Thursday, January 10, 2019

இரவு பயணம்


:
இரவில் வாகனங்களில் நெடுத்தொலைவு பயணம் செய்பவர்கள் தயவு செய்து கீழ்கண்ட எச்சரிக்கைகளை கையாளுங்கள்.

1.       நீங்கள் எப்பேர்பட்ட “அப்படக்கராக” இருந்தாலும் குடித்து விட்டு வண்டியை ஒட்டாதீர்கள்..

2.       பகலில் சரியாக ஓய்வெடுக்காத ஓட்டுனர் இரவில் வாகனம் ஓட்டுவது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.

3.       இரவில் பயணம் செய்பவர்கள் மட்டுமல்லாது பகலிலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து வாகனம் ஒட்டாதீர்கள்.

இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி ஒரு 15 நிமிடமாவது ஓய்வெடுத்து தேநீர் அருந்தி ஆசுவாச படுத்தி கொண்டு பின் பயணத்தை தொடருங்கள். இது பின்னிரவில் மிகவும் அவசியம்.

4.       5 மணி நேர பயணத்திற்கு பிறகு கட்டாயம் 1 மணி நேரமாவது ஓட்டுனர் கண்ணை மூடி ஓய்வெடுப்பது அவசியம். அப்படி இல்லையேல் மாற்று ஓட்டுனர் மிகவும் அவசியம்.

5.       ஏ.சி வாகனத்தில் குளிர்ந்த காற்று முகத்தில் படுவதை போல் வைத்து கொண்டு ஓட்டுவது உறக்கத்தை உடன் வரவழைக்கும்.

6.       ஓட்டுனருடன் உடன் யாராவது பேசி கொண்டு வருவது நலம்.

7.       தொடர்ந்து எதிரில் வரும் வாகனத்தில் விளக்கொளியில் ஓட்டுனர் கண்கள் மிக எளிதில் களைத்து போகும்.

8.       வயிறு முட்ட உணவருந்தி விட்டு வண்டியை எடுப்பதும் உறக்கத்தை வரவழைக்கும். அரை வயிறு நல்லது. நிறைய நீர் தொடர்ந்து அருந்தி கொண்டிருத்தல் மிக முக்கியம்.

9.       ஒய்வு தேவை என்று உடல் உணர்த்தும் போது வெட்கப்படாமல் அருகில் வரும் பாதுகாப்பான நிறுத்தத்தில் நிறுத்தி ஓய்வெடுப்பது கோழைத்தனமல்ல. தொடர்ந்து ஒட்டி விபத்தில் சிக்குவது வீரம் அல்ல.

இந்த எச்சரிக்கைகள் மூலம் நீங்கள் உங்கள் உயிரை மட்டும் காத்துக் கொள்வதில்லை. உங்களை நம்பி வண்டியில் ஏறும் பயணிகளின் உயிரையும் காக்கிறீர்கள். வாடகை கார் எடுக்கும் பயணிகளும் தங்கள் ஓட்டுனர் எந்த நிலையில் இருக்கின்றனர். அவர் சரியாக ஒய்வு எடுத்தாரா என்று கவனிப்பதும் அவசியம்.

இதையெல்லாம் நான் சொல்வதன் காரணம் இந்த பதிவை பார்க்கும் யாராவது சிலர் இந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான்.
கடந்த 7ம் தேதி இரவு 11.30 மணியளவில் உளுந்தூர் பேட்டை அருகில் நிறுத்த கூடாத இடத்தில் நிறுத்தப் பட்டிருந்த லாரியில் மோதி என் மாமி மற்றும் அவரது குடும்பத்தார் 4 பேர் சம்பவ இடத்திலேயே அகால மரணமடைந்தனர் என்பதே ஆகும். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்தவ மனையில் அனுமதி.  இந்த செய்தியை நீங்கள் தொலைகாட்சியில் ஒரு செய்தியாக கண்டிருக்கலாம்.
வாகனத்தை ஒட்டியவர வயது வெறும் 22 மட்டும்தான்.
என்ன கொடுமை?  இவர் வண்டி ஓட்டும் போது உறங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எங்கள் மாமியுடன் சேர்ந்து 5 உயிர்கள் எங்கள் குடும்பத்தில் பறிக்கப் பட்டு விட்டது.
இந்த 6 உயிரழப்பை தவிர்த்திருக்கலாம். இதை விதி என்று புறம்தள்ளி செல்வது பகுத்தறிவாகாது. நெருப்பில் தலை கொடுத்தால் இறைவனும் உங்கள் காக்க வர மாட்டான்.

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக ஒன்னரை லட்சம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். இது உலகில் மற்றனாடுகளை விட மிக அதிகம்.

இந்தியாவில் சாலை விபத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழகம். வருடத்திற்கு சுமார் 20000 பேருக்கு மேல் தமிழக சாலைகளில் கவனக்குறைவால் கொல்லப்படுகின்றனர். இது முற்றிலும் தவரிக்கப்பட வேண்டிய மரணங்களே... ஒவ்வொரு ஓட்டுனரின் அலட்சியத்தாலும் அவரது உயிர் மட்டுமன்றி மற்றவர்கள் உயிரும் தொலைகிறது. சுற்றத்தாரின் வாழ்வு சிதறுகிறது.

அம்பத்தூர் புதூர் – பானு நகரை சேர்ந்த எங்கள் மகத்தான பெண்மணியான மாமியின் மற்றும் உறவினரின் மரணம் எங்கள் குடும்பத்திற்கு பேரிடியே...
கவனமாக இருங்கள் உறவுகளே...
கனத்த மனத்துடன்....
Ravi Sundaram
10/10/2017


No comments: