Friday, January 25, 2019

CULT - கருத்து குருடர்கள் உருவாக்கம்


எச்சரிக்கை:- இது கொள்கை விளக்க பதிவு!!
கம்யுனிஸ்ட்கள் அடிக்கடி சொல்வது என்னவென்றால் தனிமனிதர்களை விட கொள்கைகள்தான் முக்கியம் ! இதையே காப்பி அடித்து திமுக வும் சிறப்பாக புலம்பும்.

ஆனால் உண்மை என்ன? இவர்கள் கொள்கைகளை பின் பக்கம் சொருகி கொண்டு நிறத்தையும், தனிமனித உருவத்தையே மீண்டும் மீண்டும் முன்னிறுத்தி மூளை சலவை செய்வார்கள். ஒரு கட்டத்தில் எவனுக்கும் அடிப்படை கொள்கை என்னவென்று தெரியாது. வெறும் உருவத்தை காட்டியே மக்களை ஏமாற்றுவார்கள்.
உதாரணமாக இன்று இருக்கும் கம்மி போராளிகளிடம் சேகுவாரா, மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் படத்தை காட்டுங்கள். உடனே அடையாளம் சொல்வார்கள். ஆனால் யாரிடமாவது இவர்களின் வாழ்க்கை பற்றியோ கொள்கைகள் பற்றியோ கேளுங்கள். ஒரு பயலுக்கும் தெரியாது. அட முழு பெயர் கேளுங்கள் அதுவே தெரியாது. மார்க்ஸ் எந்த ஊர்காரன் எங்கு வாழ்ந்தான் என்று கூட தெரியாது. இது இங்கு மட்டுமல்ல, ரஷ்யாவிலேயே இந்த கதிதான். ஆனால் என்ன வித்தியாசம் என்றால் ரஷ்யாவில் இந்த படங்களை காட்டினால் காரி துப்புவான். செருப்பால அடிப்பான்.
இவனுங்கள காப்பி அடித்த நம்மூர் டுபாகூர் திக/திமுக அதே கம்மி களின் விளம்பர உத்தியை சரியாக பிடித்தனர். (உ.ம.படங்களை காண்க) அதே போல் முட்டாள் கூட்டத்தை வளர்த்தனர். பலன் இன்று ஒரு திமுக வின் கொள்கை என்னவென்று கேளுங்கள். ஒரு பயலுக்கும் தெரியாது. எல்லாம் ... ப்ப..பபப்பே தான். ஸ்டாலினே அந்த நிலைதான். என்ன செய்ய? இருந்தாத்தானே சொல்ல?
கழகங்களுக்கும் கம்மிகளுக்கும் ஒற்றுமை
ரெண்டு பேருக்கும் ஜனநாயகம் பிடிக்காது.
இருவருக்கும் வேற்றுமை
கழகம் ஒரு தனியார் குடும்ப கம்பெனி. - வட கொரியா போல !
கம்மிகள் ஒருகாலத்தில் வெளிநாட்டார் கம்பெனியாக இருந்து இப்போ சுருங்கி போன கூலிப்படை.!
விழித்துக் கொள்ளுங்கப்பா !!! இல்லைன்னா விடிவே கிடையாது !
ரவி சுந்தரம்
23/01/2019

No comments: