Friday, November 10, 2006

காலம் ஓடுகின்றது.

நான் இந்த பக்கங்களில் எழுதி 20 நாட்களுக்கு மேல் ஆகிறது.

சோம்பேறிதனம்தான் காரணமா? இல்லை எனத் தோன்றுகிறது.

என்னுள் எழுந்த மனச்சோர்வும் ஒரு காரணமாகிறது.

பல விஷயங்களைப் பற்றி படிக்கிறேன். இதைப்பற்றி எழுதலாமா? இல்லை இன்னோன்றைப் பற்றி எழுதலாமா என்ற வினாக்களுக்கு விடை காண்பதற்குள் அடுத்த விஷயங்கள் வந்துவிடுகின்றன.

மாநகராட்சி தேர்தல் ஓரு கேலிகூத்து..
இதைப்பற்றி அனைவரும் எழுதிவிட்டனர். நான் எழுத ஒன்றும் மிச்சம் இல்லை.

இதன் காரணமாக நடக்கும் வழக்குகள் பற்றி வரும் செய்திகள் இன்னும் மோசமானதாக இருக்கிறது.

உதாரணமாக இத்தேர்தல் வன்முறை வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டதாக வந்த செய்திகள் நீதியின் மீது நமக்கிருக்கும் (கொஞ்சம் நஞ்சம்!!) நம்பிக்கையையும் தகர்பனவாக உள்ளது.

வழக்கு தொடர்ந்தவரையே குற்றம்சாட்டுவதைப்போல கேள்விகள் அமைந்தன என்று நோக்கர்கள் கூறுகின்றனர். இதப்பற்றி அதிகம் எழுதினால் நான் கூட நீதிமன்ற அவமதிப்புகுற்றம் சாட்டப்படலாம்.

இவ்வழக்கைப் பொறுத்தவரை என் கருத்தை மிகச்சரியாக பிரதிபலித்தவர் ஞாநி அவர்கள். அவர் இந்த வார விகடன் இதழில் எழுதியது மிகச்சரியானது. அனைவரும் படிக்கவேண்டியது.

இந்த தேர்தல் வன்முறை சம்பந்தமாக ஒரு ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
என்ன அதிசயம்...


இவர் மட்டும்தான் வன்முறையில் ஈடுபட்டாரா?
அப்படியென்றால் இந்த ஒருவரை அடக்க நம்ம காவல்துறையால் முடியவில்லையா?

இவர் நிச்சயம் அதிசயமனிதராகத்தான் இருப்பார்.
காரணம் இவர் (திரு.V.S.பாபு) ஒருவரே சென்னையில் பல இடங்களில் வன்முறையை நடத்தமுடிந்ததே...

இவரால் பல வேலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவரால் ஆளும் கட்சி ஆட்கள் கறுப்பு வெள்ளை யுனிபார்மில் வந்துள்ளனர். பல இடங்களில் பல வார்டுகளில் இவர் ஒருவர் கட்டளையினால் இப்படி யுனிபார்மில் வந்தவர்களை போலிஸ் கண்டுக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் தைரியமாக கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இதனால் பல வேட்பாளர்கள் ஜெயித்துள்ளனர்.
பேஷ்...பேஷ்.. கலைஞருக்கு ஒரு வேண்டுகோள். இப்பேர் பட்ட திறமைசாலிக்கு நீங்கள் மாவட்டச் செயலாளர் பதிவியல்லவா தரவேண்டும்.


தருவிர்கள் என நம்புகிறோம்...

வாழக ஜனநாயகம்.....


இந்த வார ஜோக்...

சென்னையில் பட்ட பகலில் பல ஆயிரம் மக்கள் நடமாடும் சாலையில்,சென்ரல் ரயில் நிலையம் எதிரில் காவல் துறையின் பாதுகாப்பு அறைக்குள் ஒரு மனிதன் வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளான்.

மறு நாள் காலை தமிழக்கத்தின் முதல்வர் விட்ட அறிக்கை என்ன?

"தமிழகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாக உள்ளது,"


வாழக ...தமிழகம்



...நன்றி..