Thursday, January 10, 2019

தேசியத்தை சிதைத்தவர்கள்:-


இதை கொஞ்சம் ஆழமாக பார்ப்போம்.

தனிமனிதனை விட தேசம் பெரியது எனும் முக்கியமான நிலையை முதலில் உடைத்தது
நமது பெருமைக்குரிய இந்திரா காங்கிரஸ்.

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை இவர்களுடையது...நேரு காலம் வரை இந்தியாவின் சுதந்திரத்திற்காக தியாகம் மூத்த தலைவர்கள் பெயரை நாட்டின் முக்கியமான சாலைகளுக்கும் கூடங்களுக்கும் வைக்கும் முறை தொடங்கியது. இதில் தவறில்லை.. ஆனால் இந்திரா காலத்துக்கு பிறகு இந்த துதி பாடல் கும்பல் மெல்ல இந்த முறையை திருப்பி அரசின் எல்லா திட்டங்களுக்கும் தங்கள் தலைவி தலைவன் பெயரை சூட்டி ஏதோ இவர்கள் அப்பன் வீட்டு பணத்தில் இருந்து தருவதை போல் செய்ய தொடங்கினர். இது முற்றிலும் முழுமையாக் அடிமைகளின் செயல்பாடுகளே அன்றி வேறில்லை.  இதை பாமர மக்கள் ஆரம்பத்தில் இதை நம்பவே செய்தனர். அரசு வேறு. கட்சி வேறு என்பதை புதைக்க தொடங்கினர்.  கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதும் அரசின் திட்டங்களுக்கு பெயர் வைப்பதையும் குழப்பி இந்திரா அவாஸ் யோசனா, ராஜீவ் காந்தி அது.. ஜவஹர்லால் நேரு இது...என்று ஒரே குடும்ப பஜனை.


எல்லாவற்றிலும் இந்திராவை தொடரும் நம்ம கருணா நிதி இதையம் சரியாக பயன்படுத்தி கொண்டார். அங்காவது செத்து போனவர்களின் பெயர்களில் பஜனை நடந்தது. ஆனால் கருணா ஒரு படி மேலே சென்றார்.  அங்கே காந்தி நேரு என்றால் இங்கே பெரியார் மற்றும் அண்ணா பெயரால் பஜனை தொடங்கப்பட்டது. கருணாநிதிக்கு தெரியும் அது கடைசியில் தன் பெயரில் முடியும் என்று !!


ஆனால் தமிழன்தான் வித்தியாசமானவன் ஆயிற்றே ! தன் சிலையை தானே வெட்கமில்லாம திறந்து கொண்டதும் (டி.நகர்) இல்லாமல் தனது ஆத்ம சீடரான கருணாநிதிக்கும் சிலைக்கு வக்காலத்து வாங்கிய ஈ.வே.ராமசாமியை கொண்டாடும் பூமியாயிற்றே !


சீடர் தான் பதவியேற்றவுடன் தனது அரசு எடுத்த அனைத்து சமுக நல திட்டங்களுக்கும் தனது பெயரை சரியாக இணைத்து கொண்டார்.

உ.ம. கலைஞர் கண்ணொளி திட்டம்

சென்னை அசோக்நகர் விரிவாக்கத்திற்கு 1972ல் ஒரு அரசாணை மூலம் கலைஞர் கருணாநிதி நகர் என்று பெயரிட்டு மகிழ்ந்தார். தமிழகத்தில் முதன் முதலில் வந்த கே.கே.நகர் அதுவே..
நந்தனத்தில் தமிழக அரசால் கட்டப்பட்ட பல அடுக்குகள் கொண்ட அலுவலக கட்டடிடத்திற்கு கருணாநிதி மாளிகை என்று பெயர் சூட்டிக் கொண்டார். அது பெரிய பிரச்சனையாகி பின்னாளில் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அது பெரியார் மாளிகையானது.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் அரசின் எல்லா திட்டங்களுக்கும் இவர்களின் பெயரை வைத்துக் கொண்டதன் நீட்சி ரேஷன் கடை பையில் பொங்கலுக்கு வரும் பொருள்களின் பையில் இவரின் படம் என்று வந்தது..

இது எதில் வந்து முடிந்தது என்றால் மத்திய அரசின் பெரும் பங்களிப்பில் ஒவ்வொரு மாநிலத்தில் தொடங்கப்பட்ட அவரச உதவி ஆம்புலன்ஸ் சேவைக்கும் “கலைஞரின் 118 அவசர உதவி”  என்று ஜால்ராக்கள் அழைக்க இவர் மகிழ்ந்தார்.  

இவர்கள் இப்படி என்றால் அதிமுக சும்மா இருக்குமா?
எம்.ஜி. ஆர். உயிருடன் இருந்தவரை தன் பெயரில் எதுவும் நடத்தப் படுவதை விரும்பவில்லை. தடுத்தார். அரசின் உதவிகளை பெரும்பாலும் தமிழக அரசின் திட்டங்கள் என்றே அழைத்தார். அண்ணா அல்லது பெரியார் பெயரை மறைக்கிறார் என்று திமுக கூவியதை முடிந்த மட்டும் சமாளித்தார். முடியாத போது அண்ணா பெரியார் என்று பெயர்கள் சூட்டப் பட்டன.

ஆனால் ஜெயா வந்தவுடன் இவர் ஆம்பிளை கருணாநிதியாகி போனார். இன்னும் சொல்லப் போனால் ஒரு படி மேலே போய் எல்லாவற்றிலும் அம்மா.. மிக்சி,கம்ப்யுடர், கிரைண்டர் குடம் ஐயோ..ஐயோ  ..சகிக்க முடியவில்லை.  பொதுக்கழிப்பிடத்துக்கு மட்டும்தான் அம்மா பொதுக்கழிப்பிடம் என்று சொல்லவில்லை.  அத்தனை அசிங்கம்.

இப்படி தனிமனித துதி பாடலை வளர்த்தால் தேசியம் நாட்டுப் பற்று எப்படி நினைவுக்கு வரும்?
எல்லாவற்றுக்கும் இவர்கள் மற்றும் இவர்களின் தாய் தந்தையரின் பெயரை வைத்து மக்களிடம் கொண்டு சென்றால் மக்கள் அவர்களறியாது இவர்கள் ஏதோ சொந்த காசில் தங்களுக்கு உதவுகிறார்கள் என்றல்லாவா நினைப்பார்கள்?
இது அரசின் பணம், நமது வரிப்பணம் அதிலிருந்துதான் இவையெல்லாம் கிடைக்கிறது என்பதையே மறக்கடித்து விட்டனர்.

இது போல் வேறு எந்த மாநிலத்திலாவது நடந்ததுண்டா?  உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் கூட தன் பெயர் போட்டுக் கொண்ட தலைவர்கள் உண்டா?

கர்நாடகாவில் பொம்மை உயிர் காப்பிடு திட்டம் அல்லது ஹெக்டே பயிர் பாதுகாப்பு திட்டம் என்று ஏதாவது உண்டா?  ஆந்திராவில் என்.டி.ஆர். கிராம நல திட்டம் என்று ஏதாவது உண்டா? 

சிந்தியுங்கள் தமிழர்களே ! 
இந்தியரை கருத்தியலால் மடையர்களாக்கிய வெள்ளையரின் செய்கைக்கு சற்றும் குறையாதது  இந்த இந்திரா மற்றும் கருணாநிதி தொடங்கி வைத்த தனி மனித துதி பாடும் முறை. !

இதிலிருந்து மீண்டு வாருங்கள்.! 
அரசு வேறு...அரசியல் கட்சிகள் வேறு.
தனிமனிதர்களை விட நாடு பெரிது.
பெரிதும் பெரிது பேணுவோம்.

ரவி சுந்தரம்
#Indian_Nationalism

No comments: