வளர்க்கிறார்கள். எனக்கு தெரிந்து இயேசுவை ஏற்றவர்களோ இஸ்லாத்தை தழுவியவர்களோ
கர்நாடக இசையை ரசித்து கேட்டதாக அறியவில்லை. எனவே அஞ்சற்க !
இப்படி இந்துக்களின் ஒவ்வொரு வாழ்வியல் முறைகளில் நுழைந்து ஏசுவை புகுத்த
முயலும் முட்டாள்களுக்கு ஒன்று தெரிவதில்லை. இந்துக்கள் என்பவர்கள் ஒரு தலை என்று
எப்போதும கிடையாது. இதன் பன்முகதன்மையே இதன் பலம் மற்றும் பலவீனம். இதை அழித்து
ஒருமுகப் படுத்த இதுவரை முயன்ற யாரும் ஜெயித்ததில்லை. ஆதி சங்கரர், ராமானுஜர் உட்பட......இத்தனைக்கும்
அவர்கள் உள்ளிருந்து கிளம்பியவர்கள்.
இந்த லட்சணத்தில் இந்த கிறிஸ்தவம் வெளியில் இருந்து வருகிறது.
இந்த அபிரகாமிய மதங்கள் தன் தனித்தன்மையை கொண்டிருக்கும் வரை இவர்களை
இந்துமதம் (அப்படி ஒரு பேர் வெள்ளைக்காரன்தான் கொடுத்தான்) என்கிற நெருப்பு அண்டாது.
ஆனால் எல்லாவற்றையும் காப்பி அடிக்கிறேன் என்று உள்ளே வந்தால் இந்துமதம்
(!) இவர்களை தனக்குள் வாங்கி கொண்டு பஸ்மம் ஆக்கிவிடும். இந்தியர்கள் மிகவும்
எளிமையானவர்கள். மிக எளிதாக இயேசுவையும் தங்களின் இன்னொரு கடவுளாக சுவிகரித்துக்
கொண்டு அவருக்கும் நாமம் இட்டு இன்னொரு ஆழ்வாராக இன்னொரு நாயன்மாராக கொண்டு
கற்பூரம் ஏற்றி கிடா வெட்டி கும்பிட்டு விட்டு போயிகிட்டே இருப்பார்கள். அப்புறம்
உங்க வேத ஆகமத்தையும் நீங்கள் தொலைத்து இயேசுவை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு
இனாம் என்று அறிவிக்க வேண்டியிருக்கும். போப்பு இன்னொரு சங்கராச்சாரியாக இங்கே
இடம் வாங்கி உட்கார வேண்டியதுதான்.
இப்படித்தான் புத்தத்தையும் ஜைனர்களையும் காலி பண்ணினார்கள்.
உங்களுக்கு உதாரணம் வேண்டும் என்றால் வேளாங்கண்ணிக்கு போங்கள். சூடம் ஏற்றி
தேங்காய் உடைத்து அதை அம்மனாக ஆக்கிவிட்டோம். இந்த மாதிரி ஒரு கடவுள் இருப்பதே
ரோமுக்கு தெரியாது.
இந்து சம்ப்ரதாயங்களையும், சடங்குகளையும் கலைகளையும், இன்ன பிறவற்றையும்
காப்பி அடிக்கும் மூடர்களுக்கு இன்னமும் வாதாபி
ஜீரானாபி கதை தெரிந்திருக்காது.
முடிந்தால் படித்து பாருங்கள். உள்ளிருந்து கொல்லும் முறை இங்கு நடக்காது.
பிரதர்....
நன்றி.
ரவிசுந்தரம்.
பி.கு.:- இது என் சிற்றறிவுக்கு எட்டிய நிலைப்பாடு. வல்லுனர்கள் கருத்துகள்
வரவேற்கப் படுகின்றன.
No comments:
Post a Comment