Tuesday, June 19, 2007

தொடரும் பரிதாபம்.!!!


திராவிட முன்னேற்றக்கழகமா...அல்லது கருணாநிதி குடும்ப முன்னேற்றக் கழகமா..

என்ன கொடுமைய்யா இது..

கனிமொழியின் தற்போதய புது அவதாரத்தை தான் சொல்கிறேன்.

ஜனநாயகத்தின் பேரால் நடக்கும் ஜனநாயகத்தின் படுகொலை இது.

இவ்வளவு பெரிய கழகத்தில் கனிமொழி மட்டும் தான் ராஜ்ஜயசபா (மாநிலங்கள் அவை) உறுப்பினராவதற்கு தகுதியானவரா?
வேறு யாரும் இல்லையா?

காலம் காலமாக கட்சியில் உழைத்துக் கொண்டு இருப்பவர்களெல்லாம் பைத்தியகார்களா?

கலைஞ்ர் குடும்பத்தினர் மட்டும் நேற்று வந்து இன்று உறுப்பினராகி இன்றே M.P ஆகிவிடுகிறார்கள்.

எப்படி?

மாறன் குடும்ப்ம் செயத துரோகத்திற்கு கழகம் விலை கொடுதால் பரவாயில்லை. காரணம் தயாநிதியை தூக்கிப் பிடித்தற்க்கு தண்டனை எனக்கூறலாம். ஆனால் தமிழகம் ஏன் அனுபவிக்க வேண்டும்.
வரும்போதே இந்த அம்மாவின் குணம் தெளிவாகத்தெறிகிறது.
ஓரு உதாரணம்.

தொலைக்காட்சியில் நேரடியாக உலகமே கண்ட அராஜகத்தை அதே ஊடகத்தில் வந்து மறுத்தலிப்பதும் பின் கொஞ்ம் கூட லஜ்ஜையில்லாமல் நேராக பார்த்து நடந்த "அசம்பாவித்துக்கும்" (மிகவும் எளிதாக எடுத்துக் கொண்டுள்ளார்!!!) இவரது பாச அண்ணனுக்கும் சம்பந்தமில்லை என அடித்துக் கூறுவதும் இவரது குணத்தை காட்டுகிறது.
நடந்த அராஜகம் இவரது அண்ணனுக்காக நடக்காவிட்டால் ஜார்ஜ் புஷ்க்காக நடந்ததா?

குமுதம் இணையதள பேட்டியில் பேசும்போது நடந்த சமபங்களுக்கு, இழந்த உயிரகளுக்காக வார்த்தையில் கூட வருத்தத்தை தெரிவிக்க மறுக்கிறார்.
தாங்கள் காரணமில்லை என்பதை கூறுவதிலேயே முனைப்பாக இருந்தார்.

சன் டிவியில் அழகிரியைப்பற்றி சொன்ன செய்திகள் தன் தந்தைக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது என திரும்ப திரும்ப உருகும் கனிமொழி மதுரையில் உயிரிழந்தோர் குடும்பத்தைப் பற்றி கடுகளவும் வருந்தவில்லை.

கேட்டால் தான் ஏற்கனவே அதைப்பற்றி பலதடவை சொல்லியாயிற்று என்கிறார். ஏன் கருணாநிதியின் மன உளைச்சலலைப் பற்றி திரும்ப திரும்ப கூறவில்லையா?

வினோதமான சாமாளிப்புகள்.
பரவாயில்லை......ராஜிவ்காந்தி கொலைக்கே "அது ஒரு துன்ப இயல் - வரலாற்று பிழை" என்று கூறுபவர்களை ஆதரிப்பவர்தானே.?

அவரது பேச்சிலோ சொல்லிலோ கொஞ்ம்கூட கருணையும் இல்லை..கனிவும் இல்லை..

என்னுடைய அனுபத்தில் சொல்கிறேன். இவர் மற்ற அனைவரை விட மோசமான சர்வாதிகார நபராக இருப்பார்.

நல்ல வேளை இன்னும் தமிழகத்தில் தேர்தல் என்று ஒன்று நடத்தப்படுகிறது. இல்லையென்றால் இவர்களெல்லாம் நியமனத்திலேயே மந்திரியாக முதல்வராக வந்து நம்மை படாதபாடு படுத்துவார்கள்.
இதுபோல் எல்லா கட்சிகளும் தொடர்வதால் ஜனநாயகம் முற்றிலிம் அழியும் நாள் அதிக தூரத்தில்லை.
பாவம்..ஜனநாயகம்..பரிதாபப்படுகிறோம்..