Friday, December 23, 2016

கசண்டுகள்

அதி "மேல்தாவி"கள் நிறைந்தது நம் தமிழ்நாடு.

எல்லாவற்றையும் இவர்கள் ஜாதியின் கண்ணாடி கொண்டே  பார்ப்பார்கள்.
அதை தாண்டி இவர்களுக்கு சிந்திக்கவே தெரியாது.
ஜெயா வின் மரணமும், சோ வின் மரணமும் இவர்களுக்கு ஒரு "பார்பனிய ஆளுமைகளின்"வீழ்ச்சியாகவே தெரிகிறது. அதாலொழிய பிற்படுத்தப் பட்டோரின் தலைவரான ஜகஜீவன்ராம் முதல்வராக வர முயன்ற சமயத்தில்  அவருக்காக பெரிதும் உழைத்தவர் சோ என்பதையோ  , தான் மிகவும் மதித்த அத்வானியையே நிராகரித்து பிராமணரல்லாத மோடியை ஆதரித்தவர் சோ என்பதையோ வசதியாக  மறந்து விடுவார்கள்.

அடுத்து ஜெயா...சாதி கடந்து மதம் கடந்து இவர் கட்சியை எடுத்து சென்றார். அவரது ஊழல் வாதியா நேர்மையானவரா என்பதல்ல இங்கு கேள்வி. அவர்
ஜாதியை கடந்து செயல்பட்டாரா இல்லையா என்பதே கேள்வி.
இவரையும் இந்த கூட்டம் ஒரு ஜாதியின் டப்பிக்குள்
அடைக்க முயலுகிறது. இந்த இருவருமே என்றுமே தாங்கள் எந்த ஜாதியில்  பிறந்தோம் என்று சொல்ல வெட்கப்பட்டதில்லை.அப்படி யாரும் வெட்கப்பட தேவையில்லை என்றே நம்பினார்கள்.  பிறப்பு என்றுமே உன் கையில் இல்லை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
எந்த குள்ளநரித்தனத்திலாவது ஜெயாவை வீழ்த்தி விட வேண்டும் என்று ஆசைப்பட்ட சிலர் முதலில் அவரை நடிகை என்று இழிவு படுத்தினர்.. முடியவில்லை.      பின் வைப்பாட்டி என்று வசை பாடினர். அதற்கும் அசரவில்லை.  கடைசியாக எல்லோரையும் வீழ்த்த அவர்கள் எப்போதும் கை கொள்ளும் அஸ்திரமான ஜாதியை சொல்லி வசை பாட தொடங்கினர். பாப்பாத்தி  என்று கேலி செய்து கூவினர். சட்ட சபையிலேயே வெகுண்ட எழுந்த ஜெயா..."ஆமாம்.  நான் பாப்பாத்திதான். பாப்பாத்திதான். பாப்பாத்திதான்." மூன்று முறை கூவி அதிரடித்தார். மேலும் பாப்பாத்தி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று சொல்லி கேலி செய்தவர்களை வாயடைக்க செய்தார். அதன் பின்னரே அவர்கள் ஜெயாவை அப்படி அழைக்க பயந்தார்கள்.

இப்படி ஜாதிபிரிவின் பின்னே ஒளிந்து கொண்டு அரசியல் செய்பவர்கள் யார் என்று சொல்லவும் வேண்டுமோ ???

இன்று அதே முரசொலி கூட்டத்தின் கே.என்.சிவராமன் என்பவர் தனது கருத்துக்கும் தான் வேலை செய்யும் இடத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்லிக் கொண்டே  அதே வஞ்சகத்துடன் இந்த ஜாதிய அரசியலை முன்னெடுக்கிறார்.

ஆனால் ஒன்று நிச்சயம்.
சாமான்ய மக்கள் இவர்களை சற்றும் கண்டு கொல்லாமல் கடந்து செல்கின்றனர்
http://vaettoli.blogspot.co.uk/2016/04/blog-post_39.html

No comments: